அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஒரு அழகிய உபதேசம் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு அழகிய உபதேசம் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 17, 2015

இஸ்லாமியனே நீ எவ்வகையில் முன் மாதரி...?

அல்லாஹ்வின் திருபெயரால்.........
''[விசுவாசிகளே!] நீங்கள்தான் மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களில் எல்லாம் மிக்க மேன்மையானவர்கள் , [ஏனெனில்] நீங்கள் [மனிதர்களை] நன்மையான காரியங்களை [செய்யும்படி] ஏவி , பாவமான செயல்களிலிருந்து [அவர்களை] விலக்குகின்றீர்கள் .'' [அல்குர் ஆன் ]

இஸ்லாமிய சமுதாயம் உயர்ந்த சமுதாயம் . உலகில் தோற்றுவிக்கப்பட்ட சமுதாயங்களில் சிறப்புமிக்க சமுதாயம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எக்காரணத்தால் அது சிறந்த சமுதாயமாகக் காணப்படுகிறது ?

வியாழன், நவம்பர் 12, 2015

குடும்பத்தில் அமைதி

அஸ்ஸலாமு அழைக்கும் ! அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.. நீண்ட நாள்கள் பிறகு உங்களுக்கு ஒரு கட்டுரை தருகிறேன். தாயகம் சென்று விட்டதால் சில காலம் நிறுத்திவிட்டேன் . இப்பொழுது அல்லாஹ்வின் உதவியால் கிருபையால் எழுதுகிறேன் . உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை . எங்கள் சேவையும் உங்களுக்கு தேவை. உங்களுடைய பிரார்த்தையில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அன்புடன் பணிவுடம் கேட்டுக் கொள்கிறேன்.

சொற்பக் கால வாழ்வு . எதுவும் வாழ்க்கையில் நிரந்தரம் இல்லை. எதுவும் இந்த உலகத்தில் நிலையாக இருப்பதும் இல்லை. அல்லாஹ்வின் திருமுகம் மட்டும் தான் நிலைத்திருக்கும் . கொண்டு போவதும் ஒன்றும் இல்லை. கொண்டுவந்ததும் ஒன்றும் இல்லை. மறுமைக்காக நாம் என்ன அனுப்பிவைத்தோம் அதும் மட்டும் தான் நமக்கு சொந்தம் !

சத்திய பாதை இஸ்லாம்

சனி, ஏப்ரல் 25, 2015

பெருமை கொள்ளாதவர்

பெருமை வேண்டாம்! பொறுமை வேண்டும்!
கருவம் வேண்டாம்! ஆர்வம் வேண்டும்!
ஆணவம் வேண்டாம்! நல்ல ஆன்மா வேண்டும்!
அல்லாஹ்வின் திருபெயரால்...

உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ளமாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டால் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும் அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமாக மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார். என  அல் குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.

வியாழன், ஏப்ரல் 23, 2015

உள்ளத்தில் நல்ல உள்ளம்

நபி வழியை விட்டு விட்டு ,வேற வழியைத் தேடாதீர்கள் !
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்....

''[நீர் கொடுப்பதை விட] அதிகமாக பெறக் கருதி [எவருக்கும்] நன்றி செய்யாதீர் . உமதிறைவனுக்காக கஷ்ட்டங்களை நீர் பொறுத்திரும் .''
அல்குர்ஆன்  74.6-7]

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

வானம், பூமியைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே...

அல்லாஹ்வின் திருபெயரால் ...........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக !

வானம், பூமியைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹூத ஆலா  எல்லாப் படைப்புகளின் விதியையும் எழுதிவிட்டான் . அப்பொழுது அல்லாஹுதஆலாவின் அர்ஷ் நீரின் மீது இருந்தது'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரிப்னு ஆஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்..முஸ்லிம்[


1ஒவ்வொருவருடைய மரண நேரம் , 2. ஒவ்வொருவருடைய செயல் [நல்லதோ அல்லது தீயதோ] , 3. ஒவ்வொருவரையும் புதைக்கப்படும் இடம்,4.ஒவ்வொருவருடைய வயது  5. ஒவ்வொருவருக்கும் கிடைக்க இருக்கும் உலக சாதனங்கள் ஆகிய ஐந்து காரியங்களை ஒவ்வொரு அடியானுக்கும் அல்லாஹுதஆலா எழுதி முடித்துவிட்டான் என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம், முஸ்னத் அஹ்மத் ] 

சனி, மே 31, 2014

இம்மை இன்பம் அற்பமானது

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !

மனிதனுக்கு எதுவாகினாலும் அது அவனுக்கு ஒரு சொர்ப்பக் காலம்தான் . இன்பம் வந்தாலும் சரியே , துன்பம் வந்தாலும் சரியே! எதுவந்தாலும் கொஞ்சம் காலம் தான் அந்த மனிதன் அனுபவிக்க முடியும். ஒரு நேரம் வரும் அந்த நேரம் தான் அந்த மனிதனுக்கு மரணம் வரும் நேரம். அந்த நொடியில் அவனிடத்தில் இருக்கும் அனைத்தையும் விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தாம்! ஆனால் , இந்த மனிதன் மறதியிலும் , உலக இன்பத்திலும் முழ்கி இருக்கும்போது , அவனுக்கு இந்த சிந்தனைகள் வராது. உலகத்தை விட்டு ஒரேடியாக ஒதுங்கியும் இருக்கக்கூடாது , உலகத்தில் ஒரேடியாக முழ்கியும் இருக்க கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும். அதாவது ஒரு வழிப்போக்கனைப் போன்று நாம் வாழ வேண்டும். 

சனி, மார்ச் 08, 2014

ஹஜ்செய்யாத ஹாஜி [தொடர்ச்சி]

அல்லாஹ்வின் திருபெயரால்....
எல்லாப் புகழும் ,புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக !

இந்த சம்பவங்கள் நடந்ததா ? அல்லது இல்லையா ? ஆதாரம் உண்டா ? என்று மனத்தை குழப்பிக் கொள்ள அவசியம் இல்லை. இதில் நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கிறது . சில உண்மையான வரலாறுகள் , சம்பவங்கள் நடந்து இருக்கிறது என்பது எதார்த்த உண்மை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

சனி, பிப்ரவரி 01, 2014

மரணம் வந்தால் .......



அல்லாஹ்வின் திருபெயரால் ...

"உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னரே உங்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து (நல்வழியில் ) செலவு செய்யுங்கள்.  (அவ்வாறு செலவு செய்யாத ஒருவன் மரண வேளையில் ) என்னுடைய இறைவனே! சிறிது காலம் வரை என்னை நீ பிற்படுத்தி வைக்கக்கூடாதா ? (அவ்வாறு பிற்படுத்தி வைத்தால்) நான் தர்மம் செய்து நல்லோரில் உள்ளவனாக ஆகி விடுவேன் என்று அவன் கூறுவான்".
அல்குர் ஆன் :63-10

சனி, ஜனவரி 18, 2014

ஐயமும் !தெளிவும்!!





ஐயம்: ஷரீ அத் சட்டதிட்டங்களுக்கு சுயேட்சையாக விளக்கம் கொடுப்பது “”இஜ்திஹாத்”, எந்த ஒரு பிரச்சனைக்கும், முன்னாள் சட்டமேதைகளான நமது மேன்மைக்குரிய இமாம்கள் செய்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஷரீ  அத்தை விளங்கிக் கொள்வதே “”தக்லீத்” என்று மரியம் ஜமீலா அவர்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன?

செவ்வாய், ஜூலை 02, 2013

ஒரு அழகிய உபதேசம் !

ஒரு அழகிய உபதேசம் !

அண்டை வீட்டாரின் உரிமைகளும் நலம் நாடுதலும் :
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
அல்லாஹ்வை வணங்குங்கள் ! அவனுக்கு எப்பொருளையும் இணைவைக்காதீர்கள்!  தாய் தந்தையர்க்கும் ,உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் , உறவினரான அண்டை வீட்டார்களுக்கும் ,உறவினரல்லாத அண்டை வீட்டார்களுக்கும், (தொழில் ,பிரயாணத்தில்) கூட்டாளிகளாக இருப்பவருக்கும் , வழிப் போக்கருக்கும் , உங்கள் வலக்கரங்கள் சொந்த்தமாக்கிக் கொண்டவர்களுக்கும் உபகாரம் செய்யுங்கள்!... (அல்குர்ஆன் 4:36)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ,ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) பகர்ந்தார்கள்: அண்டை வீட்டுக்காரரை எங்கு வாரிசாக ஆக்கி விடுவாரோ என்று நான் பயப்படுமளவு அண்டை வீட்டாரின் நலன்களைப் பேணுவதைப் பற்றி ஹஜ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் (தொடர்ந்து) எனக்கு உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்கள் .