அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 09, 2017

நகைச்சுவையும், காட்டூனும் நம்மை அறியாமல் செய்யும் பாவங்களே!



மனித உடலும், உள்ளமும் அடிக்கடி களைப்புக்கும், கவலைக்கும் உள்ளாகின்றன. எந்தவொரு மனிதனும் தான் இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட ஏதோ ஒரு வழிமுறையை கையாளுகின்றான். எவ்வாராயினும் அவ்வழிமுறை இஸ்லாம் காட்டிய வழியில் அமைந்திட வேண்டும். சிறுவர், பெரியவர்கள் உட்பட அனைவரும் ஏதோவொரு வகையில் தொலைக்காட்சியின் பக்கம் சாய்ந்தே உள்ளனர். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவதையும் பார்க்க தீய முறையில் பயன்படுத்துவோரே அதிகம். இதுவே தற்காலத்தின் நிலைமையாக மாறியுள்ளது.
ஏதோவொரு வகையில் திரைப்படங்கள் சீரழிவுக்கு இட்டுச் செல்பவை என நாம் புரிந்து வைத்திருந்தாலும், தாம் பார்த்து ரசிக்கும் நகைச்சுவை காட்சிகள், காட்டூன் போன்றவற்றை அற்பமாக எண்ணி நகைசுவை தானே என்ற நகைசுவையான முறையில் சமாளிக்கின்றார்கள்.

செவ்வாய், டிசம்பர் 20, 2016

இசையில் மயங்கும் இளைய சமுதாயம் தொடர் 2📺📻

இசையில் மயங்கும் இளைய சமுதாயம் தொடர் 2📺📻

செல்வந்தர்களின் அந்தஸ்தை அடைய…
பணம் இருக்கும் செல்வந்தர்களில் அதிகமானவர்களுக்குக் கொடுக்க மனம் இருக்காது. பணம் இல்லாத ஏழைகளிடம் கொடுக்க வேண்டும் என்ற மனம் இருக்கும். இன்னும் சிலரோ தங்களுக்குக் கிடைக்கும் செல்வத்தை வீண் விரயம் இல்லாமல் செலவழித்து, அதில் மீதம் இருப்பதைத் தர்மம் செய்து விடுவார்கள். என்றாலும் இவர்களது எண்ணம் இன்னும் அதிகமாகத் தர்மம் செய்ய வேண்டும் என்றே இருக்கும்.
தர்மம் செய்பவர்களைப் பார்க்கும் ஏழைகளுக்கு, இது போன்று நமக்கும் செல்வம் தரப்பட்டால் நாமும் தர்மம் செய்து அதிக நன்மைகளைப் பெறலாமே! இவர்கள் மட்டும் அதிகமான நன்மைகளைப் பெறுகிறார்களே! என்று நினைப்பார்கள்.

இது போலத் தான் சத்திய ஸஹாபாக்களும் வருத்தப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த திக்ருகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻[தொடர் 1

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!இசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻[தொடர் 1
இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். அதனால் தான் தங்களுக்கு ஏதேனும் மன இறுக்கம் ஏற்படும் போது அல்லது சலிப்பு ஏற்படும் போது இசை கேட்க விரும்புகின்றார்கள்.
இசை நம்முடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதி, ஓய்வைத் தருகின்றது என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதும் இதற்குக் காரணம்.
பெண்களும் கூட வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வேலையில் சிரமம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்வார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல. மார்க்கம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருமே இந்த இசையில் மூழ்கியுள்ளனர்.