Italian Trulli

அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்கள் .

 


அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்கள் .


அல்லாஹ்வுக்காக நேசிப்பார்


தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்தப்பட்ட சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.


ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற திருக்கலிமாவின் கீழ் இஸ்லாம் மனிதர்களை சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.


விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)


ஈமானிய சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது.


இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் 'அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்."


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவை: 1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது, 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து


அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உள்ளத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.


இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப் பற்றி நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: 1.நீதமான அரசன் 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர் 3. இதயத்தால் மஸ்ஜிதுடன் இணைந்திருக்கும் மனிதர் 4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே ஒன்று சேர்ந்திருந்தார்கள். அல்லாஹ்வுக்காகவே பிரிந்தார்கள் 5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள்; அவர் "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்" என்று கூறி (மறுத்து) விட்டார் 6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர் 7 தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர்"


(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


அல்லாஹவின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக தேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய கௌரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.


அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: ''என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன்."


(ஸஹீஹ் முஸ்லிம்)


துன்பமும், துயரமும், சிரமங்களும் நிறைந்த கடுமையான நாளில் அல்லாஹ்வுக்காகவே நேசித்தவர்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு மகத்தானது!


'அல்லாஹ்வுக்காகவே நேசித்தல்' என்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட நட்பாகும். உலக ஆசாபாசங்கள், பலன்களை எதிர்பார்ப்பது அல்லது துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற வேறு நோக்கங்கள் இருக்கக் கூடாது. ஆனால் பரிசுத்த ஆன்மாவும், தூய இதயமும் கொண்டு அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னால் உலக இன்பங்களை அற்பமாகக் கருதும் இயல்புடையவர்களுக்குத்தான் இது சாத்தியமாகும். இத்தகையோருக்கு ஈருலகில் அல்லாஹ் அந்தஸ்தையும் அருட்கொடைகளையும் வாரி வழங்குவது தூரமான விஷயமல்ல.


முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்)


அவர் கூற நான் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான்: "என்னுடைய


மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு


ஒளியினாலான மேடைகள் உண்டு. அதில் நபிமார்களும்


ஷுஹதாக்களும் அவரைக் கண்டு ஆசை கொள்வார்கள்." 


(ஸுன்னுத் திர்மிதி)


அல்லாஹ்வுக்காக நேசிப்பதால் முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்


அல்லாஹ்வுக்காக நேசிப்பது முஸ்லிமை சுவனத்தில் நுழைய வைக்கும் ஈமானின் நிபந்தனைகளில் மிக முக்கியமானதென நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: "யாருடைய கைவசம் என்னுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா? அதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். (அந்த விஷயம்) உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்" என்று கூறினார்கள்.


(ஸஹீஹ் முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் பின்வரும் விஷயத்தை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதாவது உள்ளத்தின் குரோதங்களை அழித்து, போட்டி, பொறாமை என்ற அழுக்குகளை தூய்மைப்படுத்தும் ஒரே சாதனம் உன்னதமான சகோதரத்துவம்தான். இதுதான் முஸ்லிம்களின் வாழ்க்கையை சூழ்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சமுதாய வாழ்க்கை பரஸ்பர அன்பு, ஒற்றுமை என்ற உறுதியான அடித்தளத்தின் மீது அமையும். இன்னும் இதன் மூலமே சமுதாய கட்டிடம் சூழ்ச்சி. வஞ்சம், பொறாமை, அநீதம் போன்ற விரிசல்களிலிருந்து பாதுகாப்பு பெறும். இதை முன்னிட்டு சகோதரர்களுக்கிடையே ஸலாமைப் பரப்புமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள். அதன்மூலம் இதயங்கள் விரிவடைந்து நன்மைகள் பொங்கி வழியும்.


நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை தனது தோழர்களிடம் வலியுறுத்தி அவர்களது இதயங்களில் சகோதரத்துவத்தின் நேச வித்துகளை விதைத்தார்கள். அதைப் பராமரித்து மென்மேலும் வளர்க்க வேண்டுமெனவும் உபதேசித்தாசமிக்க அப்பாதாதுதான் இஸ்லாம் முஸ்லிம்களிடம் விரும்பும் பிரகாசமிக்க சகோதரத்துவக் கனிகளை  சுவைக்க முடியும்.


இதுவே சுருக்கமான விளக்கம் . நீண்ட விளக்கம் நிச்சயமாக படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டும். ஆகையால் ...

கருத்துகள்