அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
மனிதன் இறந்தபின் அவனை மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு . பிறகு அவனுக்கு அங்கே என்ன நடக்கும் ? என்ன ஆகும் ? என்பதை நபிமொழிகள் மூலமாக நாம் அறிய முடியும். மண்ணறையில் வேதனை செய்யப்படுபவர்களும் உண்டு , வேதனையிலிருந்து பாதுக்காப்பு பெற்றவர்களும் உண்டு. அண்ணல் நபி [ஸல்] அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து [அல்லாஹ்விடம்] பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை என்று ஒரு நபிமொழி கூறுகிறது. நாமும் ஒவ்வொரு தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் அல்லாஹ்விடம் கோரவேண்டும்.
ஆயிஷா [ரலி] அவர்கள் கூறியதாவது..
மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து [பேசிக்கொண்டிருந்தபோது] ''மண்ணறைவாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர் '' என்று கூறினர் . அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப்படவில்லை . பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி [ஸல்] அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் , ''அல்லாஹ்வின் தூதரே! இரு மூதாட்டிகள் [என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்] என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு நபி [ஸல்] அவர்கள், ''இருவரும் உண்மையே சொன்னார்கள். [மண்ணறையிலிருக்கும் பாவிகள்] கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை [யால் அவதியுறும் அவர்களின் அலறல்] தனை எல்லா மிருகங்களும் செவியுருகின்றன'' என்று சொன்னார்கள். அதற்குப்பின் நபி [ஸல்] அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து [அல்லாஹ்விடம்] பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.
ஆதாரம் .. புகாரீ]
ஆயிஷா [ரலி] அவர்கள் கூறியதாவது..
ஒருவர் நிரந்தரமாக [த் தொடர்ந்து] செய்யும் நற்செயலே அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.
இந்த ஹதீசையும் நாம் மனதில் நன்றாக பதியவைத்துக் கொள்ளவும். அதேபோல கீழே உள்ள ஹதீசையும் நாம் பதியவைத்துக் கொள்ளவும். நற்செயல்கள் எதுவும் ஒருபோதும் காப்பாற்ற முடியாது , மாறாக அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்கள்.]
அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறியதாவது ..
அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் ''உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. [மாறாக அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றபடுவார்] '' என்று கூறினார்கள் . மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா [தங்களது நற்செயல் காப்பாற்றாது?] என்று வினவினார்கள். நபி [ஸல்] அவர்கள் ''[ஆம்] என்னையும்தான் ,, அல்லாஹ் [தனது] அருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர '' என்று கூறிவிட்டு ''[ஆகவே] நேர்மையோடு [நடுநிலையாகச்] செயல்படுங்கள் . நிதானமாக நடந்துகொள்ளுங்கள். [வரம்பு மீறிவிடாதீர்கள்] காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். [எதிலும்] நடுநிலை [தவறாதீர்கள்] நடுநிலை [யைக் கடைப்பிடியுங்கள்] [இவ்வாறு செய்தால் இலட்சியத்தை] நீங்கள் அடைவீர்கள் '' என்று சொன்னார்கள்.
ஆதாரம் .. புகாரீ]
அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
நேர்மையோடு [நடுநிலையாகச்] செயல்படுங்கள் . நிதானமாகச் செயல்படுங்கள் . [வரம்பு மீறிவிடாதீர்கள்] அறிந்துகொள்ளுங்கள் .. உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. மாறாக. அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்] நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. எண்ணிக்கயில்] குறைவாக இருந்தாலும் [தொடர்ந்து செய்யப்படும்] நிலையான நற்செயலே ஆகும் .
இதை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .
ஆதாரம் .. புகாரீ]
சென்றுவிடலாம் என எண்ணலாகாது.. மாறாக அதற்கு இறைவனின் அருளும் கருணையும் வேண்டும் நம்முடைய நற்செயல்களை ஏற்கவோ நிராகரிக்கவோ இறைவனுக்கு அதிகாரம் உண்டு. அவ்வாறு ஏற்க்கப்பட்டாலும் அதுவும் அவனது கருணையால்தான். ஏற்றபிறகு அதற்குப் பிரதிபலனாகச் சொர்க்கத்தை அவன் வழங்குவதும் அவனது கருணையால்தான். ஆனால் குர்ஆனில் , ''நீங்கள் செய்துகொண்டிருந்த [வழிப்பாடு , நற்செயல் ஆகிய] வையின் காரணத்தால் இந்தச் சொர்க்கத்தை நீங்கள் உடமையாக்கிக்கொண்டீர்கள் '' என்று இறைவன் கூறுகின்றான். [43.72] இதன்படி சொர்க்கம் செல்வதற்கு மனிதனின் நற்செயல்களே காரணம் என்றாகும் . இதன் விளக்கம் யாதெனில் .. சொர்க்கத்தில் பல படித்தரங்கள் உள்ளன . சொர்க்கத்தினுள் சென்றவர்கலெல்லாரும் எல்லாப் படித்தரங்களையும் அடைந்து விட முடியாது . இம்மையில் அவரவர் புரிந்த நற்செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் உயர் தகுதி வழங்கப்படும் இவ்வாறு சொர்க்கத்தில் உயர் பதவிகளை அடைய நற்செயல்கள் காரணமாகின்றன. இதையே இவ்வசனம் குறிக்கிறது. சொர்க்கத்தில் நுழைய வேண்டுமானால், அதற்கு இறையருள் ஒன்றே காரணமாகும்.. நற்செயல்கள் காரணமல்ல. இக்கருத்தையே இந்த நபிமொழி தெரிவிக்கின்றது.
அப்படியானால் ''நீங்கள் செய்துகொண்டிருந்த [நற்செயல்கள் வழிபாடுகள் ஆகிய ] வற்றுக்காக நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள் என வானவர்கள் கூறுவார்கள் ''என்று குர்ஆனில் மற்றொரு வசனம் [16.32] சொல்வதற்கு பொருள் என்ன ? இங்கு சொர்க்கத்தில் நுழைவதற்கே நற்செயல்கள்தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே! இதற்கு விளக்கம் என்ன ? இந்த வசனத்திற்கு நபிமொழியை கருத்தில் கொண்டே விளக்கம் அளித்திட வேண்டும். அதன்படி ''சொர்க்கத்தின் படித்தரங்களில் அல்லது உயர் மாளிகைகளில் நுழையுங்கள் என்றே பொருள் கொள்ளப்படும்.
இதன் மூலம் நாம் விளங்கிக் கொண்டது என்னவென்றால் , சொர்க்கத்தில் நுழைவது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணை . சொர்க்கத்தில் அதிகம் அதிகம் உயர்ந்த படித்தரங்கள் கிடைக்க வேண்டும் என்றால் இந்த உலகத்தில் நாம் அதிகம் அதிகம் நற்செயல்கள் புரிய வேண்டும். அவைகளில் எதையும் அல்லாஹ்வுக்கு இணையாகக கூடாது . அல்லாஹ்வின் திருபொருத்தம் மட்டும் கிடைக்க வேண்டும் என்று தூய எண்ணத்துடன் நாம் அமல்கள் செய்ய வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!