அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
''நமக்கென்ன ஆச்சு !'' லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
''நமக்கென்ன ஆச்சு !'' லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 01, 2020

யார் இந்த தப்லிக் ஜமாஅத் ?


அல்லாஹ்வின் திருப்பெயரால்..


தப்லீக் ஜமாஅத் (Tablighi Jamaat, இறை நம்பிக்கையைப் பரப்புவதற்கான கழகம்) (உருது: تبلیغی جماعت, அரபு மொழி: جماعة التبليغ என்பது 1926 ஆம் ஆண்டு முகம்மது இல்யாஸ் அல்-கந்த்லவி என்பவரால் இந்தியாவில் புணர்மனம் செய்யப்பட்ட உழைப்பாகும். இந்த உழைப்பு தேவ பந்தி இயக்கத்தின் ஒரு கிளையாக உருவானது. இந்த உழைப்பு உலகளாவிய தலைமையிடம் இந்தியாவின் தலைநகரான டெல்லி அருகில் மேற்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள நிஜாமுதீன் மர்கஸ் மசூதி ஆகும்.


மெல்ல மெல்ல வளர்ந்த இந்த உழைப்பு இன்று 150 நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஜமாஅத் இந்தியா, பாகித்தான், வங்காளம் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டுள்ளது.

புதன், ஜனவரி 29, 2020

சாத்தியம் இல்லாத குடியுரிமை திருத்த சட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
நாங்கள் நீதி கிடைக்கும் வரை நாங்கள் நகரமாட்டோம்! ": இந்தியப் பிரதமர் மோடியை எதிர்கொண்டு, ஷாஹீன் பாகின் எதிர்ப்புப் போராளிகள்எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை , நாங்கள் இதைவிட்டு நகரமாட்டோம் என்று உறுதியாக  இருக்கும் பெண்களுக்கு வாழ்த்துகள்! அல்லாஹ்  மிக விரைவில்  உதவி செய்வான் . ஒரு அமைதியான சூழ்நிலை நிலவும் இன்ஷாஅல்லாஹ் ..

செவ்வாய், நவம்பர் 01, 2016

தஃவத் தப்லீஃக் - தஃவத்தும், அதன் சிறப்புகளும்






 அல்லாஹுதஆலாவுடைய கட்டளைகளுக்கு உட்பட்டு நடப்பவருக்கும், அல்லாஹுதஆலாவுடைய கட்டளைகளை மீறுபவருக்கும் உதாரணம், கப்பலில் பயணம் செய்யும் மக்களைப் போன்று! சீட்டுக்குலுக்கிப் போட்டு பயணிகளின் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, சிலர் கப்பலின் மேல் தளத்திலும், சிலர் கப்பலின் கீழ் தளத்திலும் உறுதி செய்யப்பட்டது. கீழ் தளத்திலுள்ளோருக்குத் தண்ணீர் தேவைப்பட்டால், மேல் தளத்துக்கு வந்து, அங்குள்ளோரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நாம் நமது (கீழ்ப்) பகுதியில் துவாரம் போட்டுக் கொண்டால் (மேலே போவதற்குப் பதிலாக அந்தத் துவாரம் வழியாக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்), மேலும் மேள்தளத்தில் உள்ளோருக்குச் சிரமம் கொடுக்காமல் இருக்கலாம், (இப்படிச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!) என்று கீழ் தளத்தினர் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர். மேள்தளத்திலுள்ளவர்கள், கீழ் தளத்திலுள்ளவர்களை அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப விட்டுவிட்டால், (அவர்கள் துவாரம் போட்டுக் கொண்டால்) கப்பல் மூழ்கி எல்லோருமே அழிந்து போவார்கள். அவர்களை (கப்பலில் துவாரம் போடவிடாமல் தடுத்துவிட்டால்) அவர்களும், மற்ற பயணிகளும் காப்பாற்றப்படுவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

வியாழன், பிப்ரவரி 25, 2016

செயல்படாமல் அழைப்பு விடுத்தல் ...

செயல்படாமல் அழைப்பு விடுத்தல் ...
அல்லாஹ்வின்  திருபெயரால் .....
அண்ணல் நபி[ஸல்] அவர்கள் நவின்றார்கள் 
''ஒரு மனிதன் இறுதித் தீர்ப்பு நாளில் கொண்டுவரப்பட்டு  நரக நெருப்பில் தூக்கியெரியப்படுவான் . அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும்! பிறகு அக்குடலை எடுத்துக்கொண்டு அவன், கழுதை தன்  செக்கில் சுற்றுவதைப்போல் நரகத்தைச் சுற்றுவான். இதைப் பார்த்து மற்ற நரகவாசிகள் அவனிடம் ஒன்றுகூடி,  ''உனக்கு இந்த நிலைமை ஏன்  ஏற்பட்டது? நீ நன்மைகள் புரியும்படி உலகில் எங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கவில்லையா? தீமைகளை விட்டு எங்களை தடுத்துக் கொண்டு இருக்கவில்லையா? [இப்படிப்பட்ட நற்செயலைப் புரிந்தும்கூட நீ எப்படி இங்கே வந்து விட்டாய்?] '' என்று கேட்பார்கள் . அந்த மனிதன் ,  ''நான் உங்களுக்கு நன்மை புரியும்படி போதித்துக் கொண்டு இருந்தேன்! ஆனால் நானோ அதன் அருகில் கூடச் செல்லாமலிருந்தேன்,, தீமைகளை விட்டு உங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன்! ஆனால் நானோ அந்தத் தீமைகளைப் புரிந்து கொண்டிருந்தேன் '' என்று பதிலளிப்பான். [புகாரி, முஸ்லிம்]
அறிவிப்பாளர் .. உஸாமா  பின் ஜைத் [ரலி]

வெள்ளி, ஜனவரி 22, 2016

''நமக்கென்ன ஆச்சு !''

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன் ...
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவனாக ! அல்லாஹ்  நம்மை முஸ்லிமாக ஆக்கிவைத்தானே! அல்ஹம்துலில்லாஹ்! முஸ்லிமாக இருப்பதற்கு நாம் பெருமிதம்  கொள்ள வேண்டும். நாளை மறுமைநாளில் காஃபிர்கள் கூறுவார்கள் '' நாங்கள் முஸ்லிமாக இருந்திருக்க கூடாதா என்று''. அல்லாஹ்  கூறுகின்றான் தன்னுடைய திருமறையில் ..