அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 14, 2017

​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும், இணைந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு



​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும், இணைந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு💕💑👫🔐💯☔🌠🌋



திருமண வாழ்வில் இணையத்துடிக்கும், இணைந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு கனிவார்ந்த ஸலாம்…

அஸ்ஸலாமு அழைக்கும்

துவக்கத்தில், உங்கள் இல்வாழ்க்கை சீறும் சிறப்புமாக நடைபெற என் மனமார்ந்த பிரார்த்தனைகளைக் காணிக்கையாக்குகின்றேன். மனிதவாழ்வின் அனைத்துக் கட்டங்களுக்கும் தேவையான வழிகாட்டல்களைப் போதிக்கும் மார்க்கமாக இஸ்லாம் அமையப் பெற்றுள்ளது. அக்கட்டங்களை அடையக்கூடியவர்கள் தத்தமது கட்டத்திற்குத் தக்க வழிகாட்டல்களை எடுத்துக் கொள்வது கடமையாகும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தளவில் அது ஆரம்பத்திலிருந்தே சீர்செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கேற்ற வழிகாட்டல்களை எல்லாம் அறிந்த அல்லாஹ் ஒருவனால் மாத்திரமே வழங்க முடியும். அத்தகைய வழிகாட்டல்களைத் தந்தவனும் எம்மிடத்தில் அதன் பிரதிபளிப்பு காணப்படவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றான். எனவே, அப்போதனைகளை சமுகத்திற்கு மத்தியில் தெளிவுபடுத்தும் பாரிய பொறுப்பு உலமாக்களையே சாரும் என்ற அடிப்படையில் அதில் ஒரு முயற்சியாக இத்தாள் உங்கள் கரங்களை வந்தடைந்துள்ளது. தயவு கூர்ந்து சில நிமிடங்களைச் செலவு செய்து சற்று நிதானமாக இதனை வாசித்துப் பாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக!