• இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் சகோதர! சகோதரிகளே !
• இன்று அதிகமானனோர்! முஸ்லீம் என்ற தங்களை கூறி கொள்ள கூடியவர்கள்! சமூகவலைத்தளங்களில் what's app - Face Book - Instagram - share Chat etc போன்றவற்றில்!
• இன்னும் சிலர் இவ்வாறு தங்களை photo எடுத்து post செய்வதால் அல்லது இது போன்று பெண்களின் புகைப்படங்களை post செய்வதால் அதிகம் likes comments மற்றும் followers கிடைக்கிறார்கள் என்று இவ்வாறு தங்களின் மானம் வெட்கம் கற்பு அனைத்தும் இழந்து இந்த செயலை செய்கிறார்கள்!
• profile photo - வாக அல்லது dawah சம்பந்தமான பதிவுகளில் அல்லது அந்த புகைப்படங்கள் உடன் அல் குர்ஆன் வசனங்கள் அல்லது ஹதீஸ்களை சேர்த்து post செய்கிறார்கள்!
• இன்னும் சிலர் இவ்வாறு தங்களை photo எடுத்து post செய்வதால் அல்லது இது போன்று பெண்களின் புகைப்படங்களை post செய்வதால் அதிகம் likes comments மற்றும் followers கிடைக்கிறார்கள் என்று இவ்வாறு தங்களின் மானம் வெட்கம் கற்பு அனைத்தும் இழந்து இந்த செயலை செய்கிறார்கள்!
• உண்மையில் சமூகவலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை upload செய்யும் பெண்கள் அறியாமையினால் தான் செய்கிறார்கள்! ஏன் என்றால் தனது கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய உடலை அனைவருக்கும் காட்ட! Social media வில் upload செய்கிறார்கள்!
• ஆனால் இது அறியாமல் இவர்களை விட அறிவு குறைவாக உள்ள நாம் அதை எடுத்து துஆ - குர்ஆன் வசனங்கள் சேர்த்து post செய்வது... அல்லாஹ்வையும் ரசூலையும் சொற்களை சேர்த்து post செய்ய மாட்டார்கள்!
*~ இதற்கு உதாரணம் :*
• மது பாட்டிலில் அல் குர்ஆன் வசனங்களை ஒட்டி விற்பது போன்றுது ஆகும்! மது ஹராம் தான் ஆனால் குர்ஆன் வசனம் நன்மை தானே! நாம் ஏன் மதுவை ஹராம் என்று ஏன் பார்க்க வேண்டும்? அதில் உள்ள அல் குர்ஆன் வசனத்தை மட்டும் பார்க்க வேண்டியது என்பது போன்று ஆகும்!
• ஒரு சாரார் நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் செய்கிறோம் நீங்கள் தவறாக பார்க்க வேண்டாம் என்று : நீங்கள் செய்யும் செயல் சரி என்றே வைத்து கொள்ளுவோம்!
*• இதே போன்று சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது உங்கள் தாய் அல்லது உங்கள் சகோதரி ! உங்கள் மனைவியின் புகைப்படம் எடுத்து post செய்வீர்களா!? மனம் வருமா அவ்வாறு செய்ய?*
• ஊரார் வீட்டு பெண் என்றால் நமக்கு இனிக்கிறது! தான் வீட்டு பெண் என்றால் மட்டும் கசக்குகிறதா????
• தெருவில் அல்லது வெளியே ஒரு அந்நிய பெண்ணை பார்த்தால் அது ஹராம் ! ஆனால் அதையே இது போன்ற பதிவுகளில் பதிவு செய்து பார்த்தால் ஹலாலாக ஆகி விடுமா?
• ஒரு சிலர் ஈமான் மானம் வெட்கம் கற்பு அனைத்தும் போனாலும் பரவில்லை சமூகவலைத்தளங்களில் பிரபலம் ஆனால் போதும் என்று செய்கிறார்கள் அதே செயலை நாமும் செய்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் உள்ளது???
• இன்னும் சிலர் அறிவாளி போன்று முகத்தை கட்டினால் தானே தவறு! முகத்தை மறைத்து விட்டு அனைத்தையும் காட்டுகிறார்கள் அல்லது சிலர் கண்கள் தெரிவது போன்று புகைப்படம் எடுத்து profile வைக்கிறார்கள் அல்லது post செய்கிறார்கள் பிறர் பார்க்க!!!
• இதனால் உள்ளத்தில் தீய ஆசை உள்ளவர்கள் ஆண்கள் உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதை என்ன என்ன கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்!? அவர்கள் பாவம் செய்ய நீங்களே ஒரு முக்கிய காரணம் ஆகி வீட்ட்டீர்கள்!?
• நாம் தெருவில் நீங்கள் செல்லும் போது ஒரு முறை பார்த்த ஆண் இன்று social media வில் உள்ள நமது புகைப்படங்களை download செய்து inch by inch ஆக ரசித்து பார்ப்பான்! (நவதுபில்லாஹ்)
• நீங்கள் இன்று மௌத் ஆனாலும் உங்கள் profile social media - வில் அப்படியே இருக்கும்! உங்கள் பதிவுகள் அப்படியே இருக்கும்! அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!
*• நீங்கள் மௌத் ஆன பின்பும் உங்கள் id யில் உள்ள புகைப்படம் post கள் மூலம் உங்களுக்கு தொடர்ந்து பாவம் வந்து கொண்டு தான் இருக்கும் நீங்கள் கபூரில் இருந்தாலும் சரியே!*
*⚠️ profile யை post செய்ய கூடியவர்களே இதை விட மோசமானது இன்னொன்று உள்ளது ⚠️*
• இதற்கு என்று சிலர் உள்ளார்கள்! இது போன்ற பெண்களின் புகைப்படங்களை download செய்து கொண்டு சில app மூலம் முகத்தை மறைத்து வைத்ததை நீக்கி உண்மையான முகத்தை வர வைக்கிறார்கள்!
• பின்பு photo editing செய்து ஆபாசமான website களில் upload செய்கிறார்கள் அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்!
*• ஆபாசமான website யில் முஸ்லீம் பெண்களுக்கு என்று தனி website யே உள்ளது! அதில் அவ்வளவு மோசமாக பெண்களை edit செய்து post செய்து உள்ளார்கள்!* (இதை ஒரு சிலர் எங்களுக்கு தெரிவித்தனர்)
• இவ்வளவு ஹராமான செயல் மானக்கேடான வெட்கக்கேடான செயல் என்று தெரிந்தும் இதற்கு பிறகும் உங்களை நீங்கள் மாற்றி கொள்ள வில்லை என்றால்??? நஷ்டம் யாருக்கு உங்களுக்கா? அல்லது எங்களுக்கா?
*• இவ்வாறு செய்வதால் உங்களுக்கு அதிகம் like மற்றும் followers கிடைக்கலாம்! ஆனால் அதனால் உங்கள் வெட்கம் மானம் கற்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் இழந்து கொண்டு இருக்கிறீகள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்!*
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்!*
(நூல் : புகாரி : 3483)
• நபி (ஸல்) அவர்களே வெட்கம் இல்லை என்றால் விரும்பியதை செய்ய சொல்லி விட்டார்கள்! ஏன் என்றால் உள்ளத்தில் சிறிது ஈமான் இருந்தாலும் பாவம் செய்யும் போதும் அல்லது வெட்கக்கேடான செயலை செய்யும் போது உள்ளத்தில் ஒரு நெருடல் ஏற்படும்!
• பாவம் செய்வதில் மகிழ்ச்சி காண்கிறீர்கள் அல்லது நீங்கள் செய்யும் செயலில் எந்த தவறும் தெரியவில்லை என்றால் அல்லாஹ் கூறுகிறான் :
*அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்!*
(அல்குர்ஆன் : 6 : 43)
• உங்கள் பாவ செயலை ஒவ்வொன்றையும் ஷைத்தான் அழகாக காட்டி உள்ளான் அதனால் நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு தவறாக தெரியாது!
• அல்லாஹ் பாதுகாக்கணும்! இன்னும் சிலர் *ஹிஜாப் அணித்து ஊரில் 100 நபர்கள் முன் மறைத்த தங்கள் உடலை ஒரே ஒரு photo மூலம் 1000 நபர்கள் மேல் தங்கள் உடலை அல்லது முகத்தை காட்டி விடுகிறார்கள்* அல்லது காசு வாங்காமல் விற்று விடுகிறார்கள்! ஹிஜாப் அணித்து photo எடுத்து post செய்யும் பெண்களும் விதி விலக்கு கிடையாது இதில்!!!
• எல்லோரும் செய்கிறார்கள் நாம் செய்தால் என்ன தவறு என்று சிலர் வைப்பார்கள் ஆனால் அவர்கள் நாளை மறுமையில் நரகம் சென்றாள் எல்லோரும் நரகம் செல்லுகிறார்கள் நானும் நரகம் சொல்லுவேன் என்று செல்லுவிர்களா??? சிந்தித்து கொள்ளுங்கள் சகோதரிகளே!
• இன்னும் சிலர் நீங்கள் தவறாக பார்க்கிறீர்கள்? உங்கள் பார்வையில் தான் தவறு உள்ளது : நீங்கள் தங்கச்சி அல்லது அக்காவாக பாருங்க என்று தங்கள் செய்யும் ஜினா (விபச்சாராம்) அல்லது மான கேடான செயலுக்கு காரணம் காட்டுகிறார்கள்! நவதுபில்லாஹ்!
• இன்னும் சிலர் இவ்வாறு செய்ய கூடாதுனு அல்லாஹ் சொல்லி இருக்கானா? நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்களா என்று கேட்கிறார்கள் இவை எல்லாம் நான் பாவம் செய்து கொண்டு தான் இருப்பேன் என்னால் அதில் இருந்து மீண்டு வரமுடியாது என்று மறைமுகமாக கூறுகிறார்கள்!!! நவதுபில்லாஹ்! ஷைத்தான் எவ்வளவு அழகாக அவர்களின் செயலை காட்டி உள்ளான்!!!
• இது போன்றவர்களை உலகிலயே அல்லாஹ் பிடிப்பான் விதி விளக்காக தப்பித்து கொண்டுவர்கள் ஆனால் மறுமை நாளில் மாட்டி கொள்ளுவார்கள் ;
*அன்றைய தினம் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களது கால்களும் சாட்சி கூறும்!*
(அல் குர்ஆன் : 36 : 65)
• நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் தனியாக பதில் கூற வேண்டும் அது வரை நாம் எங்கும் செல்ல முடியாது!
*• அல்லாஹ் பாதுகாத்த ஸாலிஹான முஃஹ்மினா பெண்களை தவிர!*
• பெண்கள் புகைப்படங்களை post ஆக அல்லது profile ஆக நீங்கள் வைப்பதாக இருந்தால் அதற்கு பதில் யாரையும் கவராத வகையில் எளிமையாக கண்ணியமான cartoon girl photo க்களை வைத்து கொள்ளலாம்! அல்லது இயற்கை காட்சிகள் ஏதேனும் வைத்து கொள்ளலாம்!
*❣️💐நேரான பாதை💐❣️*
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!