அண்ணலாரின் அழகான பொன்மொழிகள் .......
அல்லாஹ்வின் திருப்பெயரால்......
குரோதம் கூடாது****
ஹஜ்ரத் நுஃமான் இப்னு பஷீர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..
''ஒரு தடவை எனது தந்தை, என்னை அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் அழைத்துச் சென்று ''நான் , எனது மகனுக்கு ஓர் அடிமையைக் கொடுத்துள்ளேன் என்றார்கள்.'' ''உமது மற்ற மகன்களுக்கும் இப்படிக் கொடுத்துள்ளீரா? '' என்று கேட்டார்கள், அண்ணலார். ''இல்லை'' என்றார் எனது தந்தை. ''அந்த அடிமையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்! என்றார்கள் அண்ணலார்.
ஆதாரம்... புகாரி, முஸ்லிம் , நஸயீ அபூதாவூத், இப்னுமாஜா]
விளக்கம்***
ஒரு மகனுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு [அதாவது மற்ற மகன்களுக்கு] கொடுக்காமல் இருக்கக் கூடாது எனபதற்கு இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். எல்லோரையும் சமமாக தான் நடத்த வேண்டும் என்கிறது இந்த ஹதீஸின் கருத்து!
தருமத்தில் தாமதம் வேண்டாம்.******
அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் ஒருவர் வந்து ''எத்தகைய தருமம் அவசியமானதும் சிறப்பானதுமாகும்? என்று கேட்டார். அதற்கு அண்ணலார், ''உமது உடல் நிலை நலமாயிருக்கும் நேரத்திலும், செல்வா, சேகரிக்க வேண்டும் என்ற ஆசையும் , தரித்திரம் வந்துவிடும் என்ற பயமும் இருக்கும் பொழுதே தாமதிக்காது கொடுத்துவிடவும். உயிர் தொண்டைக் குழிக்கும் வந்துவிடும் வரை [தாமதிக்காதே] ஒரு பொருளை இன்னாருக்குக் கொடுக்க வேண்டுமென்று கூறிவிட்டால் அப்பொருள் அவருக்குப் பாத்தியமுடையதாகி விடுகிறது'' என்றார்கள்.
ஆதாரம்.. புகாரி, முஸ்லிம் , நஸயீ, அபூதாவூத்]
சத்தியம் செய்வது ****
தந்தை, பாட்டன் பெயரால் சத்தியம் செய்வதை அல்லாஹ் தடுத்திருக்கிறான்,, சத்தியம் செய்வதாயிருந்தால், அல்லாஹ்வின் பெயரால் செய்யவேண்டும்,, அல்லது மவுனமாயிருந்து விட வேண்டும்.
ஆதாரம்.. புகாரி, முஸ்லிம் , திர்மிதி, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா]
குறிப்பு.. சத்தியம் செய்வதாயிருந்தால் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்ய எவ்ண்டும். திருக்குர்ஆன் பெயராலோ, மக்கள் பெயராலோ, அவுலியாக்கள் பெயராலோ, அல்லது அல்லாஹ் அல்லாத இதரோர் பெயராலோ சத்தியம் செய்வதை இஸ்லாமிய ஷரீஅத் தடுத்துள்ளது!
இன்முகத்துடன் பழகுங்கள்!****
நீங்கள் எங்கிருந்தாலும், அல்லாஹ்வைக் கொண்டு பயந்து கொள்ளுங்கள்! தீயதைச் செய்து விட்டால் , அதனை அழிக்க நல்லதைச் செய்து கொள்ளுங்கள்! மக்களுடன் இன்முகத்துடன் பழகுங்கள்!.
ஆதாரம்.. திர்மிதி]
அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம், ''ஏதன் காரணமாக மக்கள் அதிகமாக நரகம் புகுவார்கள்?'' என்று சிலர் கேட்டனர்,, அதற்கு அண்ணலார் , ''நாவு, வெட்கஸ்தலம்'' என்றார்கள். ''ஏதன் காரணமாக மக்கள் அதிகமாக சுவர்க்கம் புகுவார்கள்?'' என்று அவர்கள் கேட்டனர். ''அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் , மக்களுடன் இன்முகத்துடன் பழகுவது என்றார்கள், அண்ணலார்.
ஆதாரம், திர்மிதீ ]
ஒருவர் நரகம் நுழைய காரணம் .. இரண்டு விடயங்கள் ஒன்று.. நாவு அதன் மூலமாகத்தான் நிறைய குழப்பங்களும், வீண் பேச்சும், சச்சரவுகளும், கோள் மூட்டுதல், புறம் பேசுதல், இன்னும் பல தீய செயல்கள் இந்த நாவின் மூலம் தான் நடக்கிறது. வெட்கஸ்தலம் .. விபச்சாரம் , தகாத உறவுகள் .
ஒருவர் சுவனம் நுழைய காரணம்.. இரண்டு விடயங்கள்.. ஒன்று அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம், அல்லாஹ்வின் கட்டளைகளை பூரணமாக நிறைவேற்றுவது! இல்லாவிட்டால் அல்லாஹ் மறுமை நாளில் தண்டிப்பான் என்ற ஒரு அச்சம்! இன்முகம் என்பது ஒரு அழகிய நற்குணம்! நற்குணத்துடன் மக்களுடன் பழகுவது. ஒருவர் தீமை செய்தால், அவருக்கு நாம் நன்மையையே செய்வது இது நற்குணத்தின் ஆரம்பம்! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.....
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்............

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!