🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
65 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

ஈமான் பலமும் -பலவீனமும்




அல்லாஹ்வே! (எனது) இரட்சகன் , இஸ்லாமே எனக்கு வழிகாட்டும் மார்க்கம், முஹம்மதே அல்லாஹ்வின் தூதர் என்று எவர் மனப்பூர்வமாக பொருந்திக்  கொள்கிறாரோ அவர்தான் ஈமானின் (நம்பிக்கையின்) இன்பத்தை  அடைவார்
ஆதாரம்: நூல் : மிஷ்காத் )

இந்த உலகத்தில் அல்லாஹ் செழிப்பான வாழ்வை தான்  விரும்பியவருக்கும் , விரும்பாதவருக்கும் கொடுக்கிறான் . ஆனால் தான் அன்பு  கொண்டவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு ஈமான் உறுதியை பக்தி ஒழுக்கத்தையும் கொடுப்பதில்லை .
அல்ஹதீஸ்)

ஈமான் கொண்டவர்களின் இதயம் அல்லாஹ்வின் இரண்டு விரலுக்கிடையில்  இருக்கின்றது .(இவர்களின் நடைமுறைக்குத் தக்கவாறு அவர்களை இயங்கச் செய்கின்றான் )
நூல்: இஹ்யா )

மக்களின் தன்மானம்  பாதிக்கும் வண்ணம் அவர்களை குறை கூறுபவனும் வீண் பழி சுமத்துபவனும் வாயாடித்தனமாக பேசுபவனும் பூரண ஈமான் கொண்டவனாக மாட்டான் .
நூல்கள்: திர்மிதி , )

பிற்காலத்தில் அறிவு குன்றிய இளம் வயதுடைய கூட்டத்தினர் வருவார்கள் ! அவர்கள்  நபி மொழிகளிருந்து பேசுவார்கள் . வில்லில் இருந்து அம்பு விடுவதுபோல  இஸ்லாத்திலிருந்து அவர்கள் விடுபட்டு விலகிச் செல்வார்கள் .
நூல்: புகாரி)

வாலிபர்களே ! விபச்சாரத்தை விட்டு பாதுகாப்புடன் இருங்கள்! (உங்கள் மர்மஸ்தானத்தின் மீது எச்சரிக்கையாக இருங்கள் ) மர்மஸ்தானத்தை மறைத்தவனுக்காக சொர்க்கம் தயார் செய்யப்பட்டிருக்கிறது .
நூல் ஹாக்கிம் )

மனத்தை  அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி  , மனம் போன போக்கில் நடந்து கொண்டு இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள் !
நூல்: இஹ்யா )

நாவு நேர்மையாக இருக்குமானால் ஒருவனுடைய இதயம் நேர்மையான வழியில் செல்லும். நாவு நேர்மையற்றதாக  இருக்குமானால் இதயம் நேர்மையான வழியில் செல்ல முடியாது.
நூல்:அஹ்மது )

ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பாரும் ! உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர்  இல்லையேல்  அதை விட்டு விடும்!
நூல்:இஹ்யா )

ஒழுக்கமுள்ளவனாக இரு! மக்களில் நீயே சிறந்தவன் . போதுமென்று  மனப்பான்மை உள்ளவனாக இரு ! மக்களில் நீயே நன்றியுள்ளவன் . உனக்காக்  எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு ! நீயே உண்மையான முஸ்லிம்  .
நூல்: இஹ்யா )

வெட்கமும் மௌனமும்  ஈமானின் இரு கிளைகளாகும் . பழித்துரைத்தல்  ஒழுக்கம் கெட்ட முரட்டுத்  தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.
நூல்: ஹாக்கீம் அஹ்மது)

லஞ்சம் கொடுப்பவனையும் , லஞ்சம் வாங்குபவனையும் திரு நபி (ஸல்) சபித்தார்கள் .
நூல்: அபூதாவூது)

கியாமநாளில் கடுமையான சூரிய வெப்பமும் வியர்வையும் கொட்டுகின்ற நிலையில் அர்ஷின் கீழ் நிழலில் இருக்கும் பாக்கியசாலி யார் ? என்றால் கண்ணைக் கவரும் ஒரு அழகிய மங்கை தன் ஆசைகிணங்க  அழைப்பு விடுக்கையில் இறைவனுக்கு பயந்து அவளை உதாசீனப் படுத்தி (அவளை ஆசைகிணங்க ) மறுத்து விடும் வாலிபரே ஆவார் .
நூல்கள்: புகாரி; முஸ்லிம்)

அன்புள்ள இஸ்லாமிய வாலிபர்களே ! இந்த ஹதீஸை ரொம்ப கவனமாக உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்! ஒருகால் ஏதாவது சந்தர்ப்பம் நேரிட்டால் அப்பொழுது  இந்த ஹதீஸ் உங்கள் ஞாபகத்தில் வரணும் . அந்த பாக்கியசாலி என்றா பெயர் மறுமையில் கிடைக்கும், அல்லாஹ்வின் நிழலில் இடம் கிடைக்கும்!


ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்திற்குப்பின்  கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப் படுவாள் ! அவன் அவளை பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள் . அவன் கட்டளையிட்டால்  அதை நிறைவேற்றுவாள் . அவன் அவளை விட்டு வெளியேறினால்  தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள் .
நூல் இப்னு மாஜா )

அன்பு இஸ்லாமிய சகோதரிகளே!
இந்த ஹதீஸை ரொம்ப கவனமாக பாருங்கள்! படியுங்கள்! இந்த ஹதீஸில் இறுதி வரிசையில் உள்ள வரிகளை நல்ல படியுங்கள்! நாம் ரொம்ப டீப்பாக போக விரும்பவில்லை . உங்களுக்கு நன்றாக புரியும்! அல்லாஹ் உங்களைப் பாதுக்காப்பானாக !!!

எந்த ஒரு மனைவி தன் கணவன் முகத்தில் (கோபக் குறியைக் காட்டி ) கடுகடுக்க பேசுவாளோ அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன்  வருவாள் .
அல்ஹதீஸ்)

பெண்களே! நீங்கள் தருமம் செய்து வாருங்கள் அதிகமாக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள்!  ஏனென்றால் , நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன் என்று திரு நபி (ஸல்) அவர்கள் கூறிய போது பெண்களில் சிலர் காரணம் என்ன ? என்று வினவினர் . அதற்க்கு திருநபி (ஸல்) அவர்கள் நீங்கள் கணவன்மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள் , அவர்களுக்கு நன்றி  கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள் ! மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகிறீர்கள் .உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை என்று கூறினார்கள் .
அல்ஹதீஸ்)

அன்றுமுதல் , இன்றுவரை (இன்று கொஞ்சம் அதிகம்)சில   மனைவிமார்கள் தன் கணவன்மார்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . காரணம் அந்தளவுக்கு ரொம்ப மோசமாக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறோம் . சில பெண்கள் மார்க்க விடயத்தில் ரொம்ப அறிவு குறைவாக தான் இருக்கிறார்கள் என்பதில் நிறைய விஷயத்தில் நாம் பார்க்கிறோம். மூடநம்பிக்கை , அனாச்சாரம், புது புது நூதன காரியம் (திருமணம், தர்கா , விழாக்கள் , இன்னும் பல ) சமீபத்தில் ஒடுக்கத்து புதன் . அந்த நாளில் நிறைய பெண்கள் தர்கா சென்று , கடற்கரை போய்  இன்ன இன்ன மூடநம்பிக்கை பிரகாரம் செய்கிறார்கள் . ஒடுக்கத்து புதனுக்கும் , மார்க்கத்துக்கும் என்ன சம்பந்தம் ? அங்கே நிறை கூற்றுக்கள் அரேகேற்றம் செய்யபடுகிறது .

சத்திய பாதை இஸ்லாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்