செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

இது கதை அல்ல நிஜம் !


அல்லாஹு தஆலா கூறுகிறான்:

நரகத்தை நோக்கி , "" நீ நிறைந்து விட்டாயா ? என்று நாம் கேட்டு ,அதற்க்கு அது '' இன்னும் அதிகமாக ஏதும் இருகின்றதா ? என்று கேட்க்கும் அந்தநாளை (நபியே நீர் நினைவுருத்துவீராக )!
அன்றியும் அந்நாளில் ) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும் .


"" இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா (ன சுவர்க்கமா) கும் எப்பொழுதும் இறைவனையே நோக்கி , (பாவத்தை தவிர்த்து ) பேணி நடந்து ஒவ்வொருவருக்கும் (இது உரியது)

எவர்கள் மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிராகளோ அவர்களுக்கும் (அவனையே )முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருபவருக்கும் (இது வாக்களிக்கப்படிருகிறது)
ஸலாமுடன் -சாந்தியுடன் -இ (சுவர்க்கத் )தில் பிரவேசியுங்கள் ; இது தான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும் "" (என்று கூறப்படும் )

அவர்கள் விரும்பியதெல்லாம் , அதில் அவர்களுக்கு இருக்கிறது ; இன்னும் (அதற்க்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது .

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் (சுவர்க்கத்தின் ) சோலைகளிலும் , நீரூற்று களிலும் இருப்பார்கள் .

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன் ) பெற்று கொள்வார்கள் ; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர்  நன்மை செய்வோராகவே இருந்தனர் .

அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமே யன்றி தூங்கமாட்டார்கள் .
அவர்கள் விடியற் காலங்களில் (பிராத்தனை களின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள் .

ஹதீஸ்:
ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : அண்ணல் நபி (ஸல்) பகர்ந்தார்கள் :தர்மம் யாரின் பொருளையும் குறைத்து விடாது . அடியான் பிறரின் தவறை மன்னிப்பாநேயானால் ,அல்லாஹ் அவன் கண்ணியத்தை அதிகப்படுத்துவான் . யார் அல்லாஹ்வுக்காக பணிவை மேற்கொள்கிராரோ அவரின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துவான் . ஆதாரம்: முஸ்லிம்)

மேலே உள்ள அல்லாஹ்வின் திரு வசனத்தை ரொம்ப கவனமாக படியுங்கள் ! பிறகு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்! நீங்களே உங்களை பரிசோதித்து பாருங்கள் ! இரவில் தூங்கு முன் உங்கள் நிலைகளை நினைத்து பாருங்கள்! நாம் இன்று உலக மோகத்தில் முழ்கி இருக்கிறோம்! நாம் நேரத்தை வீணாக பொழுது போக்கில் கழித்து கொண்டிருக்கிறோம் ! பெரும்பாலும் மக்கள்கள் டிவி சீரியலில் நேரத்தை கழித்து கொண்டிருகிறார்கள் ! சிறுது நேரம் கூட அல்லாஹ்வின் வேதத்தை  (குர் ஆனை) ஓதுவதில்லை . மரணம் என்ன மணி அடித்து கொண்டு வருமா , ? அல்லது உங்களுக்கு முன்கூட்டியே அல்லாஹ்விடம் இருந்து அறிவிப்பு வருமா ? எப்பொழுது அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது , ? மறுமையில் நம் நிலை என்ன ஆகும் , ? இன்றே நாம் சிந்திப்போம்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!