அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 26, 2020

மகிழ்ச்சி

ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும். தன்னுடைய இளம்பருவத்தை வறுமையில் கழித்தவர்கள் வசதிக்காக ஏங்குகிறார்கள். எந்த பணம் அவர்களைத் துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததோ, அந்த பணத்தை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசை அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.

எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளைம், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை

வடிவமைக்கிறது.பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக் கூடாது.

ஞாயிறு, டிசம்பர் 31, 2017

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து -


அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து -


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும்,
நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மனிதனின் அழகிய இஸ்லாமிய பண்புகளில்; அவன் தனக்கு அவசியம் இல்லாததை விட்டு விடுவதும் ஒன்றாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (திர்மிதீ.) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 67 )