இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுக்காக புறப்பட இருக்கும் அன்பு சகோதர /சகோதரிகளுக்கு ! ஒரு அன்பான வேண்டுகோள் ! ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இருக்க வேண்டும் ! |
ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாதுஇ பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம்.
பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது.