* அல் இக்லாஸ் (மனைத்தூய்மை) அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்தத்தையும் மட்டும் நாடவேண்டும் .
* துஆவின் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வைப் புகழவேண்டும் .நபியின் மீது ஸலவாத்தும் கூறவேண்டும்.
* உறுதியான வாசங்களைக் கொண்டு துஆ கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும்.
* தொடர்ந்து கெஞ்சிக் கேட்கவேண்டும். அவசரம் கூடாது.
* துஆவில் மன ஓர்மை இருக்கவேண்டும்.
* சுகம், துக்கம், வசதி, நெருக்கடி என எல்லா நிலைமைகளிலும் துஆ கேட்கவேண்டும்.
* அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கவேண்டும்.
* உறவினர், செல்வம் பிள்ளைகளுக்கு எதிராகவும் தனக்கு எதிராகவும் துஆ கேட்கக் கூடாது.
* துஆ கேட்கும்போது மிகவும் தாழ்ந்த குரலுமின்றி , உரத்த சப்தமுமின்றி நடுத்தரத்தில் கேட்கவேண்டும்.
* தன் பாவங்களையும் குற்றங்களையும் ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அல்லாஹ்வின் அருட்கொடைகளை ஏற்றுக் கொண்டு அவற்றிற்கு நன்றி செலுத்தவேண்டும்.
* துஆ கேட்கும்போது வாசகக் கோர்வைக்காக சிரமம் எடுத்துக் கொள்ள கூடாது.
* துஆவில் பணிவு, பயம் , நடுக்கம் , ஆர்வம் ஆகியவை இருக்கவேண்டும்.
* உரிமைகளை உரியவர்களிடம் ஒப்புடைத்து விடவேண்டும் .
* ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை கேட்கவேண்டும் .
* கிப்லாவை முன்னோக்க வேண்டும். கைகளை உயர்த்தி கேட்கவேண்டும்.
* முடிந்தால் துஆ கேட்பதற்கு முன் உளு செய்து கொள்ளவேண்டும்.
* துஆ கேட்பதில் எல்லை மீறக்கூடாது .
* பிறருக்கு துஆ செய்யும்போது முதலில் தனக்கு செய்து கொள்ளவேண்டும். (ஆனால் இது கட்டாயம் அல்ல )
* அல்லாஹ்விடம் வஸீலா தேடவேண்டும். அதாவது, அவனது அழகிய பெயர்கள் மற்றும் பண்புகளைக் கொண்டு அவனைப் புகழ்ந்து கேட்பது அல்லது தான் செய்த ஒரு நற்செயலைக் கூறிக் கேட்பது. அல்லது தனக்கருகில் உயிர் வாழும் நல்லவர் ஒருவர் தமக்காக கேட்ட துஆவைக் கூறிக் கேட்பது. உதாரணமாக ''அல்லாஹ்வே! இன்னவர் எனக்காக உன்னிடம் துஆ கேட்ட துஆவை என் விஷயத்தில் ஏற்றுக்கொள் என்று கேட்பது.
* உணவு , குடிப்பு , ஆடை ஹலாலாக இருக்கவேண்டும்.
* துஆவில் பாவமான காரியத்தையோ உறவை முறிக்கும் விஷயத்தையோ கேட்கக் கூடாது. துஆ கேட்பவர் நன்மையை ஏவுபவராகவும் தீமையை தடுப்பவராகவும் இருக்கவேண்டும். எல்லாப் பாவங்களையும் விட்டும் விலகி இருக்கவேண்டும்.
நன்றி : DARUL HUDA
சத்திய பாதை இஸ்லாம் .
இன்ஷாஅல்லாஹ் துஆவை தொடர்ந்து '' துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும் இடங்கள் பற்றி பார்ப்போம் ...
தமிழ் இஸ்லாமிய போஸ்டர் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
TAMIL ISLAM POSTER


0 கருத்துகள்
Welcome to your comment!