RECENT POSTS

நபிகளார் சந்தித்த சங்கடங்கள்..!



ஒவ்வொரு மனிதனும் அவரவர் வாழ்கையில் ஏராளாமான சங்கடங்களை சந்தித்து இருக்கிறோம்.சில சங்கடங்கள் நம்மையே பாதித்து இருக்கிறது என்றாலும் அதிலிருந்து ஏராளாமான பாடங்களை கற்று இருப்போம். அதே போன்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்கையிலும் சில நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. அந்த நிகழ்வுகள் உண்மையில் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன.? என்பதை  காண்போம்..


நவிகளாரின் நற்குணம் 


முஹம்மதே.! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.


(திருக்குர்ஆன்:68:4.)


கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்…


(அல்குர்அன்:3:159.)


நபிகளாரை கடுமையாகப் பேசிய கிராமவாசி


ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘(அவரை தண்டிக்க வேண்டாம்;)விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.


நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறினார்கள்.


அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)


நூல் : புகாரி : 2390


ஒருவரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால் அவர் அந்த கடனை சபையில் வைத்து நான்கு பேர் முன்னால் கேட்டால் அதை நாம் அவமனாமாக,சங்ககட்டமாக, நினைப்போம். இப்படி சபையில் வைத்து நம்மை அசிங்கப்படுத்திவிட்டாரே என்று கூட நினைப்போம். ஆனால் நபிகளாருக்கு முன்னால் கடுமையான வார்த்தைகளால் வசைபாடுகிறார். சஹாபாக்கள் ஆவேசம் அடைகிறார்கள். அப்படியிருந்தும் கூட நபிகளார் ஒரு புறம் சஹாபாக்களை அமைதிப்படுத்தி மறுபுறம் அவர் சபையில் இப்படி பேசிவிட்டாரே என்று நினைக்காமல் அவருக்கு உரிமை உண்டு என்று கூறினார்கள்.


நபிகளாரை முள் மரத்தில் தள்ளிவிட்டார்கள் 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து (தர்மம்) கேட்கலானார்கள்; ‘சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி(ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் சற்ற நின்று, ‘என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்’ என்று கூறினார்கள்.


அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி)


நூல் : புகாரி : 2821.


நாம் வாழும் இக்காலத்தில் எத்தனையோ அரசியல் தலைவர்களை பார்த்திருப்போம். தாம் அணிந்திருக்கும் ஆடையும் கூட கரை படியாமல் பாதுகாப்பார்கள். மக்களை சந்திக்கவும் மாட்டார்கள். மக்களுடைய தேவையும் நிவர்த்தி செய்ய மாட்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்தார்கள். மக்களுடைய குறைகளை நிவர்த்தி செய்தார்கள்.அப்படி ஒரு சூழலில் தான் கிராம மக்கள் தர்மம் கேட்டு நபிகளாரை முள் செடியில் தள்ளிவிட்டார்கள். இது போன்று இன்றைய தலைவர்களுக்கு நேர்தால் மக்களை தடியடி கூட நடத்தியிருபர்கள். ஆனால் நபியவர்கள் அந்த சூழலில் கோபம் கொள்ளவில்லை. என்ன ஒரு நபயையே இப்படி செய்து விட்டார்களே! என்று எண்ணவில்லை!மாறாக முள்ளின் எண்ணிக்கை அளவுக்கு என்னிடம் தர்மம் பொருள் இருந்தாலும் உங்களுக்கு தராமல் போகமாட்டேன்.என்றார்கள்.


கடுமையாக பேசிய பெண் 


கப்ருக்கருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!’ என்றார்கள். அதற்கு அப்பெண், என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்பட வில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி(ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. ‘நான் உங்களை (யாரென) அறியவில்லை’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினாள். ‘பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி)


நூல் : புகாரி : 1283.


அல்லாஹ்வுடைய தூதரும் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்த நபி அவர்களை பார்த்து அப்பெண் அப்படி பேசியும் கூட நபிகளார் எதார்தமாக கடந்து சென்றார்கள். அப்பெண் மீது கோபப்படவில்லை மாறாக உபதேசம் செய்தார்கள், என்றால் நபிகளாரின் அணுகு முறையும்,அணுகிய விதமும்  நமக்கு மிகப்பெரிய பாடமாக அல்லாஹ் வைத்து இருக்கிறான். இன்னொரு நிகழ்வைப் பாருங்கள்


கழுத்தை நெரித்து தர்மம் கேட்டார்  


நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி(ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை கண்டேன். பிறகு அவர், ‘முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.


அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.


நூல் : 6088. 


நபிகளாரின் கழுத்தை சால்வாயால் நெருக்கி தர்மம் கேட்ட கிராமவாசி சிரித்தபடி அவருக்கு தர்மம் கொடுக்க நபிகளார் கட்டளையிட்டார்கள். எந்த மாதிரியான ஒரு  சூழ்ல் ஆனால் நவியவர்கள் எப்படி அணுககினார்கள். நபிகளாரின் அணுகு முறை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இன்று நம்மிடத்திலே இப்படி ஒருவர் வந்து தர்மம் கேட்டால் நாம் எப்படி பேசியிருப்போம் வார்த்தைகளால் வசைபாடி தீர்த்திருப்போம்.அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நமக்கு அனைத்திலும் ஒரு அழகிய முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.


அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன்: 33:21.)

கருத்துகள்