📌 தலைப்புகள் / லேபிள்கள்:
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

இணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2]



நல்ல நேரம் கெட்ட நேரம் சகுணம் பார்ப்பது கூடுமா?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொற்றுநோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. பீடை மாதமும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர­)  நூல் : புகாரீ (5757)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :   சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது(ர­)  நூல் : அபூதாவூத் (3411)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :  எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ர­)  நூல் : அஹ்மத் (6748)
            இன்றைக்கு அதிகமான முஸ்­ம் மக்களின் திருமணம், பயணம், மேலும் பல காரியங்களுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தே நடக்கின்றனர்.
            அதே போன்று விதவைப் பெண், பூனை குறுக்கே வருவதும் கெட்ட சகுனம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
            இது போன்ற நம்பிக்கைகள் அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்கள் ஆகும்



சூனியத்தின் மூலம் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியுமா?
அல்லாஹ்வின் விருப்பம் இன்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது. (அல்குர்ஆன் 2:102)
சூனியம் என்ற வித்தை மூலம் பார தூரமானக் காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர்.
இருப்பதை இல்லாமல் ஆக்கவோ; இல்லாததை உருவாக்கவோ; ஒன்றை வேறொன்றாக மாற்றவோ; எந்த வித்தையும் கிடையாது.
தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அவ்வளவு தான்! இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.

قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ(116) سورة الأعراف
”நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன் 7:116)
இவ்வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى (66) سورة طة
”இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது (அல்குர்ஆன் 20:66)
இவ்வசனத்தில் பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.
மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.
இதி­ருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.

சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்தமுடியும் என்று நம்புவது இணைவைத்தலாகுமா?
எவ்வித புறசாதனங்களும் இல்லாமல் ஒருவனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும். சூனியம் செய்பவர்கள் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்று நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் பாவமாகும்.
சூனியம் செய்பவன் நான் எவ்வித புறசாதனங்களும் இல்லாமல்  அல்லாஹ்வைப் போன்று பாதிப்பு ஏற்படுத்துவேன் என்று தன்னை இறைவனுக்கு நிகராகக் கருதுவதால்
அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : புகாரீ (2767)

நபியவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்களா?

وَقَالَ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا (8) انْظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا  الفرقان
”சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கூறுகின்றனர்.(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழி கெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.
 (அல்குர்ஆன் 25:8, 9)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டவர்கள் என்று காஃபிர்கள்தான் கூறினார்கள். அவ்வாறு கூறிய காஃபிர்களை அல்லாஹ் வழிகெட்டவர்கள் என்றும் அவர்கள் நேர்வழி பெறாதவர்கள் என்றும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டவர்கள் என்று முஃமின்கள் கூறுவது கூடாது. நபியவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று நம்புவதும், அது தொடர்பாக வரும் ஹதீசும் திருமறைக்குர்ஆனிற்கு எதிரானதாகும்.

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது கூடுமா?
அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்வது இணைகற்பிக்கும் காரியம் ஆகும். எனவே அவ்வாறு செய்வது கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ர­)  நூல் : புகாரீ (2679)
            ஒரு மனிதர் ”கஅபாவின் மீது சத்தியமாக” என்று சத்தியம் செய்வதை இப்னு உமர் (ர­) அவர்கள் செவியேற்றார்கள். அப்போது ”யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்விற்கு இணைகற்பித்து விட்டார்” என்று நபியவர்களிடமிருந்து நான் செவியேற்றிருக்கிறேன் என்று அவருக்கு கூறினார்கள்.
நூல்:நஸாயீ (2829)

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
அறியாமல் முஸ்­ம் அல்லாதவர்கள் கடவுளாகக் கருதுபவற்றின் மீதோ, அல்லது அல்லாஹ் அல்லாதவர்களின் மீதோ சத்தியம் செய்தவர்கள் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று கூற வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்!
அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ர­)  நூல் :புகாரி (4860)

சிறிய இணைவைத்தல் என்றால் என்ன?
சிறிய இணைவைத்தல் என்பது முகஸ்துதி ஆகும். அதாவது நம்முடைய நல்லறங்கள் இறைவனுடைய திருமுகத்தை மட்டும் நாடிச் செய்யாமல் மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ செய்வதாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களிடம் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் முகஸ்துதி என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (22528)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :    பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார், பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.
நூல் : அஹ்மத் (16517)

காலத்தைத் திட்டுவது கூடுமா?
நமக்கு ஏற்படும் இன்ப, துன்பங்கள் அனைத்தும் இறைவனுடைய நாட்டப்படியே ஏற்படுகிறது.

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا} التوبة
”அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. (அல்குர்ஆன் 9:51)

اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:யா அல்லாஹ் நீ கொடுத்ததை தடுப்பவன் யாருமில்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
நூல்:புகாரி (844)
எனவே நமக்கு துன்பங்கள் ஏற்படும் போது காலத்தை திட்டுவது அல்லாஹ்வை திட்டுவதாகும்.
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :      ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதின் (மூலம்) எனக்குத் துன்பம் தருகிறான். நான்தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில்தான் அதிகாரம் உள்ளது. நான்தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ர­)  நூல் : புகாரீ (4826)

பீடை மாதம் என்று உண்டா?

                        عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)  நூல்: புகாரி 5757

பரக்கத் தேடுவதற்கான அளவுகோல் என்ன?
பரக்கத் என்றால் மறைமுக அருள் என்று பொருளாகும். அதாவது அல்லாஹ் நாம் அறியாத விதத்தில் நமக்குச் செய்கின்ற அருள்ஆகும்.
ஸஹர் உணவில் பரக்கத் இருப்பதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். இது போன்று
எந்த இடங்களில், எந்தச் செயல்களில் பரக்கத் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறதோ அவற்றைத் தவிர மற்றவற்றில் பரக்கத் இருப்பதாகக் கருதினால் அது அல்லாஹ்விற்கு இணைகற்பித்தல் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணை கற்பிக்கும் மக்களுக்கு உரியது. ”தாத்து அன்வாத்’என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணை கற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்கவிடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு ”தாத்து அன்வாத்’ எனும் புனித மரம் இருப்பது போல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் தூயவன். ”அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக’ என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ 2106)

ஒரு மரத்தில் மறைமுகமான அருள் இருப்பதாக நினைப்பதை நபியவர்கள் சிலைவழிபாட்டிற்குச் சமமாக கருதியுள்ளார்கள்.
கந்தூரி விழாக்கள், பஞ்சா, சந்தனக்கூடு, மீலாது விழா,புத்தாண்டு கொண்டாடுதல், தா­, பால் கிதாபு,  இறந்தோருக்கு 3, 7, 40 நாட்களில் சடங்குகள் செய்தல், ஷைகுமார்களின் கா­ல் விழுதல் போன்றவற்றைச் செய்பவர்கள், மூஸா நபியிடம் பல கடவுள்களைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

இறைவனல்லாதவர்களுக்கு வழிபாடு செய்வதைப் போன்று தோற்றம் ஏற்படும் இடங்களில் இறைவனுக்குரிய வழிபாடுகளைச் செய்யலாமா?
‘புவானா என்ற இடத்தில் அறுத்துப் ப­யிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். ‘அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லை’ என்றார். ‘இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை’ என்றார். ‘அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ர­)   நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர். எனவே இறைவனல்லாதவர்களுக்கு வழிபாடு செய்வதைப் போன்று தோற்றம் ஏற்படும் இடங்களில் இறைவனுக்குரிய வழிபாடுகளைச் செய்வது கூடாது.
எழுந்து நின்று மரியாதை செய்வது கூடுமா?

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.
. ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ர­) நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ர­) நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
இறைவனுக்கு இணைகற்பிக்கும் பெயர்களைச் சூட்டுவது கூடுமா?
இன்றைக்குச் சிலர் ஷாஜஹான் (உலகத்தின் அரசன்) , ஷாகுல் ஹமீது (புகழுக்குரியவனுக்கு அரசன்) என்பது போன்ற பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு இறைவனுக்கு இணைகற்பிக்கும் வகையிலான எந்தப் பெயர்களையும் சூட்டிக் கொள்வது கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் ”மன்னாதி மன்னன்’ (ம­க்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.அறிவிப்பவர்:அபூஹுரைரா (ர­) நூல்:முஸ்­ம் (4338)

கருத்துரையிடுக

0 கருத்துகள்