முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

ஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது!]



அல்லாஹ்வின் அருள்

يابَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(26) 7

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنْ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمْ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ(81) 16

வெப்பத்தி­ருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 81 )


அழகாக ஆடையணிய வேண்டும்



இப்னு மஸ்வூத் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ”ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும் , காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­)
நூல் : முஸ்­ம் (147)

அழுக்கான ஆடையணியத் தடை


நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது ” இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத் (3540)

வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ رواه أبو دود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடையணியும் போதும், உளூச் செய்யும் போதும் உங்களுடைய வலது புறங்களி­ருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ர­)
நூல் : அபூ தாவூத் (3612)

புத்தாடையணியும் போது ஓத வேண்டிய துஆ

நபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு ” அல்லாஹ‎ýம்ம லகல் ஹம்து. அன்த கஸவ்தனீஹி, அஸ் அலுக ஹைரகு வஹைர மாஸ‎ýனிஅ லஹ‎ý. வ அவூது பிக மின் ஷர்ரிஹி வ ஷர்ரி மாஸ‎ýனிஅ லஹ‎ý” என்று கூறுவார்கள்.
பொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதனுடைய தீங்கி­ருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ர­)
நூல் : திர்மிதி (1689 )

2. ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள்

ஆடை தரையில் இழுபடக் கூடாது
மூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றது” என்ற இறைவசனத்தை நபியவர்கள் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (ர­) அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்” என்று கூறிவிட்டு ”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடைய கணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியை சொல்­க்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளை விற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­)
நூல் : முஸ்­ம் (171)



பெருமையுடன் ஆடையை தரையில் இழுப்பவருக்கு நரகமே கூ­லி

நபி (ஸல் ) அவர்கள் ” யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.” என்று கூறினார்கள். அபூ பக்ர் (ர­) ”அல்லாஹ்வின் தூதரே நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இருபக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகின்றது” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” நீஙகள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவர் அல்லர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­லி)
நூல் : புகாரி (5784)

இருக்கமான ஆடையணிவது கூடாது


கையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது மர்மஸ்தானம் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ர­)
நூல் : புகாரி (367)

பெண்களைப் போல் ஒப்பனை செய்யத் தடை


நபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் , பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)
நூல் : புகாரி (5885)



3. வெள்ளை ஆடையும் காவி ஆடையும்

ஆடைகளில் சிறந்து

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெண்மையான ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)
நூல் : திர்மிதி (915)

ஆடைகளில் தூய்மையானது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.”
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜ‎ýன்துப் (ர­)
நூல் : திர்மிதி (2734)



காவி இறைமறுப்பாளனின் ஆடை


நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது ” இது இறைமறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே என்று கூறினார்கள்.”
அறிவிப்பாளர் : அம்ர் பின் ஆஸ் (ர­)
நூல் : முஸ்­ம் (4218)



ஆண்களுக்குக் காவி முற்றிலும் தடை


நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ” உன்னுடைய தாயா இதை (அணியுமாறு) ஏவினார்கள்?” என்று கேட்டார்கள். நான் ”இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா?” என்று கேட்டேன். நபியவர்கள் ”இல்லை அதை எரித்து விடு” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அம்ர் பின் ஆஸ் (ர­)
நூல் : முஸ்­ம் (4219)



4. பட்டாடை அணிதல்
பட்டாடையணிவது ஆண்களுக்குத் தடை

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பட்டாடை அணிவதும் தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.”
அறிவிப்பவர் : அபூ மூஸா (ர­)
நூல் : திர்மிதி (1642)



பட்டாடை இறைமறுப்பாளனின் ஆடை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”சாதாரனப் பட்டையோ அலங்காரப்பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறைமறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்.”
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ர­)
நூல் : புகாரி (5426)



பட்டாடை மீது அமர்வதற்கும் தடை


பட்டாடையின் மீது அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்
அறிவிப்பவர் : ஹ‎ýதைஃபா அல்யமான் (ர­)
நூல் : புகாரி (5837)

மறுமையின் ஆடையே பட்டு

நபி (ஸல்) அவர்கள் ” இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதி­ருந்து சிறிதளவும் அணியவே முடியாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ர­)
நூல் : புகாரி (5830)

இரண்டு விரல் அளவுக்கு மட்டும் அணிந்து கொள்ள அனுமதி


நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இருவிரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ர­)
நூல் : புகாரி (5828)

சிரங்கு நோய் பிடித்தவர்கள் பட்டாடை அணிய அனுமதி

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ர­), ஸ‎ýபைர் (ர­) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ர­)
நூல் : புகாரி (2919)
5. பெண்கள் ஆடை அணியும் முறை

முகம், முன் கை, அடிப்பாதம் தவிர அனைத்தையும் மறைக்க வேண்டும்

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24 : 31)
சிலங்கைக் கொலுசு (சப்தம் வருகின்றவை) அணியத் தடை
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ(31) 24
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். அல்குர்ஆன் (24 : 31)

அலங்காரத்தைக் காட்டுவதற்கு தகுதியானவர்கள்


தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.
(அல் குர்ஆன் 24 : 31)

உடல் உறுப்புக்கள் தெரியும் வகையில் அறைகுறை ஆடையணியத் தடை


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.
அறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ர­)
நூல் : முஸ்­ம் (4316)


நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். மூமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ர­)
நூல் : புகாரி (372)

பெண்கள் தமது உடல் அழகில் கைகள், முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிரிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது.

பெண்களின் முகம் வெளியில் தெரிவதால் குற்றமில்லை

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ர­) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தை கடைபிடிக்கும் மாறும் இறைவனுக்கும் மாறும் வ­யுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வலங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவி­ருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள் அதறட்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள் நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ர­) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர­)
நூல்: முஸ்­ம் (1607)


(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)
நூல் : புகாரி (6228)

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.
பெண்கள் முழங்கா­­ருந்து ஒரு முழம் வரை உள்ள பகுதிகளை மறைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முழங்கா­­ருந்து ஒரு முழம் என்பது கரண்டை வரைக்கும் வரும். எனவே கரண்டைக்குக் கீழே உள்ள பாதத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இதி­ருந்து விளங்கிக்கொள்ளலாம்.

பெண்கள் கரண்டைக் காலை மறைக்கத் தேவையில்லை


பெருமைகொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா (ர­) அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முழங்கா­­ருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா (ர­) அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ; இப்னு உமர் (ர­)
நூல் : திர்மிதி (1653)

முக்காடில்லாமல் தொழுகை கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுவது ஏற்றுக் கொள்ளப்படாது”
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : திர்மிதி (344)

கருத்துரையிடுக

0 கருத்துகள்