Italian Trulli

பொறாமை கொள்ளாதே!😡😱

 


பொறாமை கொள்ளாதே!😡😱


பொறாமை என்பது மனக்கொதிப்பால் ஏற்படும் கொடிய விளைவு. மனக்கொதிப்பு என்பது சினத்தின் பிரதிபிம்பம். சினம் கொண்டவனின் உள்ளத்தில் மனக்கொதிப்பு தாண்டவமாடுகி றது. மனக்கொதிப்பு பொறாமையாக மாறுகிறது. பொறாமை பல்வேறு தரங்களாகப் பிரிகிறது. இழிவிற்குரிய பலதரப்பட்ட வகைகளாகப் பிரிவினை கொள்கிறது. அவற்றையெல்லாம் ஒருங்கே விவரித்து முடிப்பது சாத்தியமில்லை. அவ்வளவு அதி சும் அதன் பிரிவுகள்.


அறிவிற் சிறந்த முன்னோர்கள் பொறாமையை இழித்துரைத் இருக்கின்றனர். அத்தகைய இழியுரைகள் பல இருக்கின்றன. உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.


"நெருப்பு விறகைத் தின்றுவிடுவது போல் பொறாமை நன்மைகளைத் தின்று விடுகிறது" என்று அண்ணல் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். மீண்டும் கூறினார்கள்:


"நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள்: மக்க


ளின் தொடர்பை அறுத்துக் கொள்ளாதீர்கள்; பகைமையை வளர்த்துக் கொள்ளாதீர்கள் - சகோதர மனப்பான்மையுடன் மக்களிடம் பழகுங்கள்!"


"சினமும் பொறாமையும் நாசினிகள். இவை மார்க்கத் தையே பாழ்படுத்தும் நாசினிகள்!"


மேலும் கூறியுள்ளார்கள்:


"நீங்கள் உண்மை முஸ்லிம்களாகத் திகழாதவரை உங்களால் சுவன வாழ்க்கையை அடைய முடியாது. நீங்கள் பரஸ்பரம் நட்புக்கொள்ளாதவரை உங்களால் உண்மை முஸ்லிம்களாகத் நிகழ முடியாது. இந்த நிலைமையை உண்டாக்குவதற்குரிய ஒரே வழி என்ன தெரியுமா? நீங்கள் ஒருவருக்கொருவர் 'சலாம்' சொல்லிக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் நட்பு விரிவடை யும். பொறாமையும் வெருண்டோடும்!"


மீண்டும் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதே!


"வறுமையின் காரணமாகக் 'குப்ர்' என்னும் கொடிய பாவமே நிகழ முடியும். வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மத நம்பிக்கையை இழந்து 'குப்ர்' என்ற துர்நம்பிக்கைக் குத் தங்கள் உள்ளத்தில் இடமளித்து விடுகிறார்கள். இதே போன்று நற்காரியங்கள் விதியை மிஞ்சும் ஆற்றலுடையவையா யிருக்கின்றன. விதியின் விளையாட்டையும் நற்காரியங்களின் உதவியால் வெற்றி கொள்ள முடியும்!"


இன்னும் கூறினார்கள்:


"என் சமூகத்தவரைப் பின்னொரு காலத்தில் ஒரு வியாதி பிடிக்கும்; அது முன்னோரையெல்லாம் பீடித்துத் துன்புறுத்திய வியாதி!"


"அது என்ன வியாதி?" என்று நண்பர்கள் கேட்டார்கள். அண்ணலவர்கள் விடையிறுத்தார்கள்:


"திமிர், பொருளாசை, பொறாமை முதலியவை தாம்!" 'உன் சகோதரன் அடையும் துன்பத்தைக் கண்டு நீ மகிழ்ச்சியடை யாதே. அவனை இறைவன் மன்னித்துவிட முடியும். உன்னைத் துன்பத்திலாழ்த்துவது சாதாரண காரியம்!" என்றும் கூறினார்கள். இப்படி ஒரு சம்பவம் வரையப்படுகிறது, நபி மூஸா(அலை)


அவர்கள் இறைவனின் சந்நிதானத்திற்குச் சென்றபோது இறையா


சனத்துக்கருகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டார் கள். அதிசயப்பட்டார்கள்; "இந்த மனிதனுக்கு இறைவனிடத்தில் அத்துணை அந்தஸ் தா" என்று தமக்கு தாமே கேட்டுக் கொண்டார்கள்.


நபி மூஸா அவர்கள் இறைவனிடம் அந்த மனிதரின் பெயரைத் தமக்கு அறிவிக்குமாறு வேண்டிக்கொண்டார்கள். ஆனால் இறைவன் மறுத்து விட்டான்.


"அவர் பெயர் இருக்கட்டும். அதை நீர் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவர் செய்து வந்தவற்றில் முக்கியமான மூன்று காரியங்களை மட்டும் கூறுகிறேன். இறைவன் மக்களுக்க ளித்திருக்கும் அருட்கொடைகளைப் பார்த்துப் பொறாமைப்படுவ தில்லை. பெற்றோரை அவர்துன்புறுத்த மாட்டார்; புறம் பேசு வதை அவர் வேரோடுஅகற்றி விட்டார்!"


பொறாமைப்படுபவன் என் அருட்கொடைகளுக்கு விரோதி; என் தீர்ப்பை புறக்கணிப்பவன் நான் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கும் கொடைகளை விரும்பாதவன் - என் பிரிவினையை மறுப்பவன்!'  என்று இறைவன் கூறியிருப்பதாக ஸகரிய்யா (அலை) அவர்கள் கூறினார்கள்.


அண்ணலவர்கள் கூறினார்கள்.


"என் சமூகத்தவர் பொருள் திரட்டுவதில் அதிகமாகக் கவனம்  செலுத்துவது கண்டு நான் அச்சமுறுகிறேன். ஏனெனில் பொருள் குவியும்போது பொறாமையும் சண்டையும் உற்பத்தியா கின்றன.


"உங்கள் தேவைகளையும் திறமைகளையும் பகிரங்கப்படுத் நாதீர்கள். அவற்றை மர்மமாகவே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அருள் பெற்றவர்கள் - திறமையுள்ளவர்கள் எல்லோ ரும் பிறரால் பொறாமைக் கண்கொண்டு பார்க்கப் படுகிறார்கள்.


மீண்டும் கூறினார்கள்:


"இறையருளுக்கும் பலவிரோதிகள் இருக்கிறார்கள்!" யார் அவர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள்.


"இறைவன் மக்களுக்களித்திருக்கும் அருட்கொடைகளைப்


பார்த்து பொறாமைக் கொள்பவர்கள் என்று விடை கிடைத்தது.


இதுவரை அண்ணலவர்களின் கருத்துக்களை ஆராய்ந்தோம். இப்போது முன்னோர் கருத்துக்களை ஆராய்வோம்.


"மனிதனிடம் குடிகொள்ளும் முதல் தவறு பொறாமை எண்ணம் 'என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.


"நபி ஆதம் (அலை) அவர்களின் அந்தஸ்தைப் பார்த்து இப்லீஸ் பொறாமை கொண்டான்; இறைவனின் கட்டளைப்படி அவர்களுக்குத் தலை சாய்க்க மறுத்தான்; பின்னர் பலதரப்பட்ட இன்னல்களை விளைவித்தான். இவை அனைத் தும் பொறாமையின் விளைவுகளே."


அடுத்த தலைப்பு பொறாமை என்றால் 

என்ன ?😡


கருத்துகள்