சனி, ஜூன் 12, 2021

வீட்டினுள் நுழையும் போது கூறவேண்டியது

 வீட்டினுள் நுழையும் போது கூறவேண்டியது : اَللّٰهُمَّ اِنِيْ اَسْاَلُكَ خَيْرَ الْمُوْلِجِ وَخَيْرَ الْ مُخْرِجِ بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا وَعَلَى اللّٰهِ رَبَّنَا تَوَكَّلْنَا۰ " எவரேனும் தம் வீட்டிற்கு திரும்பி வந்து ( உள்ளே ) நுழையும் பொழுது , ' அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக ஃகய்ரல் மூஃலிஜி வஃகய்ரல் முஃக்ரிஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா வ அலல்லாஹி ரப்பனா தவக்கல்னா ' ( இறைவா ! நிச்சயமாக நான் வீட்டினுள் நுழைவதில் நன்மையையும் , வெளியில் புறப்படுவதில் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன் . அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நாம் உள்ளே செல்கின்றோம் . அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நாம் வெளியில் புறப்படுகிறோம் . மேலும் , நம் இறைவனான அல்லாஹ்வின் மீதே நாம் நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம் !) என்று கூறிய பிறகு தம் குடும்பத்தினருக்கு ' ஸலாம் ' கூறவும் " என்று கூறினார்கள் . அறிவிப்பவர் : ஹழரத் அபூ மாலிகில் அஷ்அரீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் . ஆதாரம் : அபூதாவூத் . " மகனே ! நீர் உமது வீட்டாரிடம் சென்றாலும் ஸலாம் கூறவும் . உமது ஸலாம் உமக்கும் , உமது வீட்டாருக்கும் அபிவிருத்தி நல்கக் காரணமாகும் " என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கூறினார்கள் . அறிவிப்பவர் : ஹழரத் அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் . ஆதாரம் : திர்மிதீ . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!