அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், அக்டோபர் 22, 2012

எங்கும் ஆபாசம் ,எதிலும் ஆபாசம்.

எங்கும் ஆபாசம் ,எதிலும் ஆபாசம்.www.islam-bdmhaja.blogspot.com
மேற்க்கத்திய கலாச்சாரம் இப்பொழுது இந்தியாவிலும் தலை விரித்து ஆடுகிறது ,எங்கு பார்த்தாலும் ஆபாசம் ,எதிலும் ஆபாசம், டிவி யை பார்த்தல் அதிலும் ஆபாசம் ,விளம்பரத்திலும் ஆபாசம் ,பத்திரிக்கை பார்த்தால் ,புத்தகத்தில் பார்த்தல் ஆபாசம் .பொழுது போவதற்கு கடற்கரை போனால் ,அங்கும் சில காதலர் ஜோடிகள் ,பார்க் போனால் அங்கேயும் சில காதலர்கள் .இப்படி எங்கு பார்த்தாலும் கெட்ட சூழ்நிலை ,சில பெண்களின் அவர்கள் அணிந்த ஆடைகளில் ஆபாசம் ,அரைகுறை ஆடை, சுடிதார் அணிந்து மேல் துப்பட்ட நெஞ்சை மறைக்காமல் ,கழுத்தை சுற்றி போடுகிறார்கள் !பார்பவர்களுக்கு அவர்களின் உள்ளத்தில் ஒரு கெட்ட எண்ணம் தான் வரும் என்பதில் சந்தேகம் இல்லை .கண்ணியமான ஆடைகள் அணிந்து வருவதினால் ,அவர்களுக்கு என்ன மதிப்பை இழக்க போகிறார்கள்? ஆண்கள் ஈர்கபடுவதர்க்கு இந்த ஆடை ஒரு முக்கிய காரணம் !ஆள் பாதி ,ஆடை பாதி என்று சொல்வார்கள் !அதற்கேற்ப்ப இவர்களும் வருகிறார்கள் ,இதுதான் கொடுமை!சிலர் வாழ்க்கை சீர்குலைந்து போவதற்கு ,சினிமா ஒரு காரணம் ! சினிமாவில் தான் ஆபாசம் என்று சொன்னால் ,இப்பொழுது டிவி சீரியலிலும் ,அந்த டிவி யில் நடக்ககூடிய பெருபாலும் நிகழ்ச்சியில் ஆபாசமும் ,இரட்டை அர்த்தமுள்ள வசனமும் இருக்கிறது .இன்டர்நெட் பார்த்தால் அதில் சொல்ல தேவை இல்லை ,பெரும்பாலும் பெண்கள் அதில் தான் பொழுது போக்கிரார்கள் .சாடிங் என்ற பெயரிலே சீட்டிங் ,dating  என்ற பெயரிலே லூட்டி ,beauty  பார் என்ற பெயரிலே சில பெண்களின் அசிங்கமான beauty ,இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ...நம் சமுதாய பெண்கள் இதுபோன்ற சீர்கெட்ட கலாச்சாரத்தில் போகாமல் இருக்க வேண்டும் !அல்லாஹ் அவர்களை பாதுகாக்க வேண்டும்! சிலர் வாழ்க்கையில் தடம்புரள்வது ,தகாத நட்பினால் பழகி கெட்ட சூழ்நிலையில் இருப்பதினால் ,சிலர் கலாச்சார சீரழிவினால் சிக்கி விடுகிறார்கள் ,அவர்களிடம் ஈமான் பலகீனம் ,இறையச்சம் இல்லாமை ,மார்க்க கல்வி இல்லாமை ,இருப்பதினால் வழி தவறி போவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது .உலக கல்வியை மட்டும் குறிகோளாக வைத்து ,மார்க்க கல்வியை மறந்து விட்டால் ,நிச்சயாமாக ,தடம் புரள்வதற்கு வாய்ப்பு உண்டு !கல்லூரிக்கு போக கூடிய பெண்கம் எத்தனை பேர்கள் தம் வீட்டில் அல்லாஹ் வுடைய வேதத்தை (திரு குரானை) ஓதுகிறார்கள் ? எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கு ,தர்ஜுமாவை பார்த்து குரானை விளங்கி கொள்ள வேண்டும் என்று ? கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்தால் ,அவர்கள் என்ன செய்வார்கள் ? தொழுவார்களா? அல்லது குரானை ஓதுவார்களா?டிவி பார்ப்பார்கள் அல்லது இன்டர்நெட் பார்ப்பார்கள் !இதுதான் பெரும்பாலும் வீட்டில் நடக்கின்ற வழக்கமான ஒன்று!அல்லாஹ் அவர்களுக்கும் நமக்கும் நற்கிருபை செய்வானாக!!ஆமீன்.. ஆவது பெண்ணாலே !அழிவது பெண்ணாலே! என்ற பழமொழி உண்டு . எத்தனை ஆண்கள் வாழ்க்கை சில பெண்களினால் அழிந்து போனது ,திருமணத்துக்கு முன் யாரையாவது காதல் செய்து விட்டு ,அவனுடன் தவறாக நடந்து விட்டு ,பிறகு மறைத்து ஒருவனை திருமணம் செய்து கொண்டு ,கணவனுக்கு துரோகம் செய்து ,பிறகு செய்தி கேள்விப்பட்டு ,கணவன் மனம் உடைந்து ,அவன் தற்கொலை செய்வதற்கு இந்த பெண் தான் காரணம் !இதுபோல எத்தனை குடும்பத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது !கள்ள தொடர்ப்பு ,காதலித்தவன் ஒருவன் ,திருமணம் செய்தது ஒருவன் ஆனால் ,காதலுனுடன் தொடர்ப்பு ,தெரிந்தவுடன் இழப்பு யாருக்கு ? ஆணுக்குதானே !அநியாயமாக ஒரு உயிர் உன்னால் போகிறது ,தற்கொலை செய்தால் நரகம் தான் .அவன் கோழையாகஇருந்தால் ,தற்கொலை ,அல்லது அவள் கொலை செய்யபடுவாள் !இதுதான் முடிவு .உள்ளத்தில் ஒரு சின்ன காம இச்சை வந்து விட்டால் ,பிறகு என்ன ஆகிறது? ஒரு பெண்ணுக்கு ஈமானும் ,இறையச்சமும் இருந்தால் ,அவளை அல்லாஹ் பாதுகாப்பான் !இது உறுதி! இந்த இரண்டும் வர வேண்டும் என்றால் ,மார்க்க கல்வி வேண்டும் , நல்ல சூழ்நிலையில் இஸ்லாமிய சூழ்நிலை வாழ்கையில் அமைத்து கொள்ள வேண்டும்! அல்லாஹ் நம் அனைவருக்கும் அதுபோன்ற இஸ்லாமிய சூழ்நிலை உருவாக உதவியும்,கிருபையும் செய்வானாக!ஆமீன்..
ஆபாசத்தின் உச்சகட்டம் விபச்சாரம் தலைவிரித்து ஆட ஆரபித்துவிடும் ,ஒரு ஹதீஸின் கருத்து :பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக : வெட்கம் இல்லை என்றால் எதுவேண்டுமானாலும் செய்து கொள் என்று .வெட்கம் ஈமானின் ஒரு கிளை அல்லது ஒரு பகுதி ! வெட்கம் என்றால் என்ன ? என்று கேட்பார்கள் இன்னும் சில நாள் போனால் .அல்லாஹ் நம் சமுதாய பெண்களை காப்பாற்ற வேண்டும் ! நன்மை செய்வது கடினம் ,அதற்க்கு முயற்சி செய்ய வேண்டும்! ஆனால் தீமை செய்வது எந்த முயர்ச்சியும் செய்ய வேண்டி அவசியம் இல்லை ,ஒரு கனம் யோசிக்காமல் தவறு செய்து விட்டால் ,பிறகு அதன் விளைவு ரொம்ப மோசமாக இருக்கும் என்பதை சில பெண்கள் உணர வில்லை .முள்ளில் சேலை பட்டாலோ அல்லது சேலை மீது முள்ளு விழுந்தாலோ ,சேலைக்கு தான் பாதிப்பு என்பது ஏன் சில பெண்களுக்கு புரியவில்லை ?காதல் என்ற பெயரிலே காம களியாட்டம் நடக்கிறது ,சில பெண்கம் அதில் ரொம்ப எளிதாக மயங்கிவிடுகிறார்கள் ! பிறகு மயக்கம் தெளிந்த பின் அவர்கள் கற்ப்பு போனதை உணர்கிரார்கர் .பெரும்பாலின் ஆண்களின் நோக்கம் அவர்களின் இச்சை தீர்த்துகொள்வது,அவர்கள் உள்ளத்திலே ஆபாசமும் அசிங்கமும் தான் இருக்கிறது .எத்தனை பெண்கள் அவர்கள் கற்ப்பை இழந்து ,வெளியில் சொல்ல முடியாமல் உள்ளத்திலே புழுங்கி தவிக்கிர்ரர்கள் !இதல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது ,இன்னும் நிலைமை ரொம்ப மோசமாகத்தான் போகும் என்பது நிச்சயம்!நம் சமுதாய பெண்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ! நல்ல சூழ்நிலை அமைத்து கொள்ள வேண்டும் ! தினதோரும் திருமறை ஓத வேண்டும் !இல்மை கொஞ்ச கொஞ்சமாக கற்று கொள்ள வேண்டும்! டிவி பார்க்க கூடாது என்பதில்லை ,ஒரு கத்தி இருக்கு அது ஒரு பழத்தை வெட்ட உதவும் ,அதே கத்தி ஒரு ஆளை கூட வெட்டும் !எதற்கு பயன் படுத்த வேண்டும் என்ற ஒரு முறை இருக்கு ! அதுபோல இன்டர்நெட் அதில் எவ்வளவு நல்ல  விடயங்கள் உள்ளன ,மார்க்க விடயங்கள் பார்க்கலாம் !இஸ்லாமிய இணைத்தளம் இருக்கிறது ,தமிழ் பயான் இருக்கிறது ,சில உலக விஷயங்களும் தெரிந்து கொள்ளாம்! தயவு செய்து இந்த காதலிலே சிக்காமல் ,இந்த மாய உலகத்தில் மயங்காமல் ,ஆண்களிடம் எச்சரிக்கையாக இருந்து !மறுமை சிந்தனை யுடன் நாம் வாழ வேண்டும் !அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக !சுவர்க்கத்தில் நுழைய செய்வானாக !ஆமீன் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!