அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இம்மை மறுமையின் வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இம்மை மறுமையின் வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 04, 2020

மனிதன் ஏன் படைக்கப்பட்டான் ?

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இறைவன் மனிதனைப் படைத்தது , அவனுக்கு அறிவாற்றலைக் கொடுத்து, அவனுக்கு உணவளித்துப், பாதுகாப்பதெல்லாம் அந்த ஏக இறைவனை ஏற்று, அவனுக்கே வழிபடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்குத் தான்.
ஆனால் மனிதனோ தன்னுடைய ஆரம்பத்தையும் மறந்து விடுகிறான்.எதுவுமே தெரியாத இளம் பிராயத்தையும் மறந்து விடுகிறான். எதையும் செய்யத் துணியவைக்கும் வாலிப சக்தி, பணச் சக்தி, ஆயுத சக்தி எல்லாம் சேர்ந்து முன்னரிருந்தையும் மறக்கச் செய்கின்றன. பின்னர் வர இருப்பதையும் நினைக்க முடியாமல் தடுக்கின்றன. இதை நினைவுபடுத்துவதற்காகவே இறைவன் திருமறையில் கூறுகிறான்:

புதன், டிசம்பர் 07, 2016

இவ்வுலகம் முதல் மறுமை வரை

👨🌍🌔மனிதன் இவ்வுலகில் தோன்றியதிலிருந்து தான் முக்கியமாக கருதும் அனைத்தையும் எழுதி வைக்கும் பழக்கம் அவனிடத்தில் இருந்தது. தான் பேசும் மொழியை எழுதி வைத்து மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தான். நிலங்கள் மற்றும் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதை ஆரம்ப காலத்தில் கற்களிலும் பின் தோல்களிலும் பிறகு பேப்பரிலும் எழுதிவைத்தார்கள்.
இவ்வாறு ஒவ்வொன்றையும் பதிவு செய்யும் பழக்கம் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துவிட்ட இக்காலத்தில் எல்லா விஷயங்களும் மிக இலகுவாக கம்யூட்டர் மூலம் மற்றும் சிப்பிலும் (ஸ்ரீட்ண்ல்) லும் பதியப்படுகின்றன . அதிலும் குறிப்பாக குற்றச்செயல்கள் புரிபவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு பதியப்படுகிறது.
இதை கொண்டு குற்றம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். இது இவ்வுலகில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கண்காணிக்கும் வழிமுறைகளாகும்! ஆனால் (முஸ்லிம்களுக்கு) இறைவன் மனிதன் செய்யும் அனைத்தையும் பதிவு செய்ய ஒரு இனத்தையே படைத்துள்ளான். அவர்கள் மலக்குமார்கள் எனும் வானவர்கள் ஆவர் .

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

இந்த உலகம் ஒரு சோதனை களம் .......

இந்த உலகம் ஒரு சோதனை களம் .......
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

அல்லாஹ்  கூறுகிறான்..
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் , மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்,, மேலும் அவன்[யாவரையும்] மிகைத்தவன்,, மிக மனிப்பவன்.
அல்குர் ஆன்..67..2]

ஒரு முஸ்லிம் அவர் வீட்டில் இரண்டு ஆடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆடு நல்ல கொளுத்த ஆடு. இன்னொரு ஆடு மெலிந்த நொண்டி ஆடு .
ஒரு தடவை கொளுத்த ஆடு நொண்டி ஆட்டை பார்த்து கேட்டதாம்.'' இதோ பார் என் எஜமான் எனக்கு நிறைய தீணி போடுகிறார், நல்லவிதமாக என்னை கவனித்து வருகிறார். நான் நன்றாக சாப்பிட்டு எப்படி இருக்கேன் என்று அந்த கொளுத்த ஆடு சொன்னதாம். அதற்கு அந்த நொண்டி ஆடு பதில் சொன்னதாம் ''நீர் சொல்வது உண்மைதாம்!  இன்ஷாஅல்லாஹ்  ஹஜ்பெருநாள் வரட்டும் அப்பொழுது தெரியும் என்று''. [ஆட்டை அறுத்து குர்பானி கொடுப்பதற்காக ]

செவ்வாய், டிசம்பர் 22, 2015

அதானின் வரலாறு கேள்![அவசியம் படித்து அறிந்துக் கொள்ளுங்கள்!]

அவசியம் படித்து அறிந்துக் கொள்ளுங்கள்!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அதானின்  நோக்கம் .. தொழுகைக்கு அழைப்பது . சிலர் தங்களுடைய செல் போனில் ரிங் டோனாக வைத்திருகிறார்கள் . இதை அவசியம் தவிர்க்கவும்.

அருமை சகோதர /சகோதரிகளே! அஸ்ஸலாமு அழைக்கும் ! ' நம் பள்ளிகளில் தினமும் ஐந்து வேளை  தொழுகைக்கான அழைப்பு [பாங்கு] சொல்லப்படுகிறது . அதன் வரலாறு என்ன?  ஒவ்வொரு வேளை  தொழுகைக்கும் முன்பாக பாங்கு சொல்லப்படுகிறது. இவ்வாறு சொல்லப்படும் பாங்கிற்கு எத்தனை மரியாதை செலுத்துகிறோம் என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. முஅஃதின்  பாங்கு சொல்லிக் கொண்டிருப்பார். நாம் பாட்டிற்கு நமது வேலைகளை கவனித்துக் கொண்டிருப்போம். சிலர் அப்போதுதான் சுவாரஸ்யமாகவும், சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டிருப்பார்கள் . யாரையோ, எதற்காகவோ அழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதாக தங்களது செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். முன்பெல்லாம் பாங்கு சொல்ல ஆரம்பித்த உடனே ரேடியோவை ஆஃப்  செய்து விடுவார்கள் . பேசுவதை நிறுத்திக் கொள்வார்கள். அந்தக் கலாச்சாரம் இப்பொழுது மலையேறிவிட்டது.

சனி, ஆகஸ்ட் 01, 2015

பணம்...! பணம் ...!பணம் ...!

அல்லாஹ்வின் திருபெயரால் .................
பணம் பத்தும் செய்யும் என்பார்கள் . பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.. பணத்தை வைத்து எதையும் வாங்கலாம்.. ஆனால் சில விடயங்களை தவிர ....
பணம் முக்கியமா ..? அல்லது குணம் முக்கியமா என்று ஒருவரிடம் கேட்டால்.. அவன் கூறும் பதில் '' எனக்கு பணம் தான் முக்கியம் ''  குணத்தை வைத்து என்ன செய்ய முடியும் ..? பணத்தை வைத்து எதுவேண்டுமானாலும் செய்யலாம். பணம் பந்தியிலே ! குணம் குப்பையிலே என்று சொல்வார்கள் . இன்று அப்படித்தான் இருக்கிறது! பணத்தின் மதிப்பை தெரிந்தவர்கள். குணத்தின் மதிப்பு, சிறப்பு பற்றி தெரிந்திருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் திருத்தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறிய ஒரு அழகான ஹதீஸை பாருங்கள்!

செவ்வாய், மார்ச் 31, 2015

மார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்!

உத்தம சகாபாக்கள் 
மார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்!
بســــم الله الـر حـمـن الرحـــيــم
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) 'ஏழு
பெண் குழந்தைகளை' அல்லது 'ஒன்பது பெண் குழந்தைகளை'விட்டுச் சென்றார்கள்.
எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?'
என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன்.

ஞாயிறு, மார்ச் 08, 2015

அல்லாஹ்வின் அழைப்பு


அல்லாஹ்வின்  திருபெயரால் .........

மறுமையில் முதல் முதலாக விசாரிக்கப்படும் தொழுகையைப் பற்றி ,அது சீராக இருந்தால் மற்ற காரியங்கள் சீராகிவிடும் . இல்லையெனில் ...???

பொதுவாக முஸ்லிம்களில் பலர் மனிதர்களைக் கண்டு அஞ்சும் அளவிற்கு, அல்லாஹ்விற்கு அஞ்சுவதில்லை. எடுத்துக்காட்டாக சொல்லப் போனால், அரபு நாடுகளில் சென்று வேலை செய்யும் முஸ்லிம்கள் அங்கு ஐவேளைத் தொழுகையையும் தவறாமல் தொழுகின்றனர். ஆனால் தாய் நாட்டிற்கு வந்து விட்டாலோ அவர்களில் 99 சதவிகிதம் பேர்களுக்குப் பள்ளி வாசல் எங்கிருக்கிறது என்று கூடத் தெரிவதில்லை. இதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால், அரபுநாடுகளில் வேலை செய்வோர், கண்டிப்பாக, அதாவது முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைகளையும் விடாது தொழ வேண்டும். இல்லையேல் , அங்கு காலந்தள்ள முடியாது. ஆயிரக்கணக்காக பணம் சம்பாதிக்க முடியாது.எனவே அரபு ஷேக்குக்கு அஞ்சி அவர்கள் அங்கு தொழுதார்கள் . தாய் நாட்டிற்கு வந்து விட்டால் அவர்கள் யாருக்கு அஞ்ச வேண்டும்? அல்லாஹ்வுக்கா ? அந்த அச்சம் வந்துவிட்டால் தான் எல்லாம் வந்து விடுமே.

புதன், பிப்ரவரி 18, 2015

உண்மையான முஸ்லிம் [சிறுகதை]

உண்மையான முஸ்லிம் [சிறுகதை]

அல்லாஹ்வின் திருபெயரால் ........................

தோளில் மாட்டிய லெதர் பேக் ஒரு சிறிய சூட்கேஸ் சகிதம் கேட்டைத் திறந்துக் கொண்டு நுழைந்தான் யாசர் .
ஏராளமான செடிகளோடு, பறந்து விரிந்த பச்சை புல் தரையாலும் சூழப்பட்டிருந்தது அந்த பங்களா.
யாசர் தயங்கி நடந்தான் . புல் தரையில் பிரம்பு நாற்காலி போட்டு காற்றோட்டமாய் அமர்ந்து அன்றைய காலைப் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தார் ஷஹாப்புத்தீன் . நிழலாட நிமிர்ந்தார் யாரோ ஓர் இளைஞன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து பத்திரிகையை மடித்து வைத்துவிட்டுத் திரும்பினார்.

வியாழன், பிப்ரவரி 12, 2015

தொழுகை மார்க்கத்தின் தூணாகும் [தொடர்ச்சி..]

அல்லாஹ்வின் திருபெயரால் ..............

இன்ஷாஅல்லாஹ் நாம் தொழுகையின் சிறப்பைப் பற்றி தொடர்ச்சியாக பார்க்கப் போகிறோம் . நீங்கள் தொழாதவர ? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மறுமை நாளில் முதல் கேள்வி '' தொழுகைப் பற்றிதான்''  இன்ஷாஅல்லாஹ்  இந்த கட்டுரையைப் படித்து விட்டு தொழக் கூடியவர்களாக ஆவீர்கள் .

புதன், பிப்ரவரி 11, 2015

தொழுகை மார்க்கத்தின் தூணாகும்

அல்லாஹ்வின் திருபெயரால்.......

அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறினார்கள் .. நபி [ஸல்] அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.. ''உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஓடிக்கொண்டிருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை அவர் குளிப்பாரானால் அவரது உடலில் ஏதேனும் அழுக்குகள் இருக்குமா? நீங்கள் இதுபற்றி  என்ன நினைக்கிறீர்கள் ? '' என்று கேட்டார்கள். ''எந்த அழுக்கும் [அவர் மீது] இருக்காது'' என நபித்தோழர்கள் கூறினர் . நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''அதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும். அதைக் கொண்டு அனைத்து பாவங்களையும் அல்லாஹ் அகற்றி விடுகிறான்.''
ஆதாரம்.. புகாரி ]

செவ்வாய், பிப்ரவரி 10, 2015

அழிக்க வேண்டுமா மறுமை எண்ணத்தை ...?

அல்லாஹ்வின் திருபெயரால் ...

சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன் . மதங்கள் கூறும் மறுமைக் கொள்கை மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. மறுமை எண்ணத்தையே  அழித்துவிட வேண்டும் என்று ஆவேசமாக வாதிட்டார். அதற்கான சில காரணங்களையும் அவர் முன்வைத்தார்.

யாகம் என்ற பெயரில் வேள்வி வளர்த்து, விலை உயர்ந்த பொருள்களைத் தீயில்  போட்டுச் சாம்பலாக்குகிறார்கள் .

புதன், டிசம்பர் 31, 2014

இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், மறுமை நாள் – இறுதித் தீர்ப்பு நாள் என்ற அந்த நாள் நிச்சயமாக வரும் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களில் மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்தார்கள். மறுமை வாழ்க்கையை அவர்களால் நம்ப முடியாமல் போனது, இந்த மண்ணுலக வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கையும்தான் நபிமார்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிக்கும்படிச் செய்தது…

ஞாயிறு, டிசம்பர் 07, 2014

ஜமாஅத் கூட்டமைப்பு

அல்லாஹ்வின் திருபெயரால் .........

இந்த கட்டுரை இந்தக் காலத்திற்கு அவசியம் தேவை . இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நம் முஸ்லிம் சமுதாயம் . ஒரு ஊருக்கு இரண்டு ஜமாஅத் , பலவிதமான இயக்கங்கள் , கட்சிகள் , அமைப்புகள் இப்படி நிறைய பிரிவுகள் பிளவுகள் வந்துவிட்டன. நாங்கள் சொல்வதுதான் சரி என்று ஒரு கூட்டம் . நாங்கள் தான் சரியான நேரான பாதையில் இருக்கிறோம் என்று சொல்லும் ஒரு அமைப்பு . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ........... அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் . யார் நேரான பாதையில் இருக்கிறார்கள் , யார் வழி  தவறிப் போகிறார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

ஞாயிறு, ஜூன் 01, 2014

இம்மை மறுமையின் வெற்றி

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அதன்படி செயலாற்றி, மேலும் நாயகம் சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடபதற்கு தீன், தீனுடைய வாழ்க்கை- மார்க்கம் என்று கூறப்படும். எனவே யார் தீனுடைய வாழ்க்கையை பின்பற்றுவாரோ அவர் இரு உலகிலும் எல்லா நிலைமைகளிலும் மனநிம்மதியை அடைவார். சிலர் வருடத்தில் இரு பெருநாள் தொழுகைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு தங்களை தீன்தாரிகள் என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலரிடம் ஹஜ்ஜூ இருந்தால் தொழுகை இல்லை, தொழுகை இருந்தால் ஜக்காத்து இல்லை, ஜக்காத்து இருந்தால் தொழுகை இல்லை, ஆனால் தங்களையும் தீன்தாரிகலென்று கூறுகின்றனர். இவை ஒவ்வொன்றும் தீனுடைய ஒரு பகுதியாகும்.