அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
நபி(ஸல்)அவர்களின் சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நபி(ஸல்)அவர்களின் சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 13, 2012

அன்பின் உறைவிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

அன்பின் உறைவிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
-மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே அனுப்பப்பட்டார்கள். நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும், பண்பாட்டையும், உயரிய ஒழுக் விழுமியங்களையுமே உலகிற்கு போதித்தார்கள். அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவைகளை முதிலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள். இதற்கு சான்றாக அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுமாறு தூதருக்கு பணிக்கின்றான்:
(நபியே! இன்னும்) ‘மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்.’ என்றும் கூறுவீராக. ‘அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்’ (என்றும் நீர் கூறுவீராக). (39: 11,12).
அல்லாஹ்வை அஞ்சுபவர்களில், பயப்படுபவர்களில் முதன்மையானவராகவே அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்தார்கள். அன்னாரது போதனைகளுக்கும், வாழ்க்கைக்கும் மத்தியில் எந்த ஒரு முரண்பாடும் இருக்கவில்லை.
மனித குல மேம்பாட்டிற்கும், உயர்விற்கும் அவர்கள் வழங்கிய உயரிய போதனைகளிலிருந்து சில துளிகளை மாத்திரம் இங்கு தருகின்றோம்.
அல்லாஹ்வின் முன்னிலையில் நீ சிறந்தவனாக மாறி விடு!:
‘நிச்சயமாக உங்களில் மிகச் சிறந்தவர் நற்குணமுடையவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், (புஹாரி).
நன்மைகளின் முழு வடிவமாக உன்னை மாற்றிக்கொள்:
நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்: ‘நான் அல்லாஹ்வின் தூதரிடம் எது நன்மை? எது தீமை? என கேட்டேன்.அதற்கு அன்னார்: நன்மை என்பது நற்குணங்களாகும். தீமை என்பது உனது உள்ளத்தை உறுத்துவதும், அச்செயலை மக்கள் பார்த்துவிடக்கூடாது என்று வெறுக்கின்றாயே அதுவாகும்’ என பதிலளித்தார்கள். (முஸ்லிம்).
உனது நன்மையின் தட்டை கனமாக்க மிக எளிதான வழி?:
‘நற்குணத்தை விட (நன்மையின்) தராசில் கனமானது வேறு எதுவுமில்லை. உயரிய நற்குணங்களை உடையவர் அவரது நற்குணங்களின் மூலம் நோன்பாளியின், தொழுகையாளியின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி), திர்மிதி).
உபரியான வணக்கங்களில் ஈடுபட்டவரின் அந்தஸ்தை நீ பெற வேண்டுமா?:
‘நிச்சயமாக ஒரு இறை நம்பிக்கையாளன் தனது நற்குணங்களின் மூலம் பகல் முழுவதும் நோன்பு நோற்ற, இரவு முழுவதும் நின்று வணங்கியவரின் அந்தஸ்தை பெறுகிறார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், அபூதாவுத்).
நாளை மறுமையில் எமது உயிரை விட மேலான அல்லாஹ்வின் தூதருடன் நீ இருக்க விரும்புகின்றாயா?:
‘உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர், மறுமை நாளில் எனக்கு மிகவும் நெறுக்கமானவர் உயர்ந்த நற்பண்புகளை உடையவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள், திர்மிதி).
இன்றிலிருந்து ஒரு உண்மை முஸ்லிமாக உன்னை மாற்றிக்கொள்:
‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் பிற மனிதர்கள் ஈடேற்றம் பெற்றிருக்கின்றார்களோ அவரே உண்மையான முஸ்லிமாவார். பிறருடைய செல்வங்களுக்கும், இரத்தத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பிறர் அச்சமற்று வாழ்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளராவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நஸாஈ).
நீ ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனாக வேண்டுமா?:
‘தான் விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாத வரையில் உங்களில் ஒருவர் உண்மையான இறை விசுவாசியாக முடியாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி).
அல்லாஹ் விரும்பும் மென்மையை அனைத்திலும் தெரிவு செய்:
‘நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன், அவன் அனைத்து காரியங்களிலும் மென்மையே விரும்புகின்றான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
கோபம் ஷைத்தானின் சூழ்ச்சியில் நின்றும் உள்ளது என்பதை அறிந்து விழிப்புடன் செயல்படு:
‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என கேட்டுக் கொண்ட போது, கோபம் கொள்ளாதீர்! என போதனை செய்தார்கள். திரும்ப திரும்ப அவர் உபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது கோபம் கொள்ளாதீர் என்பதையே போதனை செய்து கொண்டிருந்தார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).
வெட்கம் என்ற உயர்ந்த பண்பை உனது அணிகலனாக்கு:
‘வெட்கம் நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வர மாட்டாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி), புஹாரி, முஸ்லிம்).
‘நம்பிக்கைக்கு (ஈமானுக்கு) எழுபது கிளைகள் உள்ளன: அதில் மிக உயர்ந்தது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்பதாகும், அதில் மிக தாழ்ந்தது பாதையில் மக்களுக்குத் தொல்லை தறுபவைகளை அகற்றுவதாகும், வெட்கமும் நம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).
பிற மக்களுடன் எளிதாக நடந்து கொள்:
‘மக்களுடன் எளிதாக நடந்துகொள்ளுங்கள், மக்களுக்கு சிறமப்படுத்தாதீர்கள். மக்களுக்கு நன்மாராயங் கூறுங்கள், அவர்களை வெறுண்டோடச் செய்யாதீர்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
பேசும் ஒவ்வொரு நல்ல வார்த்தைக்கும் தர்மத்தின் கூலி இருக்கின்றது என்பதை மறந்து விடாதே:
‘நீங்கள் பேசும் நல்ல வார்த்தைகளும் தர்மமாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முத்தஃபகுன் அலைஹி).
இஸ்லாத்தின் மிகச் சிறந்த செயலுக்கு நீ சொந்தக்காரனாகி விடு:
‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது? என்று கேட்டபோது வறியோருக்கு உணவளிப்பதும், அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கு ஸலாம் சொல்வது (அமைதியை பிரார்த்திப்பது)மாகும்’ என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், புஹாரி).
அன்பை உனது முகவரியாக்கு!:
‘மனிதர்களுக்கு அன்பு காடடாதவருக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
‘எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீஙகள் நம்பிக்கை கொள்ளாத வரை சுவர்கம் நுழைய முடியாது, நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள், உங்கள் மத்தியில் நேசம் உண்டகிவிடுகின்ற ஒரு செயலை அறிவித்து தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் அதிகம் அதிகம் ஸலாம் சொல்லுங்கள் (நேசம் உண்டாகி விடும்)’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம்).
‘இரு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் (அன்புடன்) கை குளுக்கிக் கொள்வார்களானால், அவர்கள் இருவரும் பிரிந்து செல்வதற்கு முன் அந்த இருவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: பராஃ (ரலி) அவர்கள், அபூதாவூத்).
மலர்ந்த முகத்திற்கும் அல்லாஹ்விடம் நன்மை இருக்கின்றது என்பதை மறந்து விடாதே:
‘உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்’; என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).
இது நமது சமூகத்தின் முகவரியாகும்:
‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னு ஷுஐப் (ரலி), அபூதாவூத்).
இது உனக்கு பொறுத்தமல்ல:
‘ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல! எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள், (ஆதாரம்: புஹாரி,முஸ்லிம்).
பெற்றோரை வெறுப்பவனே! ஒரு நொடி நின்று இதை படித்து விட்டுச் செல்!
‘நன்மைகளில் மிக உயர்ந்தது தனது தந்தையின் நண்பர்களை நேசிப்பதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
மூக்கை நுழைத்து வீண் பிரச்சினையை விளைக்கு வாங்காதே:
‘தனக்கு தொடர்பில்லாதவைகளை விட்டு விழகி இருப்பது, இஸ்லாத்தில் மிக அழகிய செயல்களில் நின்றும் உள்ளதாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், திர்மிதி).
அல்லாஹ்வின் அருள் யாருக்கு?:
‘பொருளை விற்கும்போதும், வாங்கும்போதும், கடனை அறவிடும்போதும் சிறந்த முறையில் நடந்துகொண்டவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), புஹாரி).
கடன் கொடுத்தவர்களே! உங்களுக்கு இப்படியும் ஒரு நற்பாக்கியமா? :
‘மறுமை நாளில் தன்னை நெறுக்கடிகளிலிருந்து அல்லாஹ் பாதுகாக்க வேண்டுமென விரும்புபவர், (தன்னிடம் கடன் பெற்ற) ஏழைக்கு கால அவகாசம் கொடுக்கட்டும், அல்லது கடனை தள்ளுபடி செய்வதன் மூலம் அவனது சுமையை அகற்றிவிடட்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), முஸ்லிம்).
கடன் வாங்கியவர்களே! உங்களுக்கும் இருக்கின்றது நற்பாக்கியம்! :
‘கடனை சிறந்த முறையில் திருப்பி செலுத்துபவரே உங்களில் மிகச் சிறந்தவர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முத்தபகுன் அலைஹி).
மக்களுக்கு தொல்லை கொடுத்ததை அகற்றியவருக்கு கிடைத்த உயர்வை பார்த்தீர்களா?
‘பாதையில் முஸ்லிமகளுக்கு தொல்லை கொடுத்த ஒரு மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றிய ஒரு மனிதர் சுவர்க்கத்தில் உலா வருவதை நான் பார்த்தேன்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), முஸ்லிம்).
எவைகளெல்லாம் உங்களுக்கு தர்மத்தின் நன்மையை பெற்றுத் தருகின்றன:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்’. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி).
அல்லாஹ்விடம் உங்களுக்கு எது உயர்வு? :
‘தர்மம் கொடுப்பதன் மூலம் செல்வத்தில் எந்த ஒரு குறைவும் ஏற்படமாட்டாது, தனக்கு செய்த தவறுக்காக பிறரை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் அவனது அந்தஸ்தை உயர்த்துகின்றான், அல்லாஹ்விற்காக பணிவுடன் நடந்து கொள்பவரை அல்லாஹ் உயர்த்துகின்றான்’ என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம்).
அநாதைகளுக்கு அன்பு செலுத்துமாறு போதித்த அநாதையாக வளர்ந்த மாமனிதர்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள், புஹாரி).
விதவைகளைக் காத்த உத்தமத் தலைவர்:
‘விதவைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் உழைப்பவர் இரவு முழுவதும் நின்று வணங்கி, பகல் முழுவதும் நோன்பு நோற்றவரின் அந்தஸ்துக்குரியவரைப் போன்றாவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி, முஸ்லிம்).
பிறர் குறையை மறையுங்கள்:
‘எவரொருவர் மற்றொருவரின் குறைகளை உலகில் மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறைகளை நாளை மறுமையில் மறைத்துவிடுவார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்).
மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்:
‘ஈமானில் முழுமைபெற்ற முஃமின் உயர்ந்த நற்குணங்களை உடையவரே. உங்களில் சிறந்தவர் தனது மனைவிக்கு சிறந்தவரே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், திர்மிதி).
இல்லறம் சிறக்க அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த வழிகளுல் இதுவும் ஒன்று:
‘நம்பிக்கை கொண்ட (ஒரு கணவர்) நம்பிக்கை கொண்ட (தனது மனைவியை) வெறுத்தொதுக்க வேண்டாம். அவளின் ஒரு தீயகுணம் அதிருப்தியளித்தாலும், அவளிடமிருக்கும் மற்றொரு நற்குணத்தின் மூலம் திருப்தியடையுங்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்).
எது சுய மரியாதை? :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள், புஹாரி).
உழைப்பின் உயர்வு:
‘உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்கள், புஹாரி).
உங்கள் உறவினர்களிலிருந்தே ஆரம்பியுங்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.’ (அறிவிப்பர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள், புஹாரி).
உறவைப் பேணாதவனுக்கு சுவர்க்கம் நுழைய முடியாது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்’. (அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அவர்கள், புஹாரி).
உங்களுக்கு உணவில் அபிவிருதிதி வேண்டுமா?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி).
அல்லாஹ்வின் உறவு உங்களை விட்டு துண்டிக்கப்பட்டு விடும்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி).
உண்மையில் உறவைப் பேணுபவன் யார்?:
‘பகரம் செய்யும் வகையில் உறவைப் பேணக்கூடியவன் முழுமையாக உறவைப் பேணுபவன் அல்லன். பிற உறவினர்கள் தொடர்பறுத்துக் கொண்டாலும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடைய உரிமையை நிறைவேற்றுபவனே முழுமையாக உறவைப் பேணுபவன் ஆவான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், ஆதராம்: முஸ்லிம்).
உங்களுக்கு அண்டை வீட்டார்கள் உள்ளார்களா? அவர்களுடன் நீங்கள் எப்படி?:
‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஷுரைஹ் (ரலி) அவர்கள், புஹாரி).
அடிமைகளுடன், பணியாளர்களுடன் இபபடியும் நடக்கச் சொன்ன உத்தம புருஷர்:
‘உங்களில் ஒருவருக்கு உங்களின் பணியாளன் உணவைக் கொண்டு வந்து பரிமாறும்போது அவரையும் உங்களுடன் அமரவைத்துக்கொள்ள சிறமமென்றால் ஓரிரு கவல உணவயையாவது கொடுங்கள். உங்களுக்க தேவையான உணவை தயாரிப்பதில் அவரே சிறமமெடுத்துக் கொண்டவர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புஹாரி).
அடிமைகள் உங்கள் சகோதரர்களே என்று சொன்ன கருணையின் உறைவிடம்:
‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்’ என அபூதர் கூறினார்’ (புஹரி).
உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஒப்பற்ற தலைவர்:
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ அல்பத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் அடிமையைச் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் யாரோ, ‘நினைவிருக்கட்டும்இ,அபூமஸ்ஊத்!” என்று கூறியதைக் கேட்டேன். அப்போது நான் கோபத்தில் இருந்ததால், அந்தக் குரலை (நன்கு) விளங்கிக்கொள்ளவில்லை. அவர் என்னை நெருங்கி வந்தபோது (பார்த்தால்) அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் ‘நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! நினைவிருக்கட்டும். அபூ மஸ்ஊத்!” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக் கீழே போட்டேன். அப்போது அவர்கள் ‘நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது” என்று சொன்னார்கள். நான், ‘இதன் பின்னர் ஒருபோதும் நான் எந்த அடிமை யையும் அடிக்கமாட்டேன்” என (உறுதி) மொழிந்தேன். (முஸ்லிம்).
மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென பதவிகளையும், பொறுப்புகளையும் விரும்புபவர்களே! உங்களைத்தான்:
அல்லாஹ்வின் தூதரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘இந்த எனது வீட்டிலிருந்து அல்லாஹ்வின் தூதர் பின் வருமாறு பிரார்த்தித்தார்கள்: யா அல்லாஹ்! என்னுடைய சமூகத்தில் பொறுப்புகளை ஏற்று மக்களுக்கு சிறமங்களை கொடுப்பவர்களை நீ சிறமப்படுத்துவாயாக! பொறுப்புகளை ஏற்று மக்களுடன் மென்மையாக நடந்து கொள்பவர்களுடன் நீயும் மென்மையாக நடந்துகொள்வாயாக!’ (முஸ்லிம்).
‘உண்மையில் தனது ஆட்சி பொறுப்பிலும், குடும்ப பொறுப்பிலும், தான் ஏற்றுக் கொண்ட ஏனைய பொறுப்புகளிலும் நீதி செலுத்தியவர் நாளை மறுமையில் அல்லாஹ்வின் சந்திதானத்தில் ஒளியினாலான மேடைகளில் வீற்றிருப்பர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
மோசடி செய்பவர்களுக்கு இழிவு காத்திருக்கின்றது என்பதில் மிக எச்சரிக்கையாக இருங்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் ஒரு (அடையாளக்) கொடி இருக்கும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).
‘பிறருக்கு அநியாயம் செய்வதை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அநியாயங்கள் நாளை மறுமையில் (உங்களுக்கெதிரான) மிகப் பெரிய இருளாக வரும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
இதை படிக்கும் உங்களுக்கு ஒரு மனம் திறந்த அழைப்பு! :
ஒட்டு மொத்த உலகிற்கே அன்பையும், நேசத்தையும் போதிக்க வந்த உத்தமத் தூதரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகும். அதில் தான் மனித வாழ்வுக்குரிய சுபீட்சமும், ஈடேற்றமும் தங்கியிருக்கின்றது. இங்கு அவரின் போதனைகளில் ஒரு துளிகூட முன்வைக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். எனவே அந்த தூய வாழ்வை படிப்பதற்கு முன் வாருங்கள். அதுதான் நமக்கு ஈருலகிலும் நிலையான வெற்றியை பெற்றுத்தரும். நடு நிலையுடன் அந்த மாமனிதரின் தூய வாழ்க்கை வரலாற்றை படித்து அவரை ஏற்று பின்பற்றுங்கள்.  jazakumullah khair! for islamkalvi.

www.islam bdmhaja.blogspot.com

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

நபிகளாரின் நற்குணங்கள்- தன்னடக்கம்




நபிகளாரின் நற்குணங்கள்- தன்னடக்கம்

நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது.

ஒரு முஸ்-மும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்-ம், "உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அüத்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அந்த யூதர், "உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அüத்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்-ம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்கüடம் சென்று தனக்கும் அந்த முஸ்-முக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்-மை அழைத்து வரச் சொல்- அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், "மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முத-டம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாüல் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர் களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெüந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெüந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அüத்திருப்பானா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), நூல்: புகாரி (2411)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரையும் அவரது நற்செயல் (மட்டும்) சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்)'' என்று கூறினார்கள்.

மக்கள், "தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "என்னையும் தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, "எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்கüல் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), நூல்: புகாரி (5673)

நன்மையில் முந்திச் செல்லுதல்

நபிகளார் எந்தக் காரியத்தை ஆர்வமூட்டினாலும் அதை, தாம் முத-ல் செய்பவர்களாக இருப்பார்கள். கட்சித் தலைவர்களாக இருக்கும் பலர் பத்திரிக்கைகளில் படம் வரவேண்டும் என்பதற்காகக் கேமரா முன் வந்து நின்று விட்டு மாயமாகி விடுவார்கள். ஆனால் எந்தக் காரியத்தை செய்யத் தூண்டினாலும் அதைச் செய்யும் முதல் நபராகவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் நபிகளார் திகழ்வார்கள்.

பத்ர் போர் நடந்த நாட்களில் நாங்கள் மூன்று பேர் ஒரு ஒட்டகத்தில் செல்லும் நிலைமையில் இருந்தோம். அபூலுபாபா(ர-), அலீ (ர-) ஆகியோர் நபிகளாருடன் சேர்ந்திருந்தார்கள். (இருவர் பயணம் செய்ய, மூன்றாம் நபர் நடந்து வருவார். இவ்வாறு பயணத்தை வைத்திருந்தனர்) நபிகளார் நடந்து வரும் முறை வந்த போது இரு நபித்தோழரும், "நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம் (நீங்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வாருங்கள்)'' என்று கூறிய போது "நீங்கள் இருவரும் என்னை விட வ-மை வாய்ந்தவர்கள் இல்லை. மேலும் உங்களை விட நன்மையில் தேவையற்றவனாகவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள்.

(நூல்: அஹ்மத் 3706)

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்கüன் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?'' என்று கேட்டேன். அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?'' என்று கேட்டார்கள். (தம் வாழ்நாüன் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்கüன் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். "ருகூஉ' செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, "ருகூஉ' செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி (4837)

பாதுகாவலர்

தம் தோழர்களைப் பாதுகாக்கும் கேடயமாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள். பிரச்சனைகள், சிக்கல்கள் தம் தோழர்களுக்கு வந்து விட்டால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக முத-ல் களத்தில் ஈடுபடும் மாபெரும் வீரராகவும் நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்கüலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்கüலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்கüலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

(ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை எதிர் கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ர-) அவர்களது சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்த வண்ணம், "பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள்'' என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள். பிறகு, "(தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்' அல்லது "இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: புகாரி (6033)
நல்ல வார்த்தைகள்

அடுத்தவரைக் கண்டிக்கும் போதோ அல்லது சாதாரணமாகப் பேசும் போதோ அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசும் வழக்கமுள்ள தலைவர்கள் ஏராளம். பல கட்சிகளில் அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவர்களை மாநிலப் பேச்சாளர்களாகவும் நியமித்துள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பேச்சில் கண்ணியமும் மரியாதையும் நிறைந்திருக்கும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ர-) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்கüடம் பேசினார்கள். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள், "நற்குணமுடையவரே உங்கüல் சிறந்தவர்' என்று கூறுவார்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்; மஸ்ரூக், நூல்: புகாரி (6035)

கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போது கூட "அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: புகாரி (6046)

பெரியவர்களுக்கு மரியாதை

தம்மை விட வயதில் மூத்தவர்களுக்கு நபிகளார் மரியாதை தருபவர்களாக இருந்தார்கள். இவ்வுலகின் இறுதி நாள் வரை உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறுதி நபி என்ற ஆணவம் அவர்களிடம் இருக்கவில்லை. தம்மை, சிறு வயதில் எடுத்து வளர்த்த உம்மு ஐமன் (ர-) அவர்களை மரியாதை நிமித்தம் அவர்களின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்து வருவார்கள். அவர்கள் கோபப்படும் போது அமைதியாக இருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஐமன் (ர-) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

உம்மு ஐமன் (ர-) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் ஏதோ குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருந்தார்களோ, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ தெரியவில்லை. (அதை அவர்கள் பருக மறுத்து விட்டார்கள்.)

அதற்காக உம்மு ஐமன் (ர-) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குர-ல் கோபமாகக் கடிந்து கொண்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: முஸ்-ம் (4848)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ர-) அவர்கள் உமர் (ர-) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு ஐமன் (ர-) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்'' என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு ஐமன் (ர-) அவர்களிடம் நாங்கள் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?'' என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு ஐமன் (ர-) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, வானி-ருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)'' என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச் செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.

அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: முஸ்-ம் (4849)

உணர்வுக்கு மதிப்பளித்தல்

சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அவர்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அது மார்க்கத்திற்கு முரணாக இல்லாத போது அதை நிறைவேற்றி வைப்பது சிறந்த பண்பாகும். இதை நபிகளார் அவர்கள் செய்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, "நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) "அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்துச் ச-த்த போது, "உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். "அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி (950)
நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க, பள்ளிவாச-ல் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி 5236

அன்னை ஆயிஷா (ர-) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ர-) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ர-) அவர்கள், போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தோள் கொடுத்து நின்று, பார்க்கச் செய்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்த்து) விளையாடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி (6130)
ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ர-) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களைத் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

www.islam bdmhaja.blogspot.com

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு


முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி
தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி


பதிப்புரை
ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு
ஆசிரியர் முன்னுரை
பொருளடக்கம்
அரபியர்கள் நிரபரப்பு மற்றும் வமிசம், ஆட்சி மற்றும் பொருளாதாரம், சமயம் மற்றும் சமூகம்

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்

--அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்

-- அரபிய சமுதாயங்கள்

அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

-- யமன் நாடு (ஏமன்)

-- ஹீரா நாடு

-- ஷாம் நாடு (ஸிரியா)

-- ஹிஜாஸ் பகுதியில் அதிகாரம்

-- ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்

-- அரசியல் பின்னணி

அரபியர்களின் சமய நெறிகள்

-- சமயங்களின் நிலைமைகள்

அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

-- சமுதாய அமைப்பு

-- பொருளாதாரம்

-- பண்பாடுகள்

வமிசம், பிறப்பு, வளர்ப்பு

நபியவர்களின் வமிசமும் குடும்பமும்

-- நபியவர்களின் வமிசம்

-- நபியவர்களின் குடும்பம்

பிறப்பு மற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்

-- பிறப்பு

-- ஸஅது கிளையாரிடம்

-- நெஞ்சு திறக்கப்படுதல்

-- பாசமிகு தாயாரிடம்

-- பரிவுமிக்க பாட்டனாரிடம்

-- பிரியமான பெரியதந்தையிடம்

-- கதீஜாவை மணம் புரிதல்

-- கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்

-- நபித்துவத்திற்கு முன் - ஒரு பார்வை

இறைத்தூதராகுதல் மற்றும் அழைப்புப் பணி

மக்கா வாழ்க்கை

நபித்துவ நிழலில்

-- ஹிரா குகையில்

-- ஜிப்ரீல் வருகை

-- இறைச் செய்தி தாமதம்!

-- மீண்டும் ஜிப்ரீல்

-- வஹியின் வகைகள்

முதல் கால கட்டம்

அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்

-- இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்

-- முந்தியவர்கள்!

-- தொழுகை

இரண்டாம் கால கட்டம்

-- பகிரங்க அழைப்பு

-- நெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்

-- ஸஃபா மலை மீது...

-- ஹாஜிகளைத் தடுத்தல்

-- அழைப்புப் பணியில் இடையுறுகள்

-- துன்புறுத்துதல்

-- குறைஷிகளும் நபியவர்களும்...

-- குறைஷியர் குழுவும் அபூதாலிபும்

-- அபூதாலிபை மிரட்டுதல்

-- மீண்டும் குறைஷியர்கள்...

-- நபியவர்கள் மீது அத்துமீறல்

-- அர்கமின் இல்லத்தில் அழைப்புப் பணி

-- ஹபஷாவில் அடைக்கலம்

-- இணைவைப்பவர்களும் சிரம் பணிந்தனர்

-- முஹாஜிர்கள் திரும்புதல்

-- இரண்டாவது ஹிஜ்ரா

-- குறைஷியர்களின் சூழ்ச்சி

-- நபியவர்கள் மீது கொலை முயற்சி

-- ஹம்ஜா இஸ்லாமை தழுவதல்

-- உமர் இஸ்லாமைத் தழுவுதல்

-- நபியவர்களுக்கு முன் உத்பா

-- பேரம் பேசும் தலைவர்கள்!

-- அபூஜஹ்லின் கொலை முயற்சி

-- சமரச முயற்சி

-- மறு ஆலொசனை

-- அபூதாலிபின் முன்னெச்சரிக்கை

முழுமையாக ஒதுக்கி வைத்தல்

-- தீய தீர்மானம்

-- “கணவாய் அபூதாலிபில்“ மூன்று ஆண்டுகள்

-- கிழிக்கப்பட்டது தீர்மானம்!

-- குறைஷிகளின் கடைசிக் குழு

துயர ஆண்டு

-- அபூதாலிப் மரணம்

-- துணைவி கதீஜா மரணம்

-- அடுக்கடுக்கான துயரங்கள்

-- ஸவ்தா உடன் மறுமணம்

பொறுமை மற்றும் நிலைகுலையாமையின் தூண்டுகோல்கள்

மூன்றாம் கால கட்டம்

மக்காவிற்கு வெளியே இஸ்லாமிய அழைப்பு

-- தாயிஃப் நகரில்

கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும்

-- இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட கோத்திரத்தினர்

-- ஆறு மேன்மக்கள்

-- ஆயிஷாவை மணமுடித்தல்

மிஃராஜ்

அகபாவில் முதல் ஒப்பந்தம்

-- மதீனாவில் அழைப்பாளர்

-- மகிழ்ச்சி தரும் வெற்றி

அகபாவில் இரண்டாவது ஒப்பந்தம்

-- உரையாடலின் தொடக்கமும் அப்பாஸின் விளக்கமும்

-- ஒப்பந்தத்தின் அம்சங்கள்

-- ஒப்பந்தத்தின் பின்விளைவை உணர்த்துதல்

-- 12 தலைவர்கள்

-- ஷைத்தான் கூச்சலிடுகிறான்

-- குறைஷிகளின் எதிர்ப்பு

-- குறைஷிகள் செய்தியை உறுதி செய்தனர்

ஹிஜ்ராவின் தொடக்கங்கள்

தாருந் நத்வா

-- நபியவர்களைக் கொல்ல திட்டமிடுதல்

நபியவர்கள் ஹிஜ்ரா செல்லுதல்

-- குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்

-- சுற்றி வளைத்தல்

-- நபியவர்கள் புறப்படுகிறார்கள்

-- வீட்டிலிருந்து குகை வரை

-- இருவரும் குகைக்குள்

-- மதீனாவின் வழியினிலே

-- “குபா”வில்

-- மதீனாவில்

மதீனா வாழ்க்கை - அழைப்பு, போர், வெற்றி

மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள்

ஹிஜ்ரா சமயத்தில் மதீனாவில் வசித்தவர்களும்

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்

-- அல்மஸ்ஜித் அந்நபவி

-- சகோதரத்துவ ஒப்பந்தம்

-- இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்

-- நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்

-- ஆன்மீகப் புரட்சிகள்

யூதர்களுடன் ஒப்பந்தம்

ஆயுதமேந்தித் தாக்குதல்

-- குறைஷியர்களின் அச்சுறுத்துதலும்

-- அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

-- குறைஷிகளின் மிரட்டல்

-- போர் புரிய அனுமதி

-- இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும்

பெரிய பத்ர் போர்

-- போருக்குரிய காரணம்

-- இஸ்லாமியப் படையும் அதற்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்

-- இஸ்லாமியப் படை பத்ரை நோக்கி

-- மக்காவில் எச்சரிப்பவர்

-- மக்காவாசிகள் போருக்குத் தயார்

-- மக்கா நகர படையின் அளவு

-- பக்ர் கிளையினரை அஞ்சுதல்

-- மக்காவின் படை புறப்படுகிறது

-- வியாபாரக் கூட்டம் தப்பித்தது

-- திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

-- இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

-- ஆலோசனை சபை

-- இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது

-- கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்

-- மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

-- மழை பொழிதல்

-- முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

-- படையை வழி நடத்துவதற்கான இடம்

-- படையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்

-- போர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்

-- இரு படைகளும் நேருக்கு நேர்

-- நேரம் நெருங்கியது - சண்டையின் முதல் தீ

-- ஒண்டிக்கு ஒண்டி

-- எதிரிகளின் பாய்ச்சல்

-- நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்

-- வானவர்கள் வருகிறார்கள்

-- எதிர் பாய்ச்சல்

-- நழுவுகிறான் இப்லீஸ்

-- பெரும் தோல்வி

-- அபூஜஹ்லின் வீம்பு

-- கொல்லப்பட்டான் அபூஜஹ்ல்

-- இறைநம்பிக்கை நிகழ்த்திய அதிசயங்கள்

-- இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- தோல்வியை மக்கா அறிகிறது

-- வெற்றியை மதீனா அறிகிறது

-- இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது

-- வாழ்த்த வந்தவர்கள்

-- கைதிகளின் விவகாரம்

-- இப்போர் குறித்து குர்ஆன்

பத்ர் மற்றும் உஹுத் போர்களுக்கு மத்தியில்

-- ஸுலைம் குலத்தவருடன் போர்

-- நபியவர்களைக் கொல்ல திட்டம்

-- கைனுகா கிளையினருடன் போர்

-- யூதர்களின் சூழ்ச்சிக்கு உதாரணம்

-- கைனுகாவினர் ஒப்பந்தத்தை முறிக்கின்றனர்

-- முற்றுகையிடுதல் - சரணடைதல் - நாடுகடத்தல்

-- ஸவீக் போர்

-- தீ அம்ர் போர்

-- கயவன் கஅபை கொல்லுதல்

-- பஹ்ரான் போர்

-- ஜைதுப்னு ஹாஸா படைப் பிரிவு

உஹுத் போர்

-- குறைஷிகள் பழிவாங்கத் தயாராகுதல்

-- குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்

-- மக்காவின் படை புறப்படுகிறது

-- முஸ்லிம்கள் எதிரிகளை உளவு பார்த்தல்

-- அவசர நிலை

-- எதிரிகள் மதீனா எல்லையில்

-- தற்காப்புத் திட்டத்தை ஆலோசித்தல்

-- படையை திரட்டுதல் - போர்க்களம் புறப்படுதல்

-- படையைப் பார்வையிடுதல்

-- உஹுதுக்கும் மதீனாவுக்குமிடையில்

-- முரண்டுபிடிக்கிறான் இப்னு உபை

-- மீதமுள்ள இஸ்லாமியப் படை உஹுதை நோக்கி

-- தற்காப்புத் திட்டம்

-- நபியவர்கள் படையினருக்கு வீரமூட்டுகிறார்கள்

-- மக்கா படையின் அமைப்பு

-- குறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்

-- குறைஷிப் பெண்கள் வெறியூட்டுகின்றனர்

-- போரின் முதல் தீ பிழம்பு

-- கொடியை சுற்றிக் கடும் போர்

-- மற்ற பகுதிகளில் சண்டை

-- அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்

-- நிலைமையைக் கட்டுப்படுத்துவது

-- மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி

-- போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு

-- இணைவைப்பவர்களுக்குத் தோல்வி

-- அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு

-- காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்

-- நபியவர்களின் நிலை

-- முஸ்லிம்கள் சிதறுதல்

-- நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை

-- நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம்

-- நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்

-- எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்

-- செயற்கரிய வீரதீரச் செயல்கள்

-- நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!

-- நபியவர்கள் போரை தொடர்கிறார்கள்

-- சண்டாளன் உபை கொல்லப்படுதல்

-- நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்

-- இணைவைப்பவர்களின் இறுதித் தாக்குதல்

-- போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்

-- இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்

-- மலைக் கணவாயில்

-- அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி

-- பத்ரில் சந்திக்க அழைத்தல்

-- எதிரிகளின் நிலை அறிதல்

-- தியாகிகளை கண்டெடுத்தல்

-- தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்

-- நபியவர்களின் பிரார்த்தனை

-- மதீனா திரும்புதல் அன்பு மற்றும் தியாகத்தின் அற்புதங்கள்

-- இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- மதீனாவில் அவசர நிலை

-- ஹம்ராவுல் அஸத் போர்

-- இப்போர் குறித்து குர்ஆன் பேசுகிறது

-- இப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்

உஹுத் போருக்குப் பின் அனுப்பப்பட்ட படை

-- அபூ ஸலமா படைப் பிரிவு

-- அப்துல்லாஹ் இப்னு உனைஸை அனுப்புதல்

-- ரஜீஃ குழு

-- பிஃரு மஊனா

-- நழீர் இனத்தவருடன் போர்

-- நஜ்து போர்

-- இரண்டாம் பத்ர் போர்

-- தூமத்துல் ஜன்தல் போர்

அல்அஹ்ஜாப் போர்

பனூ குரைளா போர்

அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை

-- ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக்

-- முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு

-- லஹ்யான் போர்

-- குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்

பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்

-- நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்

-- முஸ்தலக் போரில் நயவஞ்சகர்கள்

-- 1) நயவஞ்சகர்களின் கூற்று

-- 2) அவதூறு சம்பவம்

குழுக்களும் படைப்பிரிவுகளும்

ஹுதைபிய்யா

-- உம்ரா

-- முஸ்லிம்களே புறப்படுங்கள்!

-- மக்காவை நோக்கி

-- தடுக்க முயற்சித்தல்

-- மாற்று நடவடிக்கை

-- நடுவர் வருகிறார்

-- குறைஷிகளின் தூதர்கள்

-- அல்லாஹ்வின் ஏற்பாடு

-- குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்

-- கொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்

-- சமாதான ஒப்பந்தம்

-- அபூஜந்தல் மீது கொடுமை

-- உம்ராவை முடித்துக் கொள்வது

-- பெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்

-- ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்

-- முஸ்லிம்களின் துக்கமும், உமரின் தர்க்கமும்

-- ஒடுக்கப்பட்டோர் துயர் தீர்ந்தது

-- குறைஷி மாவீரர்கள் இஸ்லாமைத் தழுவுதல்

இரண்டாவது கட்டம் - புதிய சகாப்தம்

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்

-- 1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்

-- 2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 3) பாரசீக மன்னருக்குக் கடிதம்

-- 4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்

-- 6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்

-- 7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்

-- 8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்

ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த

-- தூகரத் (அ) காபா போர்

கைபர் போர்

-- போருக்கான காரணம்

-- கைபரை நோக்கி

-- இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை

-- நயவஞ்சகர்கள் யூதர்களுடன் தொடர்பு கொள்ளுதல்

-- கைபரின் வழியில்

-- வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்

-- கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை

-- கைபரின் கோட்டைகள்

-- இஸ்லாமியப் படை முகாமிடுதல்

-- போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்

-- போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

-- இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்

-- பேச்சுவார்த்தை

-- அபூ ஹுகைகின் மகன்களைக் கொல்லுதல்

-- கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்

-- ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை

-- ஸஃபிய்யாவுடன் திருமணம்

-- நஞ்சு கலந்த உணவு

-- கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- ஃபதக்

-- வாதில் குரா

-- தைமா

-- மதீனாவிற்குத் திரும்புதல்

-- அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு

அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும்

-- தாதுர் ரிகா

உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல்

முஃதா யுத்தம்

-- யுத்தத்திற்கான காரணம்

-- படைத் தளபதிகள்

-- நபியவர்களின் அறிவுரை

-- படையை வழியனுப்புதல்

-- இஸ்லாமியப் படை புறப்படுதலும்

-- ஆலோசனை சபை

-- எதிரியைக் களம் காண

-- யுத்தத்தின் ஆரம்பம்

-- அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது

-- சண்டை ஓய்கிறது

-- இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

-- யுத்தத்தின் தாக்கம்

-- தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

-- அபூகதாதா படைப் பிரிவு

மக்காவை வெற்றி கொள்வது

-- உடன்படிக்கையை மீறுதல்

-- அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்

-- மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்

-- மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை

-- மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை

-- நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்

-- மக்கா நோக்கி இஸ்லாமியப் படை

-- குறைஷிகளின் அதிர்ச்சி

-- இஸ்லாமியப் படை “தூதுவா“வை அடைகிறது

-- இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது

-- நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள்

-- நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள்

-- உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது

-- கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்

-- கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்

-- “ஸலாத்துல் ஃபத்ஹ்“ அல்லது “ஸலாத்துஷ் ஷுக்ர்“

-- பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

-- ஸஃப்வான் இப்னு உமய்யா

-- நபியவர்களின் சொற்பொழிவு

-- நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்

-- பைஆ வாங்குதல்

-- மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்

-- படைப் பிரிவுகளும் குழுக்களும்

மூன்றாம் கட்டம்

ஹுனைன் யுத்தம்

-- அவ்தாஸில் எதிரிகள்

-- போர்த் தளபதியின் முடிவுக்கு போர்க்கள நிபுணர் எதிர்ப்பு

-- நபியவர்களின் உளவாளி

-- மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கி

-- முஸ்லிம்கள் திடீரெனத் தாக்கப்படுதல்

-- முஸ்லிம்கள் களம் திரும்புதல், போர் உக்கிரமாகுதல்

-- எதிரிகள் தோல்வி அடைகின்றனர்

-- எதிரிகளை விரட்டுதல்

-- கனீமா பொருட்கள்

-- தாயிஃப் போர்

-- ஜிஃரானாவில் கனீமாவைப் பங்கு வைத்தல்

-- நபியவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்

-- ஹவாஜின் குழுவினன் வருகை

-- உம்ராவை நிறைவேற்றி மதீனா திரும்புதல்

மக்கா வெற்றிக்குப் பின்

-- ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள்

-- படைப் பிரிவுகள்

தபூக் போர்

-- போருக்கான காரணம்

-- ரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்

-- நிலைமை மேலும் மோசமாகுதல்

-- நபியவர்களின் எதிர் நடவடிக்கை!

-- ரோமர்களிடம் போர் புரிய தயாராகும்படி அறிவிப்பு

-- முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு

-- தபூக்கை நோக்கி இஸ்லாமியப் படை

-- தபூக்கில் இஸ்லாமியப் படை

-- மதீனாவிற்குத் திரும்புதல்

-- பின்தங்கியவர்கள்

-- போரின் தாக்கங்கள்

-- இப்போர் குறித்து குர்ஆன்

இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

அபூபக்ர் ஹஜ்ஜுக்கு புறப்படுதல்

போர்கள் - ஒரு கண்ணோட்டம்

மக்கள் அலை அலையாய் அல்லாஹ்வின் மார்க்கத்தை தழுவுகிறார்கள்

-- குழுக்கள்

அழைப்புப் பணியின் வெற்றிகளும் அதன் தாக்கங்களும்

ஹஜ்ஜத்துல் விதா

-- ஹஜ்ஜத்துல் விதா உரை

இறுதிப் படை

உயர்ந்தோனை நோக்கி

-- புறப்படுவதற்கான அறிகுறிகள்

-- நோயின் ஆரம்பம்

-- இறுதி வாரம்

-- மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு

-- நான்கு நாட்களுக்கு முன்பு

-- மூன்று நாட்களுக்கு முன்பு

-- இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு

-- ஒரு நாள் முன்பு

-- வாழ்வின் இறுதி நாள்

-- மரணத் தருவாயில்

-- கவலையில் நபித்தோழர்கள்

-- உமரின் நிலை

-- அபூபக்ரின் நிலை

-- அடக்கம் செய்ய ஏற்பாடுகள்

-- அடக்கம் செய்வது

நபியவர்களின் குடும்பம்

-- பலதார மணம் புரிந்தது ஏன்?

பண்புகளும் நற்குணங்களும்

-- பேரழகு உடையவர்

-- உயர் பண்பாளர்www.islam bdmhaja.blogspot.com

சனி, ஜனவரி 28, 2012

நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!

நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!

Post image for நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!
நற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும், இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான். இறைவன் தனது திருக்குர் ஆனில் இறுதி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தை பற்றிக் குறிப்பிடும் பொழுது,  “நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது    இருக்கின்றீர்” (அல்குர் ஆன் 68:04)
என்று கூறுகின்றான்.நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின்பால் மக்களுக்கு ஆர்வம் காட்டி இருக்கின்றார்கள். நற்குணத்தையும் இறையச்சத்தையும் இணைத்துக் கூறி அதனை கடைபிடிக்குமாறும் கூறி இருக்கின்றார்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அதிகமானவர்கள் சுவர்க்கம் நுழைவது இறையச்சத்தினாலும், நற்குணத்தினாலுமேயாகும்” (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்) நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுக்கு சிறந்த ஒரு நல்லுபதேசம் செய்கின்றார்கள்:
“அபூ ஹுரைராவே நீர் நற்குணத்தை கடைபிடிப்பீராக! அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! நற்குணம் என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள், ‘துண்டித்து நடக்கும் உறவினர்களுடன் சேர்ந்து நடப்பீராக! உமக்கு அநியாயம் செய்தவரை மன்னிபீராக!” (ஆதாரம்: அல்பைஹகீ)
பிரமாண்டமான நன்மையையும் உயர்தரமான அந்தஸ்தையும் இந்த நற்குணத்தினால் ஒரு அடியான் எளிதில் பெற்றுக் கொள்கின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நற்குணம் உள்ள ஒரு அடியான் நின்று வணங்கி நோன்பு நோற்பவனின் அந்தஸ்தை அடைந்து கொள்கின்றான்” (ஆதாரம்:அஹ்மத்)
நபி (ஸல்)அவர்கள் நற்குணத்தை பூரண இறை விசுவாசத்திற்கு  உரிய அடயாளங்களில் ஒன்றாக கணிப்பிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவரிடத்தில் நற்குணம் என்ற பண்பு இருக்கின்றதோ அவரே பூரண இறை விசுவாசியாவர்”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மனிதர்களுக்கு பிரயோஜனம் அளிக்கக் கூடியவற்றை செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்; ஒரு முஸ்லிமுக்கு சந்தோசமளிக்ககூடிய செயல்களை செய்வது அல்லது கஷ்டத்தை விட்டும் நீக்குகின்ற அல்லது அவனின் கடனை நிறைவேற்றுவது அல்லது பிறரின் பட்டினியை நீக்குவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய செயல்களாகும். ஒரு முஸ்லிமின் தேவயை நிறைவேற்றுவதற்காக செல்வதென்பது பள்ளிவாசலில் ஒரு மாத காலம் இஃதிகாப் இருப்பதனை விடவும் என்னிடத்தில் விருப்பதுக்குரிய செயலாகும்” (ஆதாரம்:தபரானி)
ஒரு முஸ்லிம்  நல்ல விஷயங்களை பேசுவதற்கு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கின்றது. அவ்வாறு  நல்ல விஷயங்களை பேசுவதற்கும் நன்மையுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நல்ல வார்த்தைகளை பேசுவது சதகா(தர்மமாகும்)”  (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
இதே போன்று மனிதர்களிடம் எந்த ஒன்றையும் எதிர்பார்க்காத புன்முறுவலுக்கும் நன்மையுண்டு! அதுவும் நற்குணத்திலிருந்து உள்ளதுதான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள்:
“உமது சகோதரனின் முகத்தை பார்த்து புன்முறுவல் பூர்ப்பதும் சதகாவாகும்.” என்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)
நற்குணத்தின்பால் தூண்டக்கூடிய நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் ஏராளம்! அவர்களது வாழ்வில் தனது மனைவியர்களுடன், அண்டை வீட்டார்களுடன், ஏழ்மையாக இருந்த நபித்தோழர்களுடன், அறிவீனர்களுடன், இவற்றுக்கெல்லாம் அப்பால் இறை நிராகரிப்பாளர்களுடன் அனைவர்களுடனும் சிறந்த நற்குணமுள்ள வர்களாகவும் எடுத்துக்காட்டாகவும் முன்னுதாரணமுள்ளவராகவும் வாழ்ந்து காட்டி சென்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக!” (3:159)
நற்குணத்திற்கான அடயாளங்கள் ஏராளமானவை! அவற்றில் அதிகம் வெட்கமுள்ளவர்களாகவும், பிறரை துன்பப்படுத்துவதனை விட்டும் விலகி நடத்தல், அதிக சீர்திருத்தவாதியாக இருத்தல், உண்மை பேசக் கூடியவராகவும், குறைவான பேச்சு அதிக செயலுடையவராகவும், பொறுமை, நன்றியுணர்வு, தாழ்மை, கருனை, இன்முகமுள்ளவர்களாக இருப்பதோடு பிறரை திட்டாமலும் கோல், புறம், பெருமை போன்ற தீய செயல்களை விட்டும் விலகி, அல்லாஹ்வுக்காக வேண்டி ஒருவரை விரும்பி அவனுக்காகவே ஒருவரை ஒதுக்கி அவனுக்காகவே ஒருவரை பொருந்திக்கொள்ள வேண்டும்.
நற்குணத்தை இல்லாமல் ஆக்கக்கூடியவைகள்:
பெருமை, பொறாமை, கல்நெஞ்சம், நல்லுபதேசத்தை ஏற்க மறுத்தல், தலைமைத்துவம் உயர்ந்த பதவிகளையும் எதிர்பார்த்தல், தான் செய்த செயலுக்கு புகழை எதிர்பார்த்தல் போன்ற அனைத்து விஷயங்களும் நற்குணைத்தை இல்லாமலாக்குகின்ற  காரியங்களாகும். இவைகள் அனைத்துமே தற்பெருமை உள்ளவர்களிடமிருந்தே உருவாகின்றன. தீய விஷயங்கள் அனைத்துமே நற்குணத்தை பாழாக்கக் கூடியவை ஆகும். நல்ல விஷயங்கள் அனைத்துமே நற்குணத்திற்கே உரிய பண்பாகும்!                            .
நற்குணம்  என்பது உயர்ந்த பண்பாகும், அதனது கூலியையும் பண்பையும் எடுத்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும். அதனை விட்டு தடுக்கக்கூடிய பொறாமை, பிறரை நாவினால் நோவினை செய்தல், நேர்மையின்மை,. கோல், புறம், கஞ்சத்தனம், உறவினர்களை துண்டித்து நடத்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் நாளாந்தம் ஐந்து தடவைகள் தனது மேனியை சுத்தம் செய்கின்றான். உலகத்தில் மக்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும், தீய குணங்களை விட்டும் நீக்க வருடத்தில் ஒரு முறையாவது முயற்ச்சிக்காதது ஆச்சரியமான விஷயமாகும்!
கோபத்தை விட்டு விட்டு நம்மை சூழ உள்ள பெற்றோர்கள், மனைவியர்கள், குழந்தைகள், நண்பர்கள், அறிந்தவர்கள் அனைவர்களுடனும் சிறந்த முறையில் வாழ்ந்தவர்கள், இனிமையான பேச்சுக்களையும், முக மலர்ச்சியுடனும் இருக்கின்றவர்கள் இவர்கள் அனைவருமே நற்குணத்தின் மூலம் உயர்ந்த நற்கூலியை பெறத்தகுதியானவர்களே!.
நபி (ஸல்) அவர்கள்  நல்லுபதேசத்தின் போது சுருக்கமாக அழகாக நற்குணத்தைப் பற்றி  குறிப்பிட்டார்கள்:
“எங்கிருந்த போதிலும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஒரு தீமையை செய்தால் அதனை தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்யுங்கள்! இதனால் தீமைகள் அழிந்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் நடந்துகொள்ளுங்கள்”
நாம் அனைவரும் நபிகளார் கூறிய “மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்கள், நற்குணமுடையவரே!” எனற கூட்டத்தில் இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

www.islam-bdmhaja.blogspot.com