வியாழன், அக்டோபர் 27, 2016

இறைவன் காட்டிய வழிமுறையா ..? மனிதன் காட்டிய வழிமுறையா ..?

இறைவன் காட்டிய வழிமுறையா ..? மனிதன் காட்டிய வழிமுறையா ..?
இறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..?

மனிதனை படைத்த இறைவன்  ஒருவனுக்குத்தான்  தெரியும்! மனிதனுக்கு என்ன தேவை என்பது. மனிதனே மனிதனுக்கு சட்டம் வகுக்க முடியுமா ? இது சத்தியம் இல்லை.

ஒரு அருமையான கதை...

ஒரு முஸ்லீம் சகோதரரும் ஒரு ஹிந்து சகோதரரும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இருவரும் விவாதம் செய்கிறார்கள்   ''இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பற்றி'' .  முஸ்லீம் சகோதரர் கூறுகிறார்  ''  ஒருவர் திருடிவிட்டால் அவர் கரத்தை துண்டிக்க வேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது என்று சொல்கிறார் . அதற்கு அந்த ஹிந்து சகோதரர் கூறுகிறார் '' இது மிகப் பெரிய தண்டனை , திருடியவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பது என்பது எனக்கு சரியாகப்படவில்லை''.  அவர் மேலும் கூறுகிறார் .. திருடியவனை தண்டிக்கவேண்டும் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. இருப்பினும் அவனுக்கு சிறை தான் சரியான தண்டனையாக இருக்கும் என்று கூறி முடிக்கிறார் . அதற்கு அந்த முஸ்லீம் சகோதரர் எதுவும் பதில் கூறவில்லை. இருவரும் சென்றுவிடுகிறார்கள்.


சில நாள்களுக்கு பிறகு,  ஹிந்து சகோதரரின் மனைவிக்கு  நோய்வாய்ப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது .. அவரின் மனைவிக்கு வயிற்றில் எதோ ஒரு கட்டி இருப்பதாக மருத்துவர் கூறுகிறார் . இதை கேட்டு அந்த ஹிந்து சகோதரர் அதிர்ச்சியடைகிறார் ! உடனே மருத்துவர் கூறுகிறார் '' உங்கள் மனைவிக்கு உடனே ஆபரேஷன் செய்ய  வேண்டும் ,  உடனே நீங்கள் பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிடுகிறார். அந்த ஹிந்து சகோதரருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது  '' முஸ்லீம் நண்பர் இருக்கிறார் அவரிடம் பணம் கேட்டால் நிச்சயமாக கொடுப்பார் கேட்டு பார்க்கலாம் என்று மனதில் எண்ணியவாறு அவர் வீட்டுக்கு போகிறார் .

வீட்டில் அவரின் நண்பரை பார்க்கிறார் . நடந்த எல்லா விபரத்தையும் அந்த நண்பரிடம் கூறுகிறார் .. அதை கேட்ட அந்த முஸ்லீம் சகோதரர்  ''ரொம்ப மன வேதனை அடைகிறார் . அவருக்கு ஆறுதல் கூறுகிறார் . பிறகு , அந்த முஸ்லீம் சகோதரர் ஒரு பையில் வைத்து பணத்தை கொடுக்கிறார் . அதை அவர் வாங்கி கொண்டு நன்றி கூறி அங்கேயிருந்து புறப்படுகிறார் .

அந்த ஹிந்து சகோதரர் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்  என்பதற்காக உடனே அவசரமாக கூட்ட்டம் அதிகம் இருக்கும் வாகனத்தில் ஏறி  மருத்துவமனைக்கு செல்கிறார் . அவர் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறார் . அவரின் சிந்தனை எல்லாம் அவரின் மனைவி மீது இருந்தது . மருத்துவமனைக்கு போகும் இடம் வந்த உடன் , அவர் இறங்கிவிடுகிறார் . அவர் கையில் வைத்திருந்த பையை பார்க்கிறார் ''பையை காணவில்லை'' அவருக்கு அதிர்ச்சியாகிவிட்டது! என்ன செய்வது என்று புரியாமல் புலம்ப ஆரம்பித்துவிட்டார் . அவர் பணத்தை யாரோ ஒருவர் திருடிவிட்டார்கள் . அவர் பணத்தை இழந்து பரிதாகமாக காணப்பட்டார். பிறகு அந்த இந்து சகோதரர் அவரின் நண்பருக்கு போன் செய்கிறார் '' அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறுகிறார் . பிறகு அந்த முஸ்லீம் சகோதரர் ஆறுதல் கூறிவிட்டு ''நான் உடனே பணத்துடன் வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டுவிட்டார் .

இருவரும் மருத்துவமனையில் சந்திக்கிறார்கள் .  பணத்தை கட்டிவிட்டு பிறகு ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது! சில நாட்களுக்கு பிறகு அந்த முஸ்லீம் சகோதரர் அந்த ஹிந்து சகோதரரின் வீட்டுக்கு சென்று ''நலம் விசாரிக்கிறார் . இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. அந்த ஹிந்து சகோதரர் நடந்த சம்பவத்தை கூறி ரொம்ப வேதனை பட்டுக் கொண்டார் . அந்த முஸ்லீம் சகோதரர் அந்த ஹிந்து சகோதரரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார் '' உங்கள் பணத்தை திருடியவன் உங்கள் கையில் கிடைத்தால் என்ன செய்வீர்கள் ..?  அதற்கு அந்த ஹிந்து சகோதரர் கூறுகிறார் ''நிச்சயமாக அவனை கொலை செய்துவிடுவேன் என்று பதில் கூறினார்.அதற்கு அந்த சகோதரர் கூறினார்''  நாம் ஏற்கனவே செய்த விவாதத்தை திரும்ப உங்களுக்கு ஞாபகம் செய்கிறேன்,  '' நீங்கள் சொன்னீர்கள்  திருடினால் அவனின் கரத்தை துண்டிப்பது என்பது ஒரு பெரிய தண்டனை என்று , அவனை சிறையில் அடைத்து  தண்டிக்க வேண்டும் என்று கூறினீர்கள் !  இப்பொழுது நீங்களே கூறுகிறீர்கள் '' அவனை கொல்ல வேண்டும் என்று . இஸ்லாம் கூறுகிறது ''ஒருவன் திருடினால் அவனின் கரத்தை துண்டிக்கவேண்டும் என்று. அதனால் நிச்சயமாக குற்றம் குறைந்து விடும் .திருடினால் நிச்சயமாக கரம் துண்டிக்கப்படும் என்று பயம் இருக்கும் , உள்ளத்தில் அந்த எண்ணம் கூட வராது என்று கூறி முடித்துவிட்டு .

மேலும் அவர் கூறினார் ..  பாதிக்கப்படாதவரை நமக்கு எதுவும் தெரியாது. இஸ்லாமிய சட்டம் கடுமையாக தான் தெரியும். நாம் பாதிப்புக்குள்ளாகி விட்டால் , நிச்சயமாக அப்பொழுதுதான் நாம் உணர்வோம் இந்த இஸ்லாமிய சட்டம் வந்தால் நிச்சயமாக குற்றம் இல்லாமல் , மக்கள்கள் நிம்மதியாக பயம் இல்லாமல் வாழ்வார்கள். பாதிக்கப்பட்டவர்களிடம் கேளுங்கள் ! எது உகந்தது என்று ...? இந்தியாவில் குற்றம் செய்தவர்களைவிட குற்றம் செய்யாதவர்கள் தான் தண்டிக்கப்படுகிறார்கள். பணமும் , பதவியும், செல்வாக்கும் இருந்தால் தப்பித்து கொள்ளலாம் ..  இதுதான் மனிதன் வகுத்த பிழையான சட்டம்.  பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் . ஏழைகளுக்கு ஒரு சட்டம். இஸ்லாத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் !  புரிந்து கொண்டால்  இந்தியா வசந்தமாக மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!