அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 07, 2015

மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே !

ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்
எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப்
படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின்
வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து
இக்கட்டுரையில் காண்போம்.
 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து
அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31)
 மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன்
பக்கமே (பாவத்தை விட்டும்) தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்!…
(அல்குர்ஆன்11 :3)
 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் கலப்பற்ற தவ்பாவாக
(தூய்மையான பாவ மீட்சியாக) தவ்பாச் செய்து கொள்ளுங்கள்…. ( அல்குர்ஆன்
66:8)

ஞாயிறு, அக்டோபர் 19, 2014

பாவ மீட்புப் பெற எளிதான வழி

அல்லாஹ்வின் திருபெயரால் ............

பாவங்கள் செய்யாத மனிதர்கள் இல்லை , பாவம் செய்து பிறகு மனம் திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல் ஒரு சிறந்த மனிதர் ஆவார். பாவங்கள் செய்துக் கொண்டே கடைசியாக பாவமன்னிப்பு கோரலாம் என்று எண்ணிக் கொண்டு அலச்சியமாக இருக்கக் கூடாது. மரணம் எப்பொழுதும் வரலாம் . எப்பொழுதும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருதல் ஒரு சிறந்த செயல் ஆகும். முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்ட அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களே ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு அதிகமாக பாவமன்னிப்பு கோரினார்கள் என்பது ஒரு ஹதீஸின் கருத்து.

திங்கள், ஏப்ரல் 21, 2014

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்..

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற  [மனதோடு] அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள் ,, உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான் ,, அவற்றின் கீழே ஆறுகள்  [சதா] ஓடிக் கொண்டே இருக்கும்,, [தன் ] நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ்  இழிவுபடுத்தமாட்டான் ,, [அன்று ஈடேற்றம் பெற்ற] அவர்களுடைய பிரகாசம் [ஒளி ] அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்,  அவர்கள்  ''எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்'' என்று கூறி[ப் பிரார்த்தனை செய்து] கொண்டு இருப்பார்கள்.

வியாழன், ஏப்ரல் 03, 2014

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

நபிமார்கள் கேட்ட துஆக்கள்
  01. துஆக்கள் ஏற்கப்பட
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127-128)