அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பொறாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொறாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 27, 2014

கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது[ கண்திருஷ்டி]



கண்ணேறு தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது தொடர்பில் இப்பகுதியில் விரிவாக ஆராய்வோம். கண்ணேறுக்கு அரபியில் “العَيْنُ” என்று சொல்வார்கள். நமது சமூகத்தில் கண்ணூறு, கண்படுதல் என்று சொல்கிறார்கள். நன்றாக சாப்பிடும் குழந்தைக்கு வீட்டுக்கு வெளியில் சென்று உணவூட்டமாட்டார்கள். குழந்தை சாப்பிடுவதைப் பார்த்து யாராவது கண்பட்டு விடுவார்கள் என்ற பீதியே இதற்குக் காரணமாகும். புதிய வாகனமொன்றை வீட்டுக்குக் கொண்டு செல்லும் போது அதில் அலங்கோலமாக் கீறி வைத்திருப்பார்கள். வாகனத்தைப் பார்த்து மக்கள் கண்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமாகும். புதிய வீடுகளில் கொடும்பாவிகளைத் தொங்க விடும் வழமையும் இந்நம்பிக்கையால் விளைந்ததே. இந்துக் கலாசரத்தால்  பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இலங்கையில் மாத்திரமல்லாமல் மேற்கு நாடுகளிலும் இந்த நம்பிக்கைகள் காணப்படுகின்றன. விஞ்ஞான ரீதியில் இது சாத்தியமாகுமா என்று ஆய்வு செய்யுமளவுக்கு இந்தப் பாதிப்புக்கள் அங்கு செல்வாக்குப் பெற்றுள்ளன. இஸ்லாமிய அடிப்படையில் இது பற்றி ஆராய முன்னர் நடைமுறையில் கண்களால் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.

சனி, ஜூன் 01, 2013

பொறாமை

பொறாமை !

பொறாமை என்பது தீன் மற்றும் உலகின் பாக்கியங்கள் ஒருவரை விற்றும் நீங்கி விட வேண்டுமென ஆசைபடுவதாகும்.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் மீது ,அவர்கள் மக்களைப் பொறாமைப்படுகிரார்களா ? (அல்குர் ஆன் 4:54)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: பொறாமை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்.நிச்சயமாக பொறாமை ,நெருப்பு விறகைத் தின்பதைப் போல நன்மைகளைத் தின்றுவிடும்-அல்லது காய்ந்த புல்லை நெருப்புத் தின்பது போல நன்மைகளைத் தின்றுவிடும்.(அபூ தாவூது)


ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :நபி (ஸல்) கூறினார்கள் :நீங்கள் ஒருவர்கொருவர் கோபமும் ,விரோதமும் கொள்ளாதீர்கள் .பொறாமைப் படாதீர்கள்.புறக்கணிக்காதீர்கள் .உறவைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள் .அல்லாஹ்வின் அடியார்களே!நீங்கள் சகோதரர்களாக ஆகிவிடுங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது.(புகாரி,முஸ்லிம்)


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும்! இது பழமொழி . நாம் படிப்பினை பெற ,நம்முடைய வாழ்க்கையை சீர்திருத்தி கொள்ள நமக்கு அல்லாஹ்வின் ஒரு வசனமும் ,அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸ் போதும்!

நாம் தனிமையில் அமர்ந்து சிந்தித்து பார்த்தால் ,நமக்கு ஒரு தெளிவான வாழ்க்கையின் பொருள் விளங்கும்!  ஒருவர் மீது நாம் பொறாமை படுவதினால் என்ன ஆகும் என்பதை ஹதீஸ் விளக்கம் நமக்கு போதும்! ஒருவருக்கு அல்லாஹ் கொடுத்த அருட்கொடை மீது பொறாமை கொள்வதினால் ,அல்லாஹ்வின் கோபத்துக்கும் ,நன்மை இழப்பதற்கும் ஆளாகிவிடுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உண்மையை மட்டும் உரைப்பவர் ! நாம் சிந்தித்து பார்த்தால் நாம் நிறைய பலன்கள் அடைய முடியும் ! இந்த தீய விடயத்திலிருந்து நாம் அல்லாஹ்வின் உதவி கொண்டு தப்பிக்க முடியும்! 

இன்று , நாம் ஒருவர்கொருவர் புறக்கணித்து வாழ்கிறோம் ,விரோதம் கொள்கிறோம் , தேவை இல்லாமல் கோபம் கொள்கிறோம் .இவைகள் அனைத்தும் நம்மை விட்டு விலக் வேண்டும்! நாம் முஸ்லிம்மாக இருக்கிறோம் ,ஆனால் வாழ்கிறோமா? பிறர்களுடைய குறைகளை நாம் துருவி துருவி ஆராயிகிறோம் ,ஆனால் நம்மிடத்தில் குறைகள் இருப்பதை நாம் மறந்து விடுகிறோம்!


புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் ,அவர்கள் நம்மை முந்தி கொண்டு செல்கிறார்கள் . நாம் பிறப்பில் முஸ்லிம்கள் இன்னும் பழைய பழக்க வழக்கங்கள் மாற்று மத செயல்கள் நம்மை விட்டு போக வில்லை . இஸ்லாத்தின் பெயரால் புதிய நுதனங்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் ,அவர்கள்  அவைகளை விட்டு இன்னும் மாறவில்லை .


உண்மையை சொன்னால் ,நம் மீது கோபம் கொள்கிறார்கள் ,விரோதம் கொள்கிறார்கள், நம்மை விட்டு புறக்கணித்து வாழ்கிறார்கள் ,சில நேரம் பொறாமை கொள்கிறார்கள் . மேலே உள்ள ஹதீஸை கொஞ்சம் கவனமாக பாருங்கள்! சிந்தீயிங்கள் ! பொறாமைனால் நிறைய கெடுதிகள் இருக்கிறது , பொருமைனால் நிறைய பலன்கள் இருக்கிறது! இம்மைக்கும் ,மறுமைக்கும் .