அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
உள்ளங்களை வெல்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ளங்களை வெல்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 16, 2020

உள்ளங்களை வெல்வோம்

அன்பான நல்ல உள்ளங்களே! இந்த தளத்தைப்
பற்றி மற்றவர்களுக்கு ஏத்தி வையுங்கள்!
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்!


“கொடுத்தால் கிடைக்கும்…..”

மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் அன்பையும் பிரியத்தையும் அடைவதற்கான வழிகளை குறித்து இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.

பிறருடைய தேவையை அறிந்து அதை நிறைவேற்றிக் கொடுப்பதும் உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். ஒருவர் தனது தேவையை நம்மிடம் எடுத்துச் சொன்னதும் எந்த அளவு நாம் அவருக்கு நிறைவு செய்ய வேண்டும்.
ஒருவர் தன் தேவையை நம்மிடம் வெளிப்படுத்துவதற்கு முன்பே அதை நாம் உணர்ந்து அவருக்கு உதவினால்
அது அவர் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அவருடைய பிரியத்தை கூடுதலாக கிடைக்கச் செய்யும்.
பிறருடைய தேவையை நிறைவேற்றுவது என்பதில் அவருடைய பொருளாதார தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி எதையேனும் இரவலாக கொடுத்து உதவுவது, நமது உடல் உழைப்பின் மூலம் உதவுவது, அவருக்காக சிபாரிசு செய்வது உள்ளிட்டவை அடங்கும்.