🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

நீங்களும் இந்த துஆவை மனனம் செய்து காலையுளும் , மாலையுளும் ஓதி வரலாமே !



துஆவின் சிறப்புகள்
 
நீங்களும் இந்த துஆவை மனனம் செய்து காலையுளும் , மாலையுளும் ஓதி வரலாமே !

காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.


للّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ


அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி



பொருள் : இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.


ஆதாரம்: அஹ்மத்


காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿﴾ اللَّهُ الصَّمَدُ ﴿﴾لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿﴾مِن شَرِّ مَا خَلَقَ ﴿﴾وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿﴾وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿﴾وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿﴾بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿﴾قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿﴾مَلِكِ النَّاسِ ﴿﴾إِلَٰهِ النَّاسِ ﴿﴾مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿﴾الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿﴾مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி ரப்பில் ஃபலக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப். வமின் ஷர்ரின் னப்ஃபஸாத்தி ஃபில் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பிரப்பின் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.


பொருள் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. 112 வது அத்தியாயம் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 113 வது அத்தியாயம் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர். 114வது அத்தியாயம்


ஆதாரம்: நஸயீ

கருத்துரையிடுக

0 கருத்துகள்