அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஈமான் கொண்டவர்களே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈமான் கொண்டவர்களே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 29, 2017

தொழுகையை விட்டவன்



தொழுகையை விட்டவன்  

    புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

    தொழுகையை விட்ட என் சகோதரனே ! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.

திங்கள், நவம்பர் 16, 2015

நான்தான்! நான்தான் !!

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
அன்பான சகோதர/ சகோதரிகளுக்கு  அஸ்ஸலாமு அழைக்கும் !

மனித குலத்திற்கு எக்காலத்திற்கும் ஏற்றவகையில் பல நல்ல ஒழுக்க நெறியினை இறைவன் தம் அருள் மறையின் மூலமாகவும், அண்ணல் நபி [ஸல்] அவர்களது வாழ்க்கை முறைகளின் வாயிலாகவும் வகுத்துத் தந்துள்ளான். மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க கூடிய ஆற்றலையும் தந்திருக்கிறான். அத்தகைய நன்னெறிகளை, பிறர் இல்லம் செல்லும் பொழுது   பேண வேண்டிய வழிமுறையினை - ஒழுக்கத்தினை , இம்மடலில் உங்களுக்குத் தருகிறேன் . சாதாரணமாக பிறர் இல்லத்தினுள் செல்லும் போது சிலர் ''சர சர '' வென்று , தமது வருகையினை அறிவிப்புச் செய்யாது நுழைந்து விட்டு பின்பு வருத்தபடுவதுண்டு . வீட்டின் உரிமையாளர்களும் '' என்ன இது கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாதர்வர்களாய் இருக்கிறார்களே '' என வெளியே வாய்விட்டு சொல்லாவிட்டாலும், மனதிலாவது நினைத்துக் கொள்வார்கள். இத்தகைய பழக்கத்தை இஸ்லாம் அன்றே கண்டித்துள்ளது.

சனி, ஏப்ரல் 18, 2015

தவ்பா எனும் பாவமீட்சி

சீதேவித் தனத்தின் அடையாளங்கள் நான்கு!
தான் செய்துவிட்ட பாவங்களை மறவாதிருப்பது !
செய்த நன்மைகளை மறந்துவிடுவது!
தீனின் விஷயத்தில் தன்னைவிட மேல்நிலையில் உள்ளவனைப் பார்ப்பது!
உலக வாழ்க்கையில் தனக்குக் கீழ் உள்ளவனைப் பார்ப்பது!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.........
அல்லாஹ் வேதனைகளை இறக்குவது மக்கள் செய்யும் பாவத்தின் காரணமாகத்தான் . பாவங்களை அழிப்பது நன்மைகளை கொண்டுதான்! அல்லாஹ் தன் அருள் மறையில்..

ஈமான் கொண்டவர்களே!  [நீங்கள்] இறைவனிடம் கலப்பற்ற தவ்பா [எனும்] பாவமீட்சித் தேடிக்கொள்ளுங்கள்! என்பதாகக் கூறுகிறான்.
[அல்குர்ஆன் ]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

''உங்கள் பாவங்களுக்காக இறைவனிடம் தவ்பா செய்து நற்செயல்களின் பால் மீளுங்கள். நான் நாளொன்றுக்கு நூறு முறை பாவமன்னிப்புக் கோரி வருகின்றேன்.
ஆதாரம்..புகாரி]

சனி, ஜனவரி 24, 2015

விளக்கை நோக்கி வரும் 'விட்டில் பூச்சிகள்' போல

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ
மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும்
தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத்
தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி
நெருப்பில் விழுகின்றன.


‘இதனைப் போன்று (பாவங்களைப் புரிந்து) நரக நெருப்பில் நீங்கள் விழாமல்
தடுக்க உங்கள் இடுப்புக்களைப் பிடித்து நான் இழுத்துக் கொண்டிருக்கிறேன்.
நரகைவிட்டும் வாருங்ககள்! நரகைவிட்டும் வாருங்கள்! எனக் கெஞ்சிக்
கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னையும் மீறி அந்த நரகப் படுகுழியில்
விழுந்து கொண்டிருக்கிறீர்கள். என நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள்’(அறி: அபூ
ஹுரைரா(ரழி) – ஆதா: முஸ்லிம்)

புதன், மே 14, 2014

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்  

அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்

* (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77)

* அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60)

திங்கள், மார்ச் 17, 2014

செய்த தர்மத்தைச் சொல்லிக்காட்டாதீர்

அல்லாஹ்வின் திருபெயரால்..........
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!!

தர்மம் செய்து அதை சொல்லிக் காட்டுவதின் மூலம் நன்மையை இழப்பதாகும் . அப்படிச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தும் நபிமொழிகள் பல வந்துள்ளன .
செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டக் கூடாது என்பதை பல நபிமொழிகள் வந்துள்ளன . அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

புதன், ஜனவரி 22, 2014

நல்லவர்களுக்கும் தண்டனை வரும்


நல்லவர்களுக்கும் தண்டனை வரும்.
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர பெருமக்களே. இன்று நம்மில் பலர் தான் நல்ல காரியம் செய்தால் போதும் நாம் ஏன் ? பிறருக்கு அறிவுரை சொல்லனும். எதற்காக பதிலுக்கு வாங்கிக் கட்டிக்கனும் என்று பயந்து ஒதுங்கி போவதை பார்க்கின்றோம்.

சனி, ஜனவரி 18, 2014

முஃமினூன் -விசுவாசிகள்




முஃமின் எப்படி இருப்பார்கள் என்பதை அல்லாஹு தஆலா தன் திருமறையில் கூறுகிறான்:

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர் .
அவர்கள் எத்தகையோரென்றால் , தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும் , அவர்கள் வீணான (பேச்சு, செய்யல, ஆகிய ) வற்றை விட்டு விலகியிருப்பார்கள் .
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள் .

சனி, டிசம்பர் 21, 2013

பெருமை கொள்ளாதீர் !




மனதில் அணுவளவு அகம்பாவம் இருப்பவனும் சுகம் தரும் சுவனம் புகமாட்டான் .
ஆதாரம்: முஸ்லிம்)

நன்றியுணர்வு வேண்டும்!




பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
ஒருவருக்கு ஒரு உதவி செய்யப்பட்டு அதற்காக உதவி செய்தவரைப் பார்த்து "ஜஸா கலலாஹூ கைரன்" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக ) என்று கூறினால் , அவர் நெஞ்சார புகழ்ந்தவராவார்.
(அல்ஹதீஸ் )

செவ்வாய், நவம்பர் 19, 2013

நேர்ச்சையும் வணக்கமே !




அல்லாஹ்வின் திருபெயரால் ........
தங்களின் நோய் நீங்கி விட்டால் , அல்லது கோரிக்கை நிறைவேற்றினால் , அவ்லியாவே ! உங்களுக்காக நான் அதைச் செய்வேன் ; இதைச் செய்வேன் என்று கூறுபவர்களும்  அவ்வாறே செய்யல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர்