RECENT POSTS

ஜின்கள் மனிதனுள் புகுந்தால் ஓதி பார்க்கும் முறை பற்றி அறிந்து கொள்ளுவோம்.

 




ஜின்கள் மனிதனுள் புகுந்தால் ஓதி பார்க்கும் முறை பற்றி அறிந்து கொள்ளுவோம்.

நன்றி :இஸ்லாமியபுரம் .

• அல்லாஹ்வின் அற்புத படைப்புகளில் ஜின்களும் ஒன்றாகும் இதை பற்றி அல்குர்ஆனிலும் ஸஹீஹான பல ஹதீஸ்களிலும் நம்மால் காண முடியும்!



• ஜின்கள் மனிதர்களை விட மிகவும் ஆற்றல் மிக்க ஒரு படைப்பு ஆகும் இவர்கள் நம்முடைய கண்களுக்கு புலப்பட மாட்டார்கள் ஆனால் அவர்களின் கண்களுக்கு நாம் தெரிவோம்!



• ஜின்கள் மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சில காரணங்களால் தீங்கு ஏற்படுத்தும் அது உள்ளம் உடல் சார்ந்ததாக இருக்கலாம்! இதற்கு பல ஸஹீஹான ஹதீஸ்கள் உள்ளன!



• நம்மில் பலருக்கு இதில் இருந்து குணம் ஆக வழி தெரியாததால் பல மக்கள் சூனியகாரர்கள் காஃபிர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்கள் போன்றவர்களிடம் இதற்கு தீர்வு தேடி செல்லுகிறார்கள்! அவர்களும் சில கண்கட்டி வித்தைகளை காட்டி பல ஆயிரம் ரூபாய் வாங்கி கொள்ளுகிறார்கள்! இது ஷிர்க் ஆனா செயல் ஆகும்!



• நாம் இவர்களிடம் இவ்வாறு செய்ய கூடாது என்று எடுத்து கூறினால் அவர்கள் கேள்வி இதற்க்கு மார்க்கம் கூறும் தீர்வு தான் என்ன? அதற்க்கு வழி தெரியாமல் தான் நாங்கள் இவ்வாறு செல்லுகிறோம் என்று கூறுகிறார்கள்! 



• இது தற்பொழுது மட்டும் அல்ல ஆரம்ப காலத்திலும் இந்த பிரச்சனை இருந்தது இதனால் இமாம் வஹீது இப்னு அப்துல் ஸலாம் பாலீ அவர்கள் ஜின்கள் தீண்டுதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் எப்படி அதை அணுக வேண்டும் என்று நூலை அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீஸ்கள் அடிப்படையில் மிக தெளிவாக ஒரு கிதாப் எழுதி உள்ளார்!



• அந்த நூல் பெயர் ஜின்கள் மற்றும் ஷைத்தானின் தீண்டுதலை விட்டு பாதுகாப்பு பெற வழிகள் என்பது ஆகும்! நாங்கள் இந்த நூலை அடிப்படையாக வைத்தே இந்த பதிவை நாங்கள் எழுதி உள்ளோம்! 



• இந்த நூலை இமாம் வஹீது இப்னு அப்துல் ஸலாம் இப்னு பாலி (ரஹ்) என்பவர்கள் எழுதி உள்ளார்கள்!



• இமாம் அவர்கள் எகிப்து நாட்டை சார்ந்த மார்க்க அறிஞர் ஆவார்கள்! ஹிஜ்ரி 1386 (கிபி : 1963) பிறந்தார்கள்! மார்க்க கல்வியில் சிறந்து விளங்கிய அறிஞர்களில் இவரும் ஒருவர் ஆவார்! இது மட்டும் அல்ல குறிப்பாக சூனியம், ஜின், ஷைத்தான் தீண்டுதல் போன்றவற்றை மார்க்கம் கூறிய முறையில் ஓதி பார்ப்பதிலும் சிறந்தது விளங்கினார்!



💟 ஜின்கள் :



• ஜின்கள் மறைவான ஒரு படைப்பு ஆகும் இதை முஹ்மின் பார்க்க வில்லை என்றாலும் அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்! இதை நம்ப மறுப்பது ஒருவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும்!



(அல்குர்ஆன் : 2 : 1 & 3)



• ஜின்கள் பற்றி அல்லாஹ் பல இடங்களில் அல்குர்ஆனில் கூறி உள்ளான்!



(அல்குர்ஆன் : 46 : 29 | 6 : 130 | 55 : 33 | 72 : 1 & 6)



• ஜின்கள் பற்றி ஸஹீஹான ஹதீஸ்களிலும் விரிவாக இடம் பெற்று உள்ளது :



(நூல் : ஸஹீஹ் புகாரி : 609 | ஸஹீஹ் முஸ்லீம் : 766 & 767)




ஜின்கள் பற்றிய அறிமுகம் :



1) அல்லாஹ் ஜின்களை நெருப்பினால் படைத்தான்! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்ந்தவன் ஆவான்!



(அல்குர்ஆன் : 55 : 15 | 38 : 76)



2) ஜின்களில் மூன்று வகை உண்டு அவை : 1) இறக்கை கொண்டு காற்றில் பறக்கும் ஜின்கள்! 2) பாம்பு அல்லது தேள்கள், கருப்பு நிற நாய்கள் வடிவில் உள்ள ஜின்கள் ஆகும்! 3) பயணம் செய்ய கூடிய - ஓரிடத்தில் தங்கி வாழும் ஜின்கள்!



(நூல் : ஹாகீம் : 3702 | முஸ்லீம் : 882 | ஸஹீஹ் ஜாமிஅ : 3114 - தரம் : ஸஹீஹ் : அல்பானி (ரஹ்))



3) ஜின்கள் பொதுவாக பாலைவனம், மனித நடமாற்றம் இல்லாத இடங்கள் பொந்துகள் போன்ற இடங்களில் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன! இன்னும் சில ஜின்கள் குப்பைக்கூளம் அசுத்தமான இடங்களிலும் இன்னும் சில ஜின்கள் மனிதர்கள் வசிக்கும் வீடுகளிலும் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன!



(நூல் : ஸஹீஹா : 1070 : அபூதாவூத் : 29 | முஸ்லீம் : 4502)



4) ஜின்களிலும் மனிதர்களை போன்று ஆண், பெண் உள்ளனர்!



(அல்குர்ஆன் : 72 : 6)



5) ஜின்களும் மனிதனை போன்று உண்ணவும், பருகவும் செய்கின்றன! ஜின்களின் உணவுகள் எலும்புகள், கெட்டியான சாணம் போன்றவைகள் ஆகும்!



• ஜின்கள் மனிதர்களை போன்று வலது கையால் சாப்பிடாது மாறாக இடது கையால் உண்ணவும் பருகவும் செய்யும்!



(நூல் : புகாரி : 762 | இப்னு மாஜா : 3266)



6) ஜின் என்ற பெயருக்கு அர்த்தம் மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது ஒன்று என்பதாகும்! நபி மார்களை தவிர மனிதர்களால் ஜின்களை உண்மையான உருவத்தில் பார்க்க முடியாது!



• ஆனால் ஜின்கள் உருவம் மாறி வந்தால் அப்போது நம்மால் அதை காண முடியும் ஆனால் இவர் அல்லது இந்த விலங்கு ஜின் தான் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது!



(நூல் : புகாரி : 2311)



7) ஜின்களுக்கும் நம்மை போன்று கடமை உண்டு அவர்களையும் அல்லாஹ் தன்னை வணங்கவே படைத்து உள்ளான்! அவர்களுக்கும் மார்க்கத்தை எடுத்து சொல்ல நபி மார்களை அல்லாஹ் அனுப்பி உள்ளான்! ஜின்களுக்கும் மரணம் உண்டு! மறுமை நாளில் கேள்வி கணக்கு உண்டு சொர்க்கம் நரகம் உண்டு!



(அல்குர்ஆன் : 6 : 130 | 51 : 56 | புகாரி : 7383)



8) மனிதர்கள் எப்படி நல்லவர்கள் கெட்டவர்கள்! பல மதங்களை பின் பற்றி கொண்டு பல கொள்கைகளாக உள்ளார்களோ அதே போன்று ஜின்களிலும் நல்லது கெட்டது மார்க்கத்தை முழுமையாக பின் பற்ற கூடியவை ஷிர்க்கில் ஈடுப்பட கூடியவை என பல பிரிவுகள் மத கொள்கைகள் உள்ளன!



(அல்குர்ஆன் : 72 : 11)



9) மனிதர்கள் மூலம் எவ்வாறு கண்ணேறு ஏற்படுகிறதோ அதே போன்று ஜின்கள் மூலமாகவும் கண்ணேறு ஏற்படும்! இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஜின்களின் கண்ணேறில் இருந்தும் பாதுகாப்பு தேடி வந்தார்கள்!



(நூல் : திர்மிதி : 2058 | ஸஹீஹ் ஜாமிஅ : 4902)



10) ஜின்கள் - ஷைத்தான்கள் எல்லாம் சூரியன் மறையும் மஹ்ரிப் நேரத்தில் தான் அதிகம் பரவுகின்றன! இதனால் தான் இந்த நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் வீட்டின் கதவுகளை மூடி வைக்க சொன்னார்கள் மேலும் குழந்தைகளையும் வெளியே விட வேண்டாம் என்றும் கூறினார்கள்!



(நூல் : புகாரி : 3304)



11) மனிதர்களால் ஜின்களை பார்க்க முடியாது என்றாலும் ஜின்களை நாய்கள் மற்றும் கழுதைகள் பார்க்கின்றன இதனால் தான் பல நேரங்களில் குறிப்பாக இரவு நேரங்களில் அவை கத்துகின்றன!



(நூல் : புகாரி : 3303 | அபூதாவூத் : 4439)



12) அல்லாஹ் ஏதேனும் செய்ய நாடினால் அதை மலக்கு மார்களிடம் கூறுவான் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதை பேசி கடைசி வானம் வரை அந்த செய்தி செல்லும்! நபி (ஸல்) அவர்கள் நபியாக அல்லாஹ் தேர்வு செய்வதற்கு முன்பு வரை ஜின்கள் மூன்றாம் வானம் வரை சென்று மலக்கு மார்கள் பேசுவதை ஓட்டுக்கேட்டு வந்தன! நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்வு செய்த பின்பு இருந்து அல்லாஹ் இவ்வாறு நடப்பதை தடுத்து விட்டான்!



• இந்த செய்திகளை ஜின்கள் ரகசியமாக ஓட்டு கேட்டு சூனியகாரர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்களிடம் கூறும் அவர்கள் அது கூறிய செய்தி உடன் பல பொய்களை கலந்து மக்களிடம் கூறுவார்கள் இதனால் தான் சில நேரங்களில் அவர்கள் கூறுவது உண்மையாக இருக்கும்!



• ஆனால் முதலில் நாம் இது போன்ற நபர்கள் கூறுவதை உண்மை என நம்பிக்கை கொள்ள கூடாது ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் இது போன்ற நபர்கள் கூறுவதை உண்மை என்று நம்பிக்கை கொண்டால் அவருடைய 40 நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறி உள்ளார்கள்!



(நூல் : புகாரி : 3210 | முஸ்லீம் : 4487 & 4488)



13) ஜின்கள் உதவி பெற சிலர் உதாரணமாக பால் கிதாப் பார்க்க கூடியவர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்கள் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைப்பார்கள் இதன் மூலம் ஜின்களின் நெருக்கத்தை பெறுகிறார்கள்!



• இன்றும் பலர் ஜின்களிடம் இருந்து பாதுகாப்பு பெற என்று தகடு தாயத்து அணிந்து கொள்ளுவார்கள் ஆனால் உண்மையில் அதில் உள்ளவைகள் அல்குர்ஆன் வசனங்கள் மட்டும் அல்ல அல்லாஹ்வை மறுத்து ஜின்களிடம் உதவி தேடும் வாசகமும் அதில் அடங்கி இருக்கும்! இதை பற்றி அறியாத பலர் இதை வாங்கி அணிந்து கொள்ளுகிறார்கள்!



• ஜின்களிடம் உதவி பெற அவற்றிற்கு அறுத்து பலியிடுவார்கள்! அல்லாஹ்வை நிராகரித்து ஜின்களை அல்லாஹ்வின் அளவிற்கு புகழ்வார்கள் இதனால் தான் ஜின்கள் இது போன்ற நபர்களுக்கு உதவி செய்ய முன் வருகின்றன! ஆனால் இது குஃப்ர் (இறை நிரகாரிப்பு) ஆனா செயல் ஆகும்!



• இது மட்டும் அல்லாமல் ஆரம்ப காலத்தில் ஜின்கள் மனிதர்களை பார்த்து பயப்பட கூடியதாக இருந்தன! ஆனால் எப்போது மனிதர்கள் ஜின்களிடம் உதவி தேட ஆரம்பம் செய்தார்களோ அப்போது தான் ஜின்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செய்ய ஆரம்பம் செய்தன!



(அல்குர்ஆன் : 72 : 6 | தப்ஸீர் இப்னு கசிர்  | நூல் : முஸ்லீம் : 1978)



14) மனிதர்களை விட ஜின்கள் அதிகம் ஆற்றல் உள்ளதாக இருந்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் பயப்பட கூடாது எப்போதும் நாம் பயப்பட தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!



(அல்குர்ஆன் : 3 : 175)



15) ஜின்களால் மனிதர்கள் செய்ய முடியாத செயல்களை எல்லாம் செய்வார்கள்! ஜின்களால் காற்றை விட வேகமாக செல்ல முடியும்! வானத்தில் பறக்க முடியும்! ஆழ் கடலில் மூழ்கி முத்துகளை கொண்டு வரும் ஆற்றலும் அவைகளுக்கு உண்டு!



(அல்குர்ஆன் : 27 : 39 | 72 : 9 | 38 : 37)



16) ஜின்களுக்கு அதிகம் ஆற்றல் இருந்தாலும் அவைகளால் மறைவான எதையும் அறிந்து கொள்ள முடியாது! அல்லாஹ் மட்டுமே மறைவானதை அறிந்தவன் ஆவான்!



(அல்குர்ஆன் : 72 : 10 | 34 : 14)




ஜின்கள் மனித உடலுக்குல் புகுவதின்  உண்மை நிலை :



• ஜின்கள் ஒரு மனிதனுள் புகுந்து விட்டால் முதலில் அவனின் மூளையை ஆக்கிரமிப்பு செய்கின்றன! இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பைத்தியம் பிடித்தது போன்று அல்லது சாதாரண மனிதர்கள் போன்று இல்லாமல் மன அளவில் சிந்தனை அளவில் பாதிக்கப்பட்டு போல் நடந்து கொள்ளுவார்கள்!



(அல்குர்ஆன் : 2 : 275 | விளக்கம் : இமாம் குர்துபீ (ரஹ்))



• ஜின்கள் இவ்வாறு சிந்தனை மூலம் பாதிப்பு ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்ட நபர் மன நோயாளி போன்று நடந்து கொள்ளுவார்கள்! வீட்டார் அருகில் இருந்தும் ஏதேனும் அருகில் பார்த்தது போன்று பயம் கொள்ளுவார்கள் சாதாரண மனிதர்கள் போல் இல்லாமல் பிரம்மை பிடித்தது போல் இருப்பார்கள்!



• நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே சிலர் ஜின்களின் தீண்டுதலால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள் அதை அல்லாஹ்வின் உதவினால் குணம் படுத்தியும் உள்ளார்கள்! உதாரணத்திற்கு சில ஹதீஸ்களை இங்கே குறிப்பிடுகிறோம்!



1) நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது ஒரு பெண்மணி நபியவர்களை கண்டு தன்னுடைய மகனுக்கு அடிக்கடி நோய் ஏற்படுகிறது என்று கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் அந்த குழந்தை வாங்கி குழந்தை வாயை திறந்து ‘ அல்லாஹ்வின் பெயரால் நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன்! அல்லாஹ்வின் எதிரியே நீ வெளியேறி விடு ’ என்று மூன்று முறை கூறினார்கள்! இதன் பின்பு அந்த குழந்தைக்கு உடல் குணம் ஆகி விட்டது!



(நூல் : முஸன்னஃப் இப்னு அபீஷைபா : 31753)



2) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தனது மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளையுடன் வந்தால் தனது பிள்ளை நிலையை நபி (ஸல்) அவர்களிடம் அந்த பெண்மணி கூறினால் நபி (ஸல்) அவர்கள் அந்த பிள்ளையிடம் அல்லாஹ்வின் எதிரியே வெளியேறி விடு நான் அல்லாஹ்வின் தூதராவேன்!  என்று கூறியது அந்த பிள்ளை குணம் ஆகி விட்டது!



(நூல் : அஹ்மத் : 17584 | ஸஹீஹா : 485)



3) நபி (ஸல்) அவர்கள் கெட்ட மரணத்தை விட்டு பாதுகாப்பு தேடும் பொழுது ஷைத்தானின் தீண்டுதல் ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு தேடி உள்ளார்கள்!



اَلَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ



‘ அல்லாஹும்ம இன்னி அஊது பிக்க அய் யத்தகப்பதனியஷ் ஷைத்தானு இன்தல் மவ்த் ’



பொருள் : இறைவா! மரணத்தின் போது ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும்  நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!



(நூல் : நஸயீ : 5532 | அபூதாவுத் : 1552)



4) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்!



(நூல் : முஸ்லிம் : 4386)




ஜின்கள் மனிதனுள் புகுவதற்கு காரணங்கள் :



• மனிதன் ஜின்களால் தீண்டப்பட மிக முக்கிய காரணம் சில நபர்கள் இஸ்லாம் கூறிய முறையில் முதலில் வாழ மாட்டார்கள் பெயர் அளவில் முஸ்லீம் ஆக இருப்பார்கள்! இஸ்லாம் தடுத்த ஹராமான மானக்கேடான செயல்களில் அதிகம் மூழ்கி இருப்பார்கள்!



• வணங்க வழிபாடுகளை விட்டு இவர்கள் தூரம் போகும் பொழுது இவர்களுடைய ஈமான் மிகவும் குறைந்து விடும் இதனால் சிறிய நிகழ்வுகளுக்கு எல்லாம் அதிகம் பயப்படுவார்கள்!



உதாரணமாக : வீட்டில் பால் தீய்ந்து விட்டால் ஏதேனும் நடந்து விடும் வெளியே செல்லும் பொழுது கால் தடுக்கினால் ஏதேனும் ஆகி விடும் இப்படி உள்ளம் மற்றும் செயல் அளவில் அறியாமையினாலும் மூடநம்பிக்கையினாலும் மூழ்கி அதில் செயல் படுத்தி கொண்டும் இருப்பார்கள்! இப்படி பட்ட நபர்கள் எளிதாக ஜின்களால் பாதிப்பு அடைகிறார்கள்!



• இது அல்லாமல் பொதுவாக மூன்று காரணங்களால் ஜின்கள் மனிதர்களை தீண்டுகின்றன அவைகள் ;



1) ஜின்கள் மனிதர்கள் மீது விருப்பம் கொள்ளுதல்



2) மனிதன் அறியாமல் ஜின்னிற்க்கு ஏதேனும் தீங்கு செய்து இருந்தால் அல்லது ஜின் வசிக்கும் இடத்தை ஏதேனும் செய்து இருந்தால்!



3) எந்த காரணமும் இல்லாமல் துன்பம் கொடுக்க மனிதனுள் புகுந்து கொள்ளுதல்!



• குறிப்பாக மனிதன் இருக்கும் மன நிலை பொறுத்து இவை மனிதனுள் புகுகின்றன ;



1) மனிதன் அதிகம் கோவம் கொள்ளும் போது



2) கடுமையாக பயப்படும் பொழுது



3) காம இச்சைகளில் அதிகம் மூழ்கி இருக்கும் பொழுது




ஜின் ஒரு மனிதனுள் புகுந்துள்ளது என்பதற்க்கு அடையாளங்கள் :



• முதலில் நமக்கு உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவம் பார்க்க வேண்டும்! ஏதேனும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்ட உடன் ஜின்னால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டு விட்டது என்று இருந்து விட கூடாது!




கனவின் மூலம் வெளிப்படும் அடையாளம் :



• ஜின்கள் மனிதனை தீண்டி விட்டால் அல்லது உடலில் புகுந்து விட்டால் அதன் வெளிப்பாடாக கனவில் தெரியும் இதை வைத்து நாம் இவர் ஜின்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்!



1) தூக்கமின்மை : ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக உறங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்! நீண்ட நேரம் படுக்கையில் புரண்ட பின்பே உறக்கம் ஏற்படும்!



2) பதற்றம் : தூக்கத்தில் அடிக்கடி பதறி விழிப்பு ஏற்படும்!



3) உறங்கும் பொழுது தன்னை யாரோ அழுத்துவது போல் உணர்வு ஏற்படும் ஆனால் அந்த நேரத்தில் உடலை அசைக்க முடியாது யாரையும் உதவிக்கு அழைக்கவும் முடியாது!



4) அடிக்கடி பயமுறுத்தும் கெட்ட கனவுகள் ஏற்படும்!



5) தூக்கத்தில் திடீர் என அழுவது சிரிப்பு அல்லது கத்துவது!



6) நம்மை அறியாமல் உறக்கத்தில் எழுந்து நடமாடுதல்!



7) கனவில் பாலைவனம் அல்லது மனித நடமாற்றம் இல்லாத இடங்களை அல்லது பயத்தை ஏற்படுத்தும் இடங்களில் காணுதல்!



8) உடல் வலி : சாதாரணமாக உள்ள ஒருவருக்கு ஜின் உடைய தாக்கம் அல்லது உடலினுள் புகும் பொழுது உடலில் திடீர் என்று வலி ஏற்படும் மருத்துவம் பார்த்தாலும் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் ஆனால் உடலில் ஏதேனும் ஒரு பாகம் மட்டும் வலி இருந்து கொண்டே இருக்கும்!




உடல் சார்ந்த பாதிப்புகள் :



• ஜின்கள் மனிதனை தீண்டி விட்டால் அல்லது உடலில் புகுந்து விட்டால் அதன் வெளிப்பாடாக உடல் அளவிலும் தெரியும் இதை வைத்து நாம் இவர் ஜின்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்!



1) எப்போதும் தலைவலி இருக்கும் அல்லது உடலில் குறிப்பிட்ட பகுதியில் வலி இருந்து கொண்டே இருக்கும் ( நாம் முதலில் மருத்துவம் பார்க்க வேண்டும் - உடல் வலி ஏற்பட்ட உடன் ஜின்னின் தாக்கம் என்று இருந்து விட கூடாது)



2) சிந்தனையினால் அதிகம் குழப்பம் ஏற்படும் இதனால் தொழுகை திக்ர் இன்னும் பிற அமல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும்!



3) உடல் நிலை ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் (மருத்துவம் பார்த்தும் உடல் நிலை சரி ஆகாது அல்லது உடலை பரிசோதனை செய்தாலும் உடல் எந்த பிரச்சனையும் இருக்காது)




ஜின்னால் தீண்டபட்டவர்களை எவ்வாறு குணம் படுத்துவது :



• ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களை அனைவரும் குணம் ஆக்கி விட முடியாது! அவருக்கு என்று சில தனிப்பட்ட குணங்கள் இருக்க வேண்டும் அவை ;



1) அவரின் ஈமான் எந்த வித குறையும் இல்லாமல் உறுதியான அகீதாவில் இருக்க வேண்டும்!



2) முஸ்லீம் ஆக பெயர் அளவில் மட்டும் அல்லாமல் இஸ்லாம் கூறியது போன்று சொல்லிலும் செயலிலும் இருக்க வேண்டும்!



3) அல்லாஹ்வினால் குணப்படுத்த முடியும் என்று உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்!



4) ஜின்களால் ஏற்படும் தாக்கம் அதை எவ்வாறு அணுகுவது என்பதை பற்றி அனுபவம் உள்ள நபராக இருக்க வேண்டும்!



5) தினமும் நேரம் தவறாமல் தொழ கூடியவராக அன்றாட ஓதும் திக்ர்கள் காலை மாலை திக்ர்கள் என அனைத்தும் முறையாக பேணும் நபராக இருக்க வேண்டும்!



6) அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையும் மன உறுதியும் இருக்க வேண்டும்!




எவ்வாறு ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது :



ஓதி பார்க்கும் முன்பு பேண வேண்டியவைகள் :



1) முதலில் நாம் ஓதி பார்க்கும் முன் தொழுது அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்!



2) ஓதி பார்க்கும் இடத்தில் இருந்து உருவப்படம், நாய்கள் இசை கருவிகள் இருந்தால் அதை அகற்ற வேண்டும்!



3) ஷிர்க் வைக்க கூடிய நபர்கள் அந்த இடத்தில் இருக்க கூடாது!



4) ஓதி பார்க்கும் முன் வீட்டாருக்கு அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!



5) பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வாறு உடலில் நிலை (தொடர்ச்சியான உடல் வலி - கெட்ட கனவுகள் ஏற்படுதல்) உள்ளதா? என்று கேட்க வேண்டும்! உறுதியான பின்பே ஓதி பார்க்க வேண்டும்!



6) பாதிக்கப்பட்ட நபர் முதலில் ஒளு செய்து கொள்ள வேண்டும் ஓதி பார்க்கும் நபரும் ஒளு செய்து கொள்ள வேண்டும்!



7) பாதிக்கப்பட்ட நபர் பெண்ணாக இருந்தால் ஆடை விலகாத வாறு நன்கு கட்டி விட வேண்டும்!



8) மஹ்ரமான ஆண் இல்லாமல் பெண்ணிற்கு ஓதி பார்க்க கூடாது!




ஓதி பார்க்கும் முறை :



• ஓதி பார்க்கும் நபர் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை உடன் இருக்க வேண்டும் சில நேரங்களில் ஓதி பார்க்க கூடிய நபரை கூட ஏதேனும் ஒரு வகையில் ஜின்னால் தீண்டப்படலாம்!



• ஓதி பார்க்கும் நபர் பாதிக்கப்பட்ட நபர் ஆணாக இருந்தால் அவரின் தலையில் கை வைத்து அல்லது பெண்ணாக இருந்தால் முன்னால் அமர்ந்து பின்வரும் வசனங்களை ஓத வேண்டும் (பதிவின் விரிவாக்கம் கருதி அல்குர்ஆன் வசனம் எண் மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்) :



1) (அல்குர்ஆன் : 1 : 1 - 7)



2) (அல்குர்ஆன் : 2 : 1 - 5)



3) (அல்குர்ஆன் : 2 : 163 - 164)



4) (அல்குர்ஆன் : 2 : 255 - 266)



5) (அல்குர்ஆன் : 2 : 285 - 286)



6) (அல்குர்ஆன் : 3 : 18 - 19)



7) (அல்குர்ஆன் : 7 : 54 - 56)



8) (அல்குர்ஆன் : 23 : 115 - 118)



9) (அல்குர்ஆன் : 37 : 1 - 10)



10) (அல்குர்ஆன் : 46 : 29 - 32)



11) (அல்குர்ஆன் : 55 : 33 - 36)



12) (அல்குர்ஆன் : 59 : 21 - 24)



13) (அல்குர்ஆன் : 72 : 1 - 9)



14) (அல்குர்ஆன் : 112 : 1 - 4)



15) (அல்குர்ஆன் : 113 : 1 - 5)



• நாம் மேலே உள்ள வசனங்களை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓதி வந்தால் நிச்சயமாக மனிதனுள் இருக்கும் ஜின் பாதிப்பு ஏற்படும்! அது ஒன்று ஓடி விடும் அல்லது மிகவும் பலகீனமாக ஆகி விடும்!



• அல்லது கோவத்தில் ஓதி விட கூடிய நபரை ஏதேனும் ஒரு வகையில் பயத்தை ஏற்படுத்தும் அல்லது மிரட்டும் ஆனால் நாம் உறுதியாக இதை பொறுப்படுத்தாமல் ஓத வேண்டும்!



• சில ஜின்கள் ஓதி பார்க்கும் பொழுது மட்டும் வெளியேறி விடுவது அல்லது நம்முடன் பேச முற்ப்படும்! அப்பொழுது அதை நாம் வெளியேறும் படி கூறவேண்டும் சில ஜின்கள் வெளியேறாமல் உறுதியாக இருக்கும் அப்போது நாம் மீண்டும் மீண்டும் அல்குர்ஆனை மேலே உள்ள வசனங்களை ஓத வேண்டும்!



• ஜின் வெளியேறி விட்டால் பாதிக்கப்பட்ட நபர் சாதாரணமான நிலைக்கு வந்து விடுவார்! இதன் பின்பு நாம் முதலில் அல்லாஹ்விற்கு தொழுது நன்றி செலுத்த வேண்டும்!



• பாதிக்கப்பட்ட நபர் வீட்டில் வழமையாக அல்குர்ஆன் ஓதுவது வீட்டில் பெண்கள் தொழுவது ஆண்கள் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகை வீட்டில் தொழுவது போன்ற காரியங்களில் ஈடுப்பட வேண்டும்!




ஓதி பார்த்த பின்பு :



• நாம் ஓதி பார்த்தாலும் ஜின் ஒன்று அப்போது மட்டும் வெளியேறி விடும் அல்லது அமைதியாக ஆகி விடும்! இதனால் அந்த நபர் சில நாட்கள் பின்பு மீண்டும் பாதிக்கப்படலாம்! இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் சில ஒழுக்கங்களை பேனி வரவேண்டும் வழமையாக :



1) தினமும் ஐந்து நேர தொழுகையை நேரம் தவறாமல் தொழ வேண்டும்!



2) மார்க்கம் தடுத்த ஹராமான செயல்களை விட்டு விட வேண்டும்!



3) உறங்கும் முன்பு இஸ்லாம் கூறிய முறையில் ஒளு செய்து விட்டு திக்ர் துஆ அல்குர்ஆன் வசனம் எல்லாம் ஓதி கொண்டு உறங்க வேண்டும்!



4) மூன்று நாட்கள் ஒரு முறை வீட்டில் அல் பகரா ஓத வேண்டும்!



5) தினமும் அன்றாடம் ஓதும் திக்ர் துஆக்கள் காலை மாலை திக்ர்கள் மற்றும் அல்குர்ஆன் தினமும் ஓதி வர வேண்டும்!



6) ஒவ்வொரு நாளும் பஜ்ர் தொழுகைக்கு பின்பு 100 முறை ‘ லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் ’ என்ற திக்ரை ஓத வேண்டும்!



7) ஒவ்வொரு செயலின் போதும் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பம் செய்யவேண்டும்!



8) பாதிக்கப்பட்ட நபர் சில நாட்களுக்கு தனியாக உறங்க கூடாது!



• மேலே உள்ளவற்றை எல்லாம் நாம் சில மாதங்கள் தொடர்ச்சியாக செய்து வரவேண்டும்! இவ்வாறு செய்த பின்பு மீண்டும் ஒரு முறை நாம் ஓதி பார்க்க வேண்டும் இவ்வாறு ஓதும் போது அந்த நபருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் ஜின் அவரை விட்டு முழுமையாக நீங்கி விட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்!



• ஜின் சென்று விட்டது என்று நாம் அமல்களை விட்டு விட கூடாது அதை தொடர்ந்து செய்து வரவேண்டும்!



-அல்லாஹ் போதுமானவன் 


நன்றி : இஸ்லாமியபுரம் வலைத்தளம் 


கருத்துகள்