அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 19, 2016

ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகை





நயவஞ்சகரின் அடையாளம்

சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (657)

வியாழன், நவம்பர் 03, 2016

நான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ...!

நான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ...! என்று [மறுமையில் ] புலம்பு மனிதர்களில் ''நாம் இருக்கக் கூடாது என்பதற்காக ... ஒரு நினைவுவூட்டுதல் .....!

எல்லோரும் தொழுக வேண்டும்மென்றுதான் ஆசைப்படுவார்கள் , ஆனால், அவர்களை தொழவிடாமல் தடுப்பது  எது...? உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன் ...!!!

நிச்சயமாக தொழுகை, மானக்கேடானதை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் [தொழுபவரைத் ] தடுக்கும்.
[அல் அன் கபூத் 45]

ஒருவர் தொழுகிறார் என்றால் , அவரை இந்த தொழுகை மானக்கேடானதை விட்டும் வெறுக்கக்கூடிய காரியங்களை விட்டும் தடுக்கவில்லை என்றால் , நிச்சயமாக அவரின் தொழுகை சரியில்லை என்று பொருள். அல்லாஹ் அவரின் தொழுகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
நிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது - இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[அல் பகரா 277]

வியாழன், மே 05, 2016

நாம் உறுதி எடுப்போம் ...!

நாம் உறுதி எடுப்போம் ...!
அல்லாஹ்வின் திருபெயரால்..
தொழுகையைத் தவிர்த்து மற்ற எல்லா கடமைகளும் இந்த பூமியில் தான் அல்லாஹ்  கடமையாக்கினான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை! தொழுகை மட்டும் அல்லாஹூதஆலா  அண்ணல் நபியை வானுலகம் அழைத்து , அந்த தொழுகையை கடமையாக்கினான். இந்த தொழுகையின் சிறப்பு, அதன் மகிமை சிலரை தவிர மற்றவர்கள் அறியாமல் இருக்கலாம். அப்படி அறிந்தால் அவர்கள் ஒருபோதும் தொழாமல் இருக்கமாட்டார்கள்.

ரமலான் மாதம் நெருங்கிகிறது ... அந்த மாதத்தில் பள்ளிகள் முதல் பத்து நாட்களில் நிரம்பி வழியும் . பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும் . இந்த நிலை ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் நடக்கின்ற ஒரு விடயம்தான்!

புதன், மார்ச் 09, 2016

தொழுகை தானே அப்பறம் பார்ப்போம்...

தொழுகை தானே அப்பறம் பார்ப்போம்...
அல்லாஹ்வின் திருபெயரால் ...
தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் தடுக்கும் இது அல்லாஹ்வின் திருவசனம் !
அல்லாஹ்வின் திருத்தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் நபிமொழி .. நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் எழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ்  தன்  நிழலில் இடம் கொடுப்பான். அதில் ஒன்றுதான்  எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன், அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பவன்.

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

வாலிபர்களே ! திருமணம் செய்ய ஆசையா ? திருமணம் செய்வதற்கு முன் இதையும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள் !

வாலிபர்களே ! திருமணம் செய்ய ஆசையா ? திருமணம் செய்வதற்கு முன் இதையும் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள் !
ஒரு முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.

சனி, செப்டம்பர் 05, 2015

பேஸ்புக்கு போராளியே ! கொஞ்சம் நில்லு! உனது ஒவ்வொரு லைக் உம் ஷேர் உம் tag உம் இன்னும் என்னவெல்லாம் செய்கிறாய் ?

பேஸ்புக்கு  போராளியே ! கொஞ்சம் நில்லு! உனது ஒவ்வொரு லைக் உம் ஷேர் உம் tag உம் இன்னும் என்னவெல்லாம் செய்கிறாய் ?
பேஸ் புக் போராளியே! கொஞ்சம் நில்லு!

உனது ஒவ்வொரு likeஉம் shareஉம் tagஉம் இன்னும் என்னவெல்லாம் செய்கிறாய். அவை எல்லாம் அல்லாஹ் உனக்கு தந்திருக்கும் அமானிதமே! அவை ஒவ்வொன்றுக்கும் நீ பொறுப்புச்சொல்ல வேண்டும்.

புதன், ஆகஸ்ட் 05, 2015

தொழுகையின் சிறப்பும் அதை விட்டால் ஏற்படும் இறைவனின் தண்டனையும் !

தொழுகையின் சிறப்பும் அதை விட்டால் ஏற்படும் இறைவனின் தண்டனையும் !
(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31)

“என்னைத் தொழக் கண்டவாரே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்.

சனி, நவம்பர் 29, 2014

எச்சரிக்கை.. இப்போதாவது விழித்துக்கொள்வோம்

எச்ச‌ரிக்கை:இந்த‌க் க‌ட்டுரை ப‌டிப்ப‌த‌ற்கு, ப‌கிர்ந்துகொள்வ‌த‌ற்கு ம‌ட்டும‌ல்ல‌. அம‌ல் ப‌டுத்துடுவ‌த‌ற்கு. இன்றே... இப்போதே...

ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளின் இஸ்லாத்தை வேறோடு அழிக்க‌ அத‌ன் எதிரிக‌ள் முனைந்த போதெல்லாம் ஸ‌ஹாபாக்கள் த‌ங்க‌ள‌து வேர்வையினாலும் இர‌த்த‌த்தினாலும் அளப்பறிய தியாகத்தினாலும் அத‌னை காத்து இன்று ந‌ம் வ‌ரை அதைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

ஞாயிறு, நவம்பர் 09, 2014

இன்றைய முஸ்லிம் இளைஞ்சர்களின் முன்மாதரிகள் யார்?

உண்மையில் இளமைப்பருவம் மனிதவாழ்வில் மிகவும் பெறுமதிவாய்ந்த பருவம். இந்த பருவத்தில் செய்யப்படும் அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரும் வெகுமதிகள் உண்டு.

மறுமையில் அல்லாஹ்வினது 4 கேள்விகளுக்கு விடையளிக்காமல் ஒருவருடைய பாதங்கள் நகராது. அவற்றில் மிகமுக்கியமான இருகேள்விகள்தான் ஆயுளை எவ்வாறு கழித்தாய் என்றும் இளமையை எவ்வாறு கழித்தாய் என்றும் கேட்கப்படும் கேள்விகள் என்பதனை ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் உணர கடமைப்பட்டுள்ளார்கள்.

திங்கள், அக்டோபர் 27, 2014

ஓ! என் இளைய சமுதாயமே!

ஓ! என் இளைய சமுதாயமே!




இன்றய நவநாகரீக அறிவார்ந்த உலகில், நாம் படிக்கும் பத்திரிக்கை செய்திகளானாலும், பரிமாறிக் கொள்ளப்படும் மின்னஞ்சல்களாக இருந்தாலும் பரவலாக நாம் கண்டு பதைக்கக் கூடிய ஒரு செய்தி தான் காதல் கல்யாணங்கள். குறிப்பாக நமது சமுதாய இளம் தலைமுறையினரின் நடவடிக்கைகள்.

சில வருடங்களுக்கு முன்பு வரை, இலைமறை காயாக இருந்த பருவ வயது காதல், சினிமா, தொலைக்காட்சித் தொடர் போன்ற சமூக சீர்கேடுகளால் இன்று மலிவு சரக்காகி விட்டது. கல்லூரிக் காதல் கரை கடந்து பள்ளிக்காதலாகிப் போனதற்கு பத்திரிக்கை செய்திகளே சாட்சி.

உயர் கல்வியில், வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது. எனவே இயல்பாக அம்மக்களிடம் கல்வி ஆர்வம் குறைந்துள்ளது என்ற குமுறலோடு தங்களுக்கான உரிமைகோரி சமுதாயத் தலைவர்கள் போராடியதை இன்றய இளைய சமுதாயம் எந்த வகையில் பயன்படுத்துகின்றது என்பதனை எண்ணும் போது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

புதன், ஆகஸ்ட் 27, 2014

தொழுகையை விட்ட என் தோழனே....!

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக! ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக!

தொழுகையை விட்ட என் சகோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ? அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ? நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்துவிட்டானோ? உனது மனச் சாட்சியை சாகடித்துவிட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ?

செவ்வாய், ஜூலை 15, 2014

அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.  வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.
ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?
 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)  அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது.  ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: “அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)
 ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

வியாழன், மார்ச் 13, 2014

தொழுகையை விட்டவன்

 
தொழுகை இல்லாமல் காலம் கடத்தும் அன்பு இஸ்லாமிய மக்கள்களே!
    புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

    தொழுகையை விட்ட என் சகோதரனே ! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.