அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஜூன் 21, 2014

கனவும் அதன் பலனும் [தொடர்ச்சி..]

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக!


மோதிரத்தை மற்றவரிடமிருந்து பெற்றால் *
செல்வம் கிடைக்கும் .

மோதிரம் காணாமல் போய்விட்டால் *
பொருள் உடையவனின் பொருள் நிலைத்திருக்கும்.

மோதிரம் களவாடப்பட்டதாய் கண்டால் *
கண்டவனின் தொழிலில் இடையூறுகள் ஏற்படும் அல்லது ஏதேனும் துக்கம் உண்டாகும்.

மோதிரம் உடைந்து விட்டதாய்க் கண்டால் *
தன்னிடமிருக்கும் பொருள் போய்விடும்.


மௌனமாயிருப்பதைக் காணுதல் *
நன்மை தரும் செயல்களை செய்வீர்கள் என்பதற்கான அறிகுறி இது.

மேக இடி *
நீர் வியாதியால் பீடிக்கப்பட்டிருப்பாவராயின் . வியாதி நீங்கி , பூரண சுகம் பெறுவீர் .

மேட்டில் ஏறுதல் *
உமது அந்தஸ்து உயரும்  சமுதாயத்திலேயே தனித்த உயர்ந்த இடம் உமக்குக் கிடைக்கும்.

மேட்டிலிருந்து இறங்குதல் *
அந்தஸ்தில் குறைவு உண்டாகும், நீர் ஏதேனும் உத்தியோகத்திலிருப்பவராயின் உத்தியோகப் பதவி குறையும்.

மோதிரத்தை காணுதல் *
உமக்கு விரைவில் ஆண் மகன் தோன்றுவான் ,, பொருளும் செல்வமும் உண்டாகும்.

மோதிரம் அணிதல் *
உமது அதிகாரம் , அந்தஸ்தும் உயரும் , பொருள் சேரும்.

முத்து இரைத்தல் *
நீர் குர்ஆனில் கருத்துகளைப் பரவச் செய்வீர் .

முத்து மாலை *
குர் ஆனை மனனம் செய்வீர் அல்லது உமக்குச் சதோஷம் அளிக்கக் கூடிய நல்ல குமாரன் பிறப்பான்.

முத்து விற்றல் *
பொது மக்களுக்கு நன்மை செய்யும் பரோபகாரியாயிருப்பீர்கள் ,, அவர்களுக்கு நல்வழி  காட்டுவீர்கள்.

முயலைக் காணுதல் *
நல்ல செல்வத்தின் காரணமாக உமக்கு நற்பயன்கள் ஏற்படும்.

முடிவெட்டக் காணுதல் *
உம்முடைய மனைவியை விவாகரத்து செய்து விடுவீர், நீர் பெண்ணாயிருப்பின் உம் கணவர் உம்மை விவாகரத்து செய்துவிடுவார்.

முடிவளரக் காணுதல்*
நீர் ஆணாயினும் பெண்ணாயினும் உமக்கு செல்வமும் ஆயுளும் பெருகும் . பலவீனமுள்ளவராயின்  உமக்கு மன அமைதி இல்லா தொழியும் .

முத்தமிடுவதைக் காணுதல் *
உமது மனதிலுள்ள கோரிக்கை நிறைவேறும், நற்கிரியைகளிலேயே உமது மனம் செல்லும்.

மிம்பரைக் காணுதல் *
நல்ல கீர்த்தி ஏற்படுமென்பதற்கு அடையாளம் இது.

மினாராவைக் காணுதல் *
மக்களுக்கு நன்மையே செய்து நன்மையே போதிக்கும் பண்பையுடைய மனிதரால் உமக்கு நற்பயன்கள் கிட்டும்.

மீனைக் கழுவுதல் *
நீர் பாவியாயிருப்பின் தீச் செயல்களை விட்டு ஒழித்து , நேர்வழியை அடைவீர் சத்திய மார்க்கத்தின் பக்கம் நீர் செல்வீர்.

மாதுளை மரத்தைக் காணல் *
உமக்கொரு கன்னிப் பெண் கிடைப்பாள் அல்லது விவாகம் கூடி வரும்.

மாதுளம் பழம் கிடைத்தல் *
பணம் எதிர்பாராமல் கிடைக்கும் அல்லது நல்ல சந்ததியர் கிடைப்பர் .

மாம்பழம் உண்ணக் கண்டால் *
ஆண் குழந்தை பிறக்கும் நல்ல செல்வந்தனாவார் .

மாம்பழத்தை புசிக்கக் கொடுத்தல் *
சீரையும் செல்வத்தையும் பெறுவான்.

மார்க்கப் பெரியார்களைக் காணல் *
நன்மையும் , சேமமும் நற்பயனும் கிடைக்கும்.

மனைவியுடன் புணர்தல் *
பெண்ணினத்தின் இரகசிய அம்சத்தில் எச்சரிக்கையாகவும் , ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

மாதவிடாயிலிருந்து பரிசுத்தமாதல் *
பாவமன்னிப்புக்கான அடையாளமாகும் இது.

மரண ஒப்பாரி *
விவாகத்தின் அறிகுறி இது, சந்தோஷமும் உற்சாகமும் ஏற்படும்.

மரத்தின் மீது ஏறுதல் *
உமது அச்சம் விலகும் , மனத்தெளிவும் ஏற்படும்.

பெண்குறியைக் காணுதல் *
எதிர்பாராத வகையில் நீர் துக்கத்தை அனுபவிக்க நேரிடும்.

பெண்குறி-ஆண்குறி ஒன்றாகக் காணல் *
உம்மைப் பீடித்துக் கொண்டுள்ள அச்சங்களும் தீமைகளும் கவலைகளும் அகன்று ஒழிந்துபோம்.

பெண்ணைக் கண்டால் *
சதோஷம் உண்டாகும், ஆனந்தம் உண்டாகும்.

பெண்களைக் கூட்டமாகக் காணல் *
ஆண் மகன் உமக்குப் பிறப்பான் என்பதற்கான அறிகுறி இது.

பெண் கண்ணாடியைப் பார்த்தால் *
பார்த்தவள் கர்ப்பவதியாயிருப்பின் தன்னைப்போல ஒரு பெண் மகவைப் பெறுவாள் . இல்லையேல் மறு விவாகம் செய்து கொள்வாள் .

பெண் சிறுநீர் கழித்தல் 8
உலக ஆசைகளும் இச்சைகளும் அதிகமாகும்.

பெண்ணிடம் பால் பருகுதல் *
விவாகம் முடிக்கப்பட்ட உம் மனைவியிடம் உமக்கு அதிக அன்பு உண்டாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்
கண்ணியமிக்க ரமலான் நம்மை நோக்கி வருகிறது. அதற்காக நாம் நம்மை தயார் செய்துக் கொள்ள வேண்டும். ரமலான் மாதத்தில் அதிகமாக திருக்குர் ஆன்  ஓத வேண்டும். துஆச் செய்ய வேண்டும். அல்லாஹ் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக.......ஆமீன்...............

2 கருத்துகள்:

  1. முஸ்லிம் பெண் ஆண் மற்றும் குழந்தைகள் வயதான மூதாட்டி வயதான தாத்தா எனது வீட்டுக்கு வந்து நான் காலில் ஆசீர்வாதம் வாங்கினேன் ஆண்எழும்பிசாம் பாழம் எனக்கு தருகின்றன ர் என்ன பலன்

    பதிலளிநீக்கு
  2. முஸ்லிம் பெண் ஆண் மற்றும் குழந்தைகள் வயதான மூதாட்டி வயதான தாத்தா எனது வீட்டுக்கு வந்து நான் காலில் ஆசீர்வாதம் வாங்கினேன் ஆண்எழும்பிசாம் பாழம் எனக்கு தருகின்றன ர் என்ன பலன்

    பதிலளிநீக்கு

Welcome to your comment!