அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அழகான அறிவுரைகள்.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகான அறிவுரைகள்.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2020

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா ?




மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள். ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள். அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை. அதனை இந்த சிறு உரையில் காண்போம்!

திங்கள், ஜூலை 06, 2020

மனஅழுத்தம் என்ன செய்வது ?



வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
எந்த ஒரு வேலையையும் முன் கூட்டியே திட்டமிடுங்கள். செல்லவேண்டிய இடத்திற்கு சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் கணவன்/மனைவி அல்லது நண்பர்களிடம் பகிருங்கள்.

வெள்ளி, ஜூன் 05, 2020

உணவில் மிதமான தன்மை




உணவில் மிதமான தன்மை


அல்லாஹ், அவனது படைப்புக்கான கருணையால், அவர்கள் சாப்பிடுவதிலும் குடிப்பதிலும் மிதமாக இருக்கும்படி கட்டளையிட்டான்.

"... மற்றும் உண்ணுங்கள், குடிக்கலாம், ஆனால் களியாட்டத்தால் வீணடிக்காதீர்கள், நிச்சயமாக அவர் (அல்லாஹ்) அல்-மஸ்ரிஃபனை (மோசடி செய்பவர்களை) விரும்புவதில்லை." [அல் அ`ராஃப் 31]

 நபி (ஸல்) அவர்கள் கூறியபோது தனது தேசத்தை மிதமாக அறிவுறுத்தினார்:

“ஆதாமின் மகன் வயிற்றை விட மோசமான ஒரு பாத்திரத்தை நிரப்பவில்லை. அவரது முதுகை நேராக வைத்திருக்க ஒரு சில வாய்மூலங்கள் அவருக்கு போதுமானவை. அவர் வயிற்றை நிரப்ப வேண்டும் என்றால்; பின்னர் அவரது உணவுக்கு மூன்றில் ஒரு பங்கு, அவரது பானத்திற்கு மூன்றில் ஒரு பங்கு மற்றும் அவரது காற்றுக்கு மூன்றில் ஒரு பங்கு. ” [அட்-திர்மிதி]

செவ்வாய், ஜனவரி 14, 2020

அழகான அறிவுரைகள்....


எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும் பாங்கொலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல்லுங்கள்.

அல்குர்ஆனை ஓதுங்கள்; அல்லது அதனைச் செவிமடுங்கள்; அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள். உங்களது நேரத்தின் ஒரு பகுதியைக் கூட பயனின்றிக் கழித்துவிடாதீர்கள்.