Italian Trulli

கவலைப்படாதே ! பெண்ணே , அல்லாஹ் இருக்கிறான் !

 


 கவலைப்படாதே ! பெண்ணே , அல்லாஹ் இருக்கிறான் ! 

இந்த பெண்ணின் குமுறல் , நமக்கு கண்ணீரையும் , மனஉளைச்சலையும் மட்டும்தான் தருகிறது. நம்மால் இவர்களுக்கு செய்யமுடிந்த ஒரு விஷயம் , துஆ மட்டும்தான் ! அரபு நாடுகள் என்ன செய்கிறார்கள் என்ற இந்த பெண்ணின் கேள்வி.  யாருமே எங்களுக்கு இல்லையே என்று ஒரு பெரிய ஆதங்கம். நாங்கள் எங்கே போவோம் ? எங்களால் முடியவில்லை. உடல் சோர்ந்துவிட்டது என்ற மன குமுறல் !  இன்னும் இந்த மக்கள்கள் பல சோதனைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  இவர்களுக்கு முடிவு இல்லையா என்ற ஒரு கேள்வி எழும் . இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக இவர்களுக்கு ஒரு நல்ல முடிவு இருக்கும்.  அல்லாஹ் போதுமானவன். 


இந்த பதிவு எதனால்? பதிவிட்டேன் என்றால் .  இதனால் நாம் பெறக்கூடிய பாடமும் , படிப்பினையும் என்ன ? யாருக்கு என்ன நடக்கும் ? எந்த நாட்டுக்கு என்ன சோதனை வரும் ? எந்த ஊருக்கு என்ன பாதிப்பு அல்லது அழிவு ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. சில நாட்கள் முன்னே கேரளாவில் ஒரு அழகான கிராமம் இருந்தது . ஆனால்., இப்போ அந்த கிராமம் இல்லை. மண்ணோடு புதைந்துவிட்டது.  இதை அந்த மக்கள்கள் கொஞ்சம் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள் . அடக்கம் செய்யாமலே அடங்கிப்போனது வாழ்க்கை, எத்தனை செல்வங்கள் எத்தனை உறவுகள் எதுவும் உதவவில்லை, கண் இமைக்கும் நேரத்தில் மண் இழுத்துக்கொண்டது.


ஆசை, ஆசையாய் கட்டிய வீடுகள் அன்பை அள்ளித் தந்த உறவுகள், பார்த்துப் பார்த்து சேர்த்துவைத்த சொத்துக்கள், எதுவும் உதவ முடியாத கடைசி நொடி, இவையெல்லாம் பார்த்துவிட்டு கண்ணீர் சிந்திய பின் கடந்து போவதற்கல்ல, நடந்தது யாவும் நமக்கான பாடங்கள், படிப்பிணைகள், அவ்வப்போது நமக்கு இறைவன் சில செய்திகளை சொல்வான். புரிந்துகொண்டால் மரணமும் வாழவைக்கும், நாம் வாழ்வது வழிப்போக்கர்கள் போன்றதுதான் என்பது வள்ளல் நபிகளாரின் வாக்கு.


அச.உமர் பாரூக் நேற்று நம்முடன் இருந்தவர்கள் , இன்று இல்லை.  இன்று நாம் இருக்கிறோம் , ஆனால். நாளை என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது.   இன்று நாம் ஆரோக்கியமாக அல்லாஹ்வின் அருளால் இருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ் ! 

 

இவ்வுலகம் பரீட்சைக் கூடமாக உள்ளதால் இங்கு கெட்டவர்கள் சிலர் நல்வாழ்வு வாழ்வதையும், நல்லவர்கள் சிலர் சிரமப்படுவதையும் கண்டு ஏமாந்துவிடக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.


ஏனெனில் எல்லா மனிதர்களையும் அல்லாஹ் சோதிக்கிறான். அனைவரையும் ஒரே மாதிரியாகச் சோதிக்காமல் பல்வேறு வகைகளில் சோதிக்கிறான்.


நூறு சதவிதம் ஒருவருக்கு இன்பங்களை வாரிவழங்கி ஒரு சதவிகிதம் கூட அவருக்குத் துன்பம் இல்லாமல் இருந்தால் அப்போது தான் மேற்கண்ட குழப்பங்கள் ஏற்படுவதில் பொருளிருக்கும்.


ஆனால் எந்த மனிதனுக்கும் அல்லாஹ் எல்லா இன்பங்களையும் வழங்கவே இல்லை. ஒரு துன்பம் கூட இல்லாத ஒரு மனிதனும் உலகில் இல்லை.


எந்தப் பாக்கியம் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அவரை நாம் உற்று நோக்கினால் அவருக்குக் கொடுக்கப்படாத பல பாக்கியங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.


 நம்முடைய பயணம் எங்கே போகிறது என்பதை சற்று சிந்த்தித்து பார்ப்போம். இந்த உலகத்தை நோக்கியா அல்லது மறுமையை நோக்கியா ?  கொஞ்சம் நம்முடைய மறுமையின் நிலையை யோசிப்போம் .  what'ஸ் up ஸ்டேட்டஸ் விட நம்முடைய மறுமை ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம். 

கருத்துகள்