🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

பாவத்தின் கணக்கு


அல்லாஹ்வின் திருப்பெயரால்  ........


பாவத்தின் கணக்கு  நம்மில் பலபேர்களுக்கு தெரிவதில்லை , புரிவதில்லை! இதெல்லாம் ஒரு பாவமா? இது என்ன பெரிய தவறு இருக்கப்போகிறது? என்று சிலபேர்கள் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்கிறார்கள் .

இன்று சர்வசாதாரணமாக சிலர்  சிலரைப் பற்றி பேசிவிடுகிறார்கள் , அதன் விளைவுகளைக் கூட சிந்திப்பதில்லை ! அதனால் ஏற்படுக்கூடிய பிரச்சனைகளை கூட கவலைப்படுவதில்லை!  ' நான் என்ன பேசிவிட்டேன்? என்ன சொல்லிவிட்டேன் ? நான் உண்மையைத்தான் கூறினேன் ! '' ஒரு முஸ்லீம் பெண் வெட்கம் இல்லாமல் ஆட்டம் போடுகிறாள் , அதை இன்ஸ்டாக்ராம் பதிவு செய்கிறாள் . எல்லோரும் அதை பார்க்கிறார்கள் , ரசிக்கிறார்கள் . இதைத்தான் மற்றவர்களிடம் கூறினேன் ! அந்த முஸ்லீம் பெண் செய்ததது தவறுதானே , இது அசிங்கம் இல்லையா ? இப்படி ஒரு பெண் அவளுடைய  வாதத்தை வைக்கிறாள் ! 


இன்று சர்வசாதாரணமாக சமூகஊடகங்களில் சில முஸ்லீம் பெண்கள் செய்யக்கூடிய செயல்கள் வேதனையாகத்தான் இருக்கிறது! ஆனால் அதைவிட ஒரு பெரிய வேதனை என்னெவென்றால் : அவர்கள் செய்யும் செயல்களை , மற்றவர்களுக்கு பரப்பி , வாட்ஸ் ஆப் மூலம்  எத்தனை குரூப்பு இருக்கோ அதில் அத்தனை பேர்களுக்கும்  பரப்பிவிடுவது ஒரு நல்ல செயலாக இப்போ நினைக்கிறார்கள்! இதை சிலர் நியாயப்படுத்தி கூட சொல்கிறார்கள்! இப்படி போய்க்கொண்டுயிருக்கிறது நம்முடைய சமுதாயம்! 


ஒருவர் தவறு செய்கிறார் (செய்கிறாள்)  ஒரு முஸ்லீம் பெண் தன் வீட்டில் கவர்ச்சியாக ஆடி , பாடி வீடியோ மூலம் பதிவு செய்கிறாள் , பிறகு அவள் அதை சமூகஊடகங்களில் பதிவு செய்கிறாள் . இதை எல்லோரும் ரசித்து பார்ப்பார்கள் , சிலர் அசிங்கமாக விமர்சனம் செய்வார்கள், இப்படி எல்லாம் நடக்கும் . இந்த செயல் அனாச்சாரமாகத்தான் கருதப்படும்! இது ஒரு தவறான செயல்! இது கண்டிக்கத்தக்கது! அந்த முஸ்லீம் பெண்ணுக்கு பொறுப்பாளி , பெற்றோர்கள் தான்  ! (திருமணம் ஆனா பெண்ணாக இருந்தால் கணவர்தான் பொறுப்பாளி) 


ஒரு முஸ்லீம் பெண் தெரிந்தோ அல்லது அறியாமலோ தவறு செய்கிறாள் என்றால்  , இன்ஷாஅல்லாஹ் அவள் விரைவில் அல்லது பிறகு திருந்தி , மனம் வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரலாம்! அல்லாஹ் அவளை மன்னிக்கலாம்! (அல்லாஹ் கருணையுயுள்ளவன் ) ஆனால், மற்றவர்கள் செய்யும் கெட்ட செயல்களை  பரப்பி , இன்னும் பெரிதாக ஊதி , அசிங்கப்படுத்தி வாய் கூசாமல் எங்கு பார்த்தாலும் பேசிக்கொண்டு திரியும் சிலர்  . அவர்களுக்கு   இது தவறான செயல் என்று தெரியாமல்  , இப்படியே வாழ்க்கையை கழித்துக்கொண்டு போவார்கள்!  இது அவர்களுக்கு பாவகணக்கு என்று எப்பொழுதும் அறியமாட்டார்கள்! ஒருவரைப் பற்றி இப்படி தவறாக பேசி பரப்பி கொண்டு திரியும் முஸ்லிம்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! மறுமை நாளை பயந்துகொள்ளுங்கள்! சின்ன சின்ன பாவம் இறுதியாக ஒரு பெரிய பாவ சுமையாக மாறிவிடும்! முடிந்தளவு மற்றவர்கள் குறைகளை அல்லது தவறுகளை மறைக்க பாருங்கள்!  பரப்பிக்கொண்டு திரியாதீர்கள்! மரணம் எப்பொழுதுவேண்டுமானாலும் வரலாம்.. அதற்க்கு முன்னதாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள்! மற்றவர்களைப் பற்றி புறம் பேசி கொண்டு, அவதூறு பரப்பிக்கொண்டு, குறைகளை தேடிக்கொண்டு இந்த நிலையில் மரணம் வந்தால் உங்கள் நிலை என்னவாகும்?  கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்! 


சம்மூக ஊடகங்களில் இழிவான செயல்களை செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்! ஆடுவது , பாடுவது, மார்க்கத்துக்கு எதிரான செயல்களை செய்வதை உங்களை அதிலிருந்து நிறுத்திக்கொள்ளுங்கள்!  அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! மறுமைநாள் பயந்துகொள்ளுங்கள்! 


மார்க்க கல்வி எவ்வளவு அவசியம் என்பதை புரிந்துகொள்வதற்காக ஒரு கதையுடன் முடிக்கிறேன்.

அறியாமை என்பது மனிதர்களை பீடிக்கும் நோய்களிலேயே மிகவும் கெட்ட நோயாகும்! உலக விஷயத்தில் அறியாமை என்பது வளங்களைத்தான் இழக்கச் செய்யும். ஆனால், இறைவனுடைய விஷயத்தில் அறியாமை என்பது பிறப்பின் நோக்கத்தையே பாழாக்கும்! உலக வாழ்க்கையை வீணாக்கும்! மறுமையிலோ தண்டனைக்குள்ளாக்கும்!


மேலும், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களைத்தான் இப்லீஸ் என்னும் ஷய்தான் தன்னுடைய நேசர்களாக ஆக்கிக் கொள்கிறான். அவர்களுக்கு தீயவைகளை போதிக்கின்றான். இறைவனுடைய கட்டளைகளுக்கு புறம்பான காரியங்களை செய்யச் செய்கிறான்! இதற்கு உதாரணமாக ஒரு கதை சொல்வார்கள்!


ஒருமுறை இப்லீஸ் என்னும் ஷய்தான் தன்னுடைய கூட்டத்தாரிடம், "ஷய்தான்களே! வழக்கம் போல் இன்றும் கிளம்பிச் செல்லுங்கள். மக்களை வழிகெடுத்து, பாவகரமான காரியங்களை செய்யத் தூண்டுங்கள்! இன்று யார் சிறப்பான காரியத்தை செய்து வருகிறாரோ அவருக்கு நான் பரிசு கொடுக்கப் போகிறேன்" என்று கூறினான்.


உடனே ஷய்தான்கள் வெறி பிடித்தவர்களாக வேகவேகமாக புறப்பட்டார்கள். உலகின் பல பாகங்களிலும் பரவி மனிதர்களை வழிகெடுக்கத் தொடங்கினார்கள்.


மறுநாள் ஷய்தான்கள் அனைவரும் இப்லீஸ் முன்பாக கூடினார்கள். தாம் செய்து வந்த காரியங்களை ஆணவத்துடன் கூறத் தொடங்கினார்கள். ஒரு ஷய்தான் எழுந்து, "தலைவரே! நான் சூழ்ச்சிகள் செய்து சத்தியவான்களை பொய் பேசும்படியாகச் செய்தேன்" என்றான். உடனே இப்லீஸ், "பேஷ், பேஷ்" என்று அவனைப் பாராட்டினான்.


அடுத்தவன் எழுந்து, "தலைவரே! நான் விசுவாசிகள் மனங்களிலே இச்சையை தூண்டிவிட்டு விபச்சாரம் புரியும்படியாகச் செய்தேன்" என்றான். இப்லீஸ் அவனையும் பாராட்டினான். இன்னொரு ஷய்தான் எழுந்து, "தலைவரே! நான் பொருமையாளர்கள் மனங்களிலே சினத்தை ஏற்படுத்தி கொலைகள் செய்ய வைத்தேன்" என்றான். இப்லீஸ் அவனையும் பாராட்டி மகிழ்ந்தான்.


ஒரு ஷய்தான் எழுந்து, "நான் மனிதர்கள் மனங்களிலே கவலைகளை ஏற்படுத்தி குடிகாரர்களாக ஆக்கினேன்" என்றான். இப்லீஸ் அவனையும் பாராட்டினான். இப்படியாக ஒவ்வொரு ஷய்தானும் தான் செய்த காரியங்களை இப்லீஸிடம் கூறினார்கள். இப்லீஸ் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்தான். இறுதியாக ஒரு நொண்டி ஷய்தான் எழுந்து, "தலைவரே! எனது கூட்டாளிகள் பெரிய பெரிய காரியங்களை செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் நானோ என்னால் முடிந்த ஒரு சின்ன காரியத்தைத்தான் செய்திருக்கிறேன்" என்றான். "அந்த காரியம்தான் என்ன?" என்று இப்லீஸ் கேட்டான்.


"அறிவை பெறுவதற்காக மாணவர்கள் மதரஸாக்களுக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை வீண் விளையாட்டுகளில் ஈடுபடுத்தினேன்.


அதனால் அவர்கள் மதரஸாக்களுக்கு செல்லாமல், வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள். மாலைவரை விளையாடிவிட்டு வீடு திரும்பினார்கள். இதனால் அவர்களது படிப்பு கெட்டுப்போனது" என்றான்.


இதைக் கேட்டதும் இப்லீஸ் சந்தோஷ மிகுதியால் ஆட்டம் போடத் தொடங்கினான். பிறகு, "நொண்டி ஷய்தானே! நீதான் பெரிய காரியத்தை செய்திருக்கிறாய். உனக்குத்தான் பரிசு!" என்று கூறினான். இதைக் கேட்டதும் மற்ற ஷய்தான்கள் ஆச்சரியப்பட்டார்கள்! ஒரு ஷய்தான் எழுந்து, "தலைவரே! இந்த சின்ன விஷயத்திற்கா பரிசு?" என்று கேட்டான்.


உடனே இப்லீஸ் கோபப்பட்டவனாக, "அறிவு கெட்ட ஷய்தானே! இதுவா சின்ன விஷயம்? இதுவே போற்றிப் புகழ் வேண்டிய பெரிய விஷயமாகும்! ஒருவன் படித்துவிட்டால் புத்தி வந்துவிடும்! நல்லது கெட்டது புரிந்துவிடும். எந்த செயலையும் ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வான். இதனால் அவனிடம் நமது காரியம் எளிதில் செல்லுபடியாகாது. ஆனால் படிக்காதவனுக்கோ புத்தி இருக்காது. நல்லது கெட்டது எதுவும் புரியாது. எதையும் ஆராயவுமாட்டான். அவனுடைய மனசு குழைத்த களிமண் போன்றதாக இருக்கும். அவனை நாம் நம் இஷ்டப்படி ஆட்டுவிக்கலாம். தீயதை நினைக்க வைக்கலாம். நினைத்ததை நிகழ்த்தி நியாயப்படுத்தலாம். வைக்கலாம். நிகழ்ந்ததை நியாயப்படுத்தியதை நிலைக்கவைக்கலாம். இவ்விதமாக நமது சூழ்ச்சிகள் அவனிடமே செல்லுபடியாகும். உனக்கு சந்தேகமிருந்தால் சோதித்து பார்த்துக்கொள்!" என்றான்.



 பாவங்களின்  கணக்கு


 ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புல் இல்லாத தரிசு நிலத்தில் அமர்ந்திருந்தார்கள்.  நெருப்பை மூட்டுவதற்கு எரிபொருளைச் சேகரிக்குமாறு அவர் தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் எரிபொருளுக்கு உலர்ந்த புல்லைக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருப்பதாக பதிலளித்தனர்.  நபி (ஸல்) அவர்கள் தங்களால் முடிந்ததைச் சேகரிக்கச் சொன்னார்கள்.  அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய அளவு சேகரிக்கப்பட்டு, மெதுவாக ஒரு குவியல் ஆனது.  நபி (ஸல்) அவர்கள் புல் குவியலைப் பார்த்துக் கூறினார்கள்.


 "கியாமத் நாளில் மக்களின் பாவங்கள் அதே வழியில் சேகரிக்கப்படும்."  அந்த தரிசு நிலத்தில் காய்ந்த புல்லைக் காண முடியாது, ஆனால் தேடும் போது அது குவியல் குவியலாக மாறிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூற விரும்பினார்கள்.  அதே போல் ஒருவன் செய்யும் சிறிய பாவங்களை பார்க்க முடியாது, ஆனால் கியாமத் நாளில் அனைத்து பாவங்களும் சேகரிக்கப்படும் போது அவை பெரிய அளவில் இருக்கும்.


 




கருத்துரையிடுக

0 கருத்துகள்