அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
சுவாரஸ்யமான சில கதைகள் : லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாரஸ்யமான சில கதைகள் : லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 24, 2020

நேர்மை! -(கருத்துள்ள கதை)



இலுப்பூர் என்ற ஊரில் ராமன், சோமன் என்று இரு நண்பர்கள் இருந்தனர். இருவரும் ஓரளவு படித்திருந்த போதிலும், எவ்வித உத்தியோகமும் கிடைக்காமல், தம் ஊரில் ஏதேதோ வேலைகளைச் செய்து பிழைத்து வந்தனர்.

ராமன் தனக்குக் கிடைக்கும் வருமானம் போதாமல் போனதால் கோபம் கொண்டு அந்தக் கோபத்தைத் தன் மனைவி, மக்கள் மீது காட்டி வந்தான். சோமனோ தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஞாயிறு, பிப்ரவரி 23, 2020

கண்ணாடி ...(கருத்துள்ள கதை)


அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.

செவ்வாய், பிப்ரவரி 18, 2020

புகழ்ச்சிப் பேச்சில் ஏமாறலாமா ?


  சண்பகவனம் எனும் காட்டில் ஒரு மானும், ஒரு காகமும் நட்புடன் பழகி வந்தது. மான் தன்னிச்சையாகப் புல் முதலியவற்றைத் தின்று நன்கு கொழுத்து இருந்தது.

அப்படி கொழுத்திருந்த மானைப் பார்த்து நரி ஒன்று பொறாமைப்பட்டது. அந்த நரி பலமுடன் இருக்கும் மானை எதிர்த்துக் கொல்வதென்பது நம்மால் முடியாது. எப்படியும் இந்த மானை வஞ்சனையால் கொன்று அதன் கறியை ருசித்துச்சாப்பிட வேண்டும் என்று தீர்மானம் செய்தது.

மெதுவாக மானின் அருகில் சென்ற நரி "நண்பரே நலமா?" என்று கேட்டது.

இதுவரை நம்மைப் பார்த்திராத நரி "நண்பரே" என்று அழைக்கிறதே என்று ஆச்சரியத்துடனும், அது அழைத்த விதத்தில் மயங்கியும் " நீ யார்?" என்று கேட்டது அந்த மான்.

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

சுவாரஸ்யமான சில கதைகள் :

சுவாரஸ்யமான சில கதைகள் :கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை.