அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
எது மார்க்கம் ..?[அவசியம் படிக்கவும்] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எது மார்க்கம் ..?[அவசியம் படிக்கவும்] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 07, 2016

எது மார்க்கம் ..?[அவசியம் படிக்கவும்]

எது மார்க்கம் ..?[அவசியம் படிக்கவும்]
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.....
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன் தான்,, அவனைத் தவிர வேறு நாயனில்லை ,, அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் .
அல்குர் ஆன்..2..163]

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர் ...
முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும்.அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும். உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடப்பார்.

உண்மை முஸ்லிம் தனக்கு அல்லாஹ்  விதித்ததை மகிழ்வுடன்  ஏற்றுப் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி [ஸல்] அவர்களின் பொன்மொழியில் நிலைகொள்ளும்.