அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
தர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 26, 2013

தர்கா வழிபாடு இரண்டாம் பகுதி...



வரலாற்று சான்று :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை அல்லாஹ்வின் அடிமை என்பது இதன் பொருள் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் அவர்களின் பாட்டனார் பெயர் சூட்டியிருப்ப்திளிருந்து அம்மக்கள் அல்லாஹ்வை பற்றி முன்பே அறிந்த்திருந்தார்கள்  என்பதை அறியலாம் .

திருக்குர் ஆன் சான்று :.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத அம்மக்கள் அல்லாஹ்வை அறிந்திருந்தார்கள் என்பதற்கு பின்வரும் வசனங்களும் சான்றாக அமைந்துள்ளன .

"" வானத்திலிருந்து , பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார் ? செவிப் புலனையும் , பார்வைகளையும் தன் கைவசம் வைத்துருப்பவன் யார் ? உயிரற்றதிலிருந்து   உயிருள்ளதையும் , உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும்  வெளிப்படுத்துபவன் யார் ? காரியங்களை நிர்வகிப்பவன்  யார் ? என்று கேட்பீராக ! "" அல்லாஹ் "" என்று கூறுவார்கள் . "" அஞ்ச மாடீர்களா "" என்று கேட்பீராக !  அல்குர் ஆன் 10:31

பூமியும் , அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம் ? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள் ) என்று (முஹம்மதே !) கேட்பீராக! "" அல்லாஹ்வுக்கே "" என்று அவர்கள் கூறுவார்கள் . "" சிந்திக்க மாடீர்களா ? என்று கேட்பீராக ! அல்குர் ஆன் 23:84,85

"" ஏழு வானங்களுக்கு அதிபதி , மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார் ? எனக் கேட்பீராக! "" அல்லாஹ்வே  "" என்று கூறுவார்கள் "" அஞ்ச மாடீர்களா ? என்று கேட்பீராக!
அல்குர் ஆன்23 :86,87)
இன்ஷாஅல்லாஹ் தொடரும் ...
இரண்டாம் பகுதி...