நபிவழியில் சுன்னத்தான துஆக்கள்.
ஆடை அணியும்போது
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِيْ هٰذَا )الثَّوْبَ (وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவன்தான் இந்த ஆடையை எனக்கு அணிவித்தான்; என்னுடைய எந்த ஆற்றலும் திறமையுமின்றியே அவன் எனக்கு இதை வழங்கினான். (ஸுனன் அபூதாவூது)
புத்தாடை அணியும்போது
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَاصُنِعَ لَهُ
அல்லாஹ்வே... எல்லாப் புகழும் உனக்கே!நீதான் இதை எனக்கு அணிவித்தாய். இதன் நன்மையையும், இது எதற்காகச் செய்யப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையை விட்டும், இது எதற்காகச் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஸுனன் அபூதாவூது)
வீட்டிற்குள் நுழையும்போது
بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا
அல்லாஹ்வின் பெயர் கூறி நுழைந்தோம்; அல்லாஹ்வின் பெயர் கூறி வெளியேறினோம்;எங்களது இறைவனிடமே பொறுப்பு ஒப்படைத்தோம்.
- இதன் பிறகு, குடும்பத்தாருக்கு அவர் ஸலாம் கூறவேண்டும்.(ஸுனன் அபூதாவூது)
இரவில் புரண்டு படுக்கும்போது
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمٰوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْـزُ الْغَفَّارُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அனைவரையும் அடக்கி ஆளக் கூடியவன்; வானங்கள், பூமி மற்றும் அவைஇரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்; அனைவரையும் மிகைத்தவன்; மகா மன்னிப்பாளன்.(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
கவலை மற்றும் துக்கத்தில்
கவலை மற்றும் துக்கத்தில்
اَللّٰهُمَّ إِنِّـيْ عَبْدُكَ اِبْنُ عَبْدِكَ اِبْنُ أَمَتِكَ نَاصِيَتِيْ بِيَدِكَ مَاضٍ فِـيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِـيْ كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِّنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِـيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ وَنُوْرَ صَدْرِيْ وَجَلَاءَ حُزْنِـيْ وَذَهَابَ هَمِّـيْ
(பெண்கள் இந்த துஆவை ஓதும் போது,
اَللّٰهُمَّ إِنِّـيْ عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ
என்ற வாசகத்திற்குப் பதிலாக
اَللّٰهُمَّ إِنِّـيْ أَمَتُكَ بِنْتُ عَبْدِكَ بِنْتُ أَمَتِكَ
என்று கூறவேண்டும்.)
அல்லாஹ்வே! நான் உன் அடிமை; உனது அடிமையின் மகன்; உன் அடிமைப் பெண்ணின் மகன்; எனது உச்சி முடி உன் கையில் இருக்கிறது; என்னில் உன் தீர்ப்பு நிச்சயம் நிறைவேறக் கூடியதே; என் விஷயத்தில் உன் விதி நீதியானதே; உனக்குத் தகுதியான ஒவ்வொரு பெயரின் பொருட்டால் - அப்பெயரை நீ உனக்குச் சூட்டி இருக்கின்றாய்;
அல்லது அதை உனது நூலில் இறக்கி இருக்கின்றாய்; அல்லது உனது அடியார்களில் ஒருவருக்கு அதை நீ கற்றுக் கொடுத்திருக்கின்றாய்; அல்லது உன்னிடம் உள்ள மறைவான கல்வியில் அதை நீ மறைத்து வைத்திருக்கின்றாய் - (அத்தகைய உனது பெயரால் இந்தக்) குர்ஆனை எனது உள்ளத்திற்கு வசந்தமாகவும் எனது இதயத்திற்குப் பிரகாசமாகவும் எனது கவலையை அகற்றக் கூடியதாகவும் எனது துக்கத்தை நீக்கக் கூடியதாகவும் ஆக்கி வைக்க வேண்டுமென உன்னிடம் கேட்கிறேன். (முஸ்னது அஹ்மது)
கஷ்டமான நேரத்தில்
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لَا إِلٰهَ إِلَّااللّٰهُ رَبُّ السَّمٰوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் மகத்துவமிக்கவன்; மிகுந்த சகிப்பாளன்; அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் அர்ஷின் மகத்தான அதிபதியாவான்; வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் வானங்களின் இறைவன்; பூமியின் இறைவன்; சங்கைமிகு அர்ஷின் அதிபதியாவான்.(ஸஹீஹுல் புகாரி)
கடன் நீங்க
اَللّٰهُمَّ اكْفِنِيْ بِـحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
அல்லாஹ்வே... நீ ஆகுமாக்கியதைக் கொண்டு, நீ தடுத்தவற்றை விட்டும் என்னைப்பாதுகாத்துக் கொள்! உனது கிருபையைக் கொண்டு உன் அல்லாத மற்றனைவரை விட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்கி வை!(ஜாமிவுத் திர்மிதி)
திடுக்கிட்டு எழும்போது, வெருட்சியுறும்போது
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَنْ يَّحْضُرُوْنِ
பரிபூரணமான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவனது கோபத்தை விட்டும் அவனது தண்டனையை விட்டும் அவனது அடியார்களின் தீங்கை விட்டும் ஷைத்தான்களின் தீண்டுதல்களை விட்டும் அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். (ஸுனன் அபூதாவூது)
ஒரு காரியம் சிரமமானால்
اَللّٰهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَّأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
அல்லாஹ்வே! நீ இலகுவாக்கியதைத் தவிர வேறொன்றும் இலகுவானதல்ல; நீதான் கடினமான நிலத்தையும் மிருதுவானதாக ஆக்கும் ஆற்றல் பெற்றவன்.(ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
விருப்பமற்றது நடக்கும்போது
قَدَرُ اللّٰهِ وَمَا شَاءَ فَعَلَ
அல்லாஹ்வின் விதி (இப்படித்தான்). அவன் நாடியதைச் செய்கின்றான்.(ஸஹீஹ் முஸ்லிம்)
குழந்தை பிறந்தவருக்கு வாழ்த்துச் சொல்லும்போது, அதற்குப் பதில் சொல்லும்போது
بَارَكَ اللّٰهُ لَكَ فِي الْمَوْهُوْبِ لَكَ وَشَكَرْتَ الْوَاهِبَ وَبَلَغَ أَشُدَّهُ وَرُزِقْتَ بِرَّهُ
உனக்கு வழங்கப்பட்டதில் அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும்; கொடுத்தவனுக்கு நன்றி செலுத்து! குழந்தை அதன் வாலிபத்தை அடையட்டும்! அது உனக்கு நன்மை செய்யக் கூடியதாக இருக்கட்டும்.
இதற்குப் பதில்,
بَارَكَ اللّٰهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَزَاكَ اللّٰهُ خَيْرًا وَّرَزَقَكَ اللّٰهُ مِثْلَهُ وَأَجْزَلَ ثَوَابَكَ
"அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும்! உன் மீது பரக்கத் செய்யட்டும்! அல்லாஹ் உனக்கு நற்கூலி வழங்கட்டும்! இதுபோன்றதை அல்லாஹ் உனக்கும் வழங்கட்டும்! உனது நன்மையை அதிகப்படுத்தட்டும்!' என்று கூற வேண்டும்.(அல்அத்கார்)
நோயாளியை நலம் விசாரிக்கும்போது
لَا بأْسَ طَهُوْرٌ إِنْ شَاءَ اللّٰهُ
பரவாயில்லை; இந்த நோய் (உங்கள் குற்றங்களை) தூய்மைப்படுத்தக் கூடியதாக இருக்கும், அல்லாஹ் நாடினால்! (ஸஹீஹுல் புகாரி)
நோயாளியை நலம் விசாரிக்கும்போது
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَّشْفِيَكَ
(இதை ஏழு முறை ஓத வேண்டும்)
மகத்தான அர்ஷின் அதிபதியான மகத்துவமிக்க அல்லாஹ்விடம் உன்னைக் குணப்படுத்த வேண்டுகிறேன்.(ஜாமிவுத் திர்மிதி)
நோயாளியை நலம் விசாரிப்பதன் சிறப்பு
null
ஒருவர் தனது முஸ்லிமான சகோதரரை நலம் விசாரிக்கச் சென்றால், அவர் சொர்க்கத்துக் கனிகளுக்கு இடையே நடந்து செல்கிறார்.
அவர் நோயாளிக்கு அருகில் அமரும்போது கருணை அவரைச் சூழ்ந்து கொள்கிறது. அவர் சென்றது காலையாக இருந்தால் மாலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக துஆ செய்கிறார்கள். அவர் சென்றது மாலையாக இருந்தால் அடுத்த காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் துஆ செய்கிறார்கள்.(ஜாமிவுத் திர்மிதி)
நோய் அதிகமாகி வாழ்க்கை வெறுத்து விடும்போது
اَللّٰهُمَّ اغْفِرْ لِـيْ وَارْحَمْنِيْ وَأَلْـحِقْنِيْ بِالرَّفِيْقِ الْأَعْلٰى
அல்லாஹ்வே... எனக்கு மன்னிப்பு வழங்கு! எனக்குக் கருணை காட்டு! மிக உயர்ந்தத் தோழனோடு என்னைச் சேர்த்து வை! (ஸஹீஹுல் புகாரி)
சோதனையின்போது
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّٰهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِّنْهَا
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கே சொந்தமானவர்கள்; அவன் பக்கமே நாங்கள் திரும்புகிறோம்; அல்லாஹ்வே... என் சோதனையில் எனக்கு நற்கூலி வழங்கு! அதை விட எனக்குச் சிறந்ததைப் பகரமாகத் தந்திடு!(ஸஹீஹ் முஸ்லிம்)
கப்ருகளைப் பார்க்கும்போது
اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَاحِقُوْنَ وَيَرْحَمُ اللّٰهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتأْخِرِيْنَ أَسْاَلُ اللّٰهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
இங்கு இருக்கும் முஃமின்களே! முஸ்லிம்களே! உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நிச்சயமாக நாங்களும் உங்களை வந்தடைவோம், அல்லாஹ் நாடினால்! (எங்களின் முன் சென்றவர்களுக்கும் பின் வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை காட்டுவானாக!) எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடம் ஆஃபியத்தை (நற்சுகத்தை, பாதுகாப்பைக்) கேட்கின்றேன்.(ஸஹீஹ் முஸ்லிம்)
உணவு உண்ட பிறகு
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ.
பால் குடிக்கும்போது
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
அல்லாஹ்வே... எங்களுக்கு இந்த உணவில் பரக்கத் செய்! இதைவிட சிறந்ததை எங்களுக்கு உணவாக அளித்திடு! அல்லாஹ்வே... எங்களுக்கு இதில் பரக்கத்தைக் கொடு! மேலும், எங்களுக்கு இதிலிருந்து அதிகம் கொடு! (ஜாமிவுத் திர்மிதி)
உணவு உண்ட பிறகு
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَطْعَمَنِيْ هٰذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன்தான் இதை எனக்குச் சாப்பிடக் கொடுத்தான். என்னுடைய எந்தச் சக்தியும் ஆற்றலும் இல்லாமல் அவனே எனக்கு இதை வழங்கினான்.(ஸுனன் அபூதாவூது)
உணவு உண்ட பிறகு
اَلْحَمْدُ لِلّٰهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ غَيْرَ (مَكْفِيٍّ وَّلَا) مُوَدَّعٍ وَّلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அதிகமான, தூய்மையான, வளமான எல்லாப் புகழ்ச்சிகளும் அல்லாஹ்விற்கே சொந்தமானவை. (உனது) இப்புகழ் நிலையானது;போற்றத்தக்கது; அவசியமானது எங்கள் இறைவனே!(ஸஹீஹுல் புகாரி)
விருந்தளித்தவருக்காக
اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹ்வே... நீ அவர்களுக்கு அளித்தவற்றில் அவர்களுக்கு பரக்கத் வழங்கு! அவர்களுக்கு மன்னிப்பு வழங்கு!அவர்களுக்குக் கருணை காட்டு!(ஸஹீஹ் முஸ்லிம்)
நீர் புகட்டியவருக்காக
اَللّٰهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِيْ وَاسْقِ مَنْ سَقَانِيْ
அல்லாஹ்வே... எனக்கு உணவளித்தவருக்கு நீயும் உணவளி! எனக்கு நீர் புகட்டியவருக்கு நீயும் நீர் புகட்டு! (ஸஹீஹ் முஸ்லிம்)
தும்மும்போது
اَلْحَمْدُ لِلّٰهِ
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் என்று சொல்ல வேண்டும்.
அதைக் கேட்பவர் يَرْحَمُكَ اللّٰهُ
"அல்லாஹ் உனக்கு கருணை காட்டட்டும்'' என்று சொல்ல வேண்டும்.
அதற்குத் தும்மியவர்,
يَهْدِيْكُمُ اللّٰهُ وَيُصْلِحُ بَالَكُمْ
"அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்; உங்களது காரியங்களைச் சீர்படுத்தட்டும்'' என்று சொல்ல வேண்டும். (ஸஹீஹுல் புகாரி)
சோதனையில் சிக்குண்டவரைப் பார்க்கும்போது
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِيْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! உன்னைச் சோதித்ததை விட்டும் அவனே எனக்குப் பாதுகாப்பு அளித்தான்; அவன் படைத்த படைப்பினங்களில் பெரும்பாலானவரை விட என்னை மிகச் சிறப்பாக்கி வைத்தான். (ஜாமிவுத் திர்மிதி)
கடனைத் திருப்பித் தரும்போது
بَارَكَ اللّٰهُ لَكَ فِيْ أَهْلِكَ وَمَالِكَ إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ
அல்லாஹ் உங்களுக்கு உங்கள் குடும்பத்திலும், உங்கள் செல்வத்திலும் பரக்கத் செய்யட்டும்! பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுக்கப்பட்ட கடனுக்கு பகரம், (அதைகொடுத்தவரை) வாழ்த்துவதும் (அந்தக் கடனைத்) திரும்பத் தருவதும்தான்.(ஸுனனுன் நஸாயி)
ஷிர்க்கை பயப்படும்போது
اَللّٰهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
அல்லாஹ்வே... நான் அறிந்த நிலையில் உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்! நான் அறியாதவற்றிற்கு உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!(முஸ்னது அஹ்மது)
சகுனம் ஏற்படும்போது
اَللّٰهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ وَلَا إِلٰهَ غَيْرُكَ
அல்லாஹ்வே! உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் இல்லை; உனது நன்மையைத் தவிர வேறு நன்மை இல்லை; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (முஸ்னது அஹ்மது)
வாகனத்தில் ஏறும்போது
بِسْمِ اللهِ اَلْحَمْدُ لِلّٰهِ {سُبْحَانَ الَّذِيْ سَخَّرَلَنَا هٰذَا وَمَاكُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ} اَلْحَمْدُ لِلّٰهِ اَلْحَمْدُ لِلّٰهِ اَلْحَمْدُ لِلّٰهِ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ سُبْحَانَكَ اللهم إِنِّـيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ
அல்லாஹ்வின் பெயர் கூறி பயணிக்கின்றேன். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! (இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்தவனை மிக்க பரிசுத்தப்படுத்துகின்றோம்.
நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பக்கூடியவர்கள்) எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அல்லாஹ் மிகப்பெரியவன்!
அல்லாஹ் மிகப்பெரியவன்! அல்லாஹ் மிகப் பெரியவன்! அல்லாஹ்வே. உன்னையே நான் பரிசுத்தப்படுத்துகின்றேன்! நிச்சயமாக நான் எனக்கு அநீதி இழைத்துக் கொண்டேன்; எனக்கு மன்னிப்பு வழங்கு! குற்றங்களை மன்னிப்பவர் உன்னைத்தவிர வேறு யாருமில்லை!(ஸுனன் அபூதாவூது)
பயணத்தில்
اَللّٰهُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ {سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ} اَللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِيْ سَفَرِنَا هٰذَا الْبِرَّ وَالتَّـقْوٰى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضٰى اَللّٰهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هٰذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّٰهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الْأَهْلِ اَللّٰهُمَّ إِنِّـيْ أَعُوْذُبِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوْءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ.
அல்லாஹ் மிகப்பெரியவன்! அல்லாஹ் மிகப் பெரியவன்! அல்லாஹ் மிகப்பெரியவன்! (இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்தவனை மிக்க பரிசுத்தப்படுத்துகின்றோம். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பக்கூடியவர்கள்.) அல்லாஹ்வே! நிச்சயமாக நாங்கள் உன்னிடம் இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்திகொள்ளும் நற்செயலையும் கேட்கின்றோம். அல்லாஹ்வே... எங்களது பயணத்தை எங்களுக்கு இலகுவாக்கிக் கொடு! அதன் தொலை தூரத்தை எங்களுக்குச் சுருக்கிக் கொடு! அல்லாஹ்வே... நீதான் பயணத்தில் தோழன்; குடும்பத்தில் (பாதுகாக்கும்) பிரதிநிதி; அல்லாஹ்வே... நிச்சயமாக நான் உன்னிடம் பயணத்தில் ஏற்படும் சிரமங்களை விட்டும், துக்ககரமான காட்சிகளை விட்டும், செல்வத்திலும், குடும்பத்திலும், தீங்கு ஏற்படுவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்!
திரும்பும்போது மேற்கூறப்பட்ட துஆவை கூறுவதுடன்,
آئِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ.
"திரும்புகிறோம்; பாவமன்னிப்புத் தேடுகிறோம்; வணங்குகிறோம்; எங்கள் இறைவனைப்புகழ்கிறோம்' என்று கூறவேண்டும். (ஸஹீஹ் முஸ்லிம்)
ஊருக்குள் நுழையும்போது
اَللّٰهُمَّ رَبَّ السَّمٰوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ الْأَرْضِيْنَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الشَّيَاطِيْنِ وَمَا أَضْلَلْنَ وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ أَسْأَلُكَ خَيْرَ هٰذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا وَخَيْرَ مَافِيْهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا وَشَرِّ مَا فِيْهَا.
அல்லாஹ்வே... ஏழு வானங்கள் மற்றும் அவை நிழலிட்டிருக்கும் அனைத்தின்இறைவனே! ஏழு பூமிகள் மற்றும் அவை சுமந்திருக்கும் அனைத் தின் இறைவனே! ஷைத்தான்கள் மற்றும் அவை வழிகெடுத்தவற்றின் இறைவனே! காற்றுகள் மற்றும் அவை வீசி எறிந்தவற்றின் இறைவனே! இந்த ஊரின் நன்மையையும், இந்த ஊரார்களின் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன்! இந்த ஊரின் தீமையை விட்டும், இந்த ஊராரின்தீமையை விட்டும், இந்த ஊரில் உள்ளவற்றின் தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்! (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
கடைத்தெருவிற்குள் நுழையும்போது
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ حَيٌّ لَّا يَمُوْتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை; அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது;அவனுக்கே புகழனைத்தும் சொந்தமானது; அவன் உயிர்ப்பிக்கின்றான்; மரணம் அளிக்கின்றான்; அவனது கரத்திலேயே நன்மை அனைத்தும் இருக்கின்றது; அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (ஜாமிவுத் திர்மிதி)
பயணி ஓரிடத்தில் தங்கும்போது
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு, அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்! (ஸஹீஹ் முஸ்லிம்)
மகிழ்ச்சியானஅல்லது துக்ககரமான செய்தியைக் கேட்கும்பொழுது
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டால்,
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِـحَاتُ
"எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனுடைய அருட் கொடையைக் கொண்டே நல்ல காரியங்கள் முழுமை அடைகின்றன!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
வெறுப்பான செய்தி வந்தால
اَلْحَمْدُ لِلّٰهِ عَلٰى كُلِّ حَالٍ
தன்னால் ஏசப்பட்டவருக்காக...
اَللّٰهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
அல்லாஹ்வே... நான் எந்த ஒரு நம்பிக்கையாளரையேனும் ஏசியிருந்தால், நான் ஏசியதை அவருக்கு மறுமையில் நன்மையாக ஆக்கிவிடு.(ஸஹீஹுல் புகாரி)
ஒருவரைப் புகழும்போது
நீங்கள் ஒருவரைக் கண்டிப்பாகப் புகழ வேண்டுமென்றால்,
أَحْسِبُ فُلَانًا وَاللّٰهُ حَسِيْْبُهُ وَلَا أُزَ كِّيْ عَلَى اللّٰهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا
"நான் அவரை இப்படி எண்ணுகிறேன்; அல்லாஹ்தான் அவரை விசாரிக்கப் போதுமானவன்; அல்லாஹ்விற்கு முன் நான் யாரையும் மிக உயர்வாகப் பேசமாட்டேன்; (அவரைப் பற்றி தெரிந்திருந்தால் மட்டும்) அவர் இப்படிப்பட்டவர் என எண்ணுகிறேன்' என்று சொல்லுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
தன்னை ஒருவர் உயர்வாக பேசும்போது
اَللّٰهُمَّ لَا تُؤَاخِذْنِيْ بِمَا يَقُوْلُوْنَ وَاغْفِرْ لِيْ مَا لَا يَعْلَمُوْنَ
)وَاجْعَلْنِيْ خَيْرًا مِّمَّا يَظُنُّوْنَ(
அல்லாஹ்வே... இவர்கள் கூறுவதைக் கொண்டு என்னைத் தண்டித்துவிடாதே! (என்னுடைய குறைகளில்) அவர்கள் அறியாததை எனக்கு மன்னித்தருள்!(அவர்கள் நினைப்பதை விட என்னைச் சிறந்தவனாக்கிவிடு!).(அல்அதபுல் முஃப்ரத்)
உடலில் வலி ஏற்படும்போது
(1) بِسْمِ اللّٰهِ. (2) أَعُوْذُ بِاللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ.
உங்களது உடம்பில் வலி இருக்கும் இடத்தில் கை வைத்து,
بِسْمِ اللّٰهِ
"அல்லாஹ்வின் பெயரால்' என்று மூன்று முறை கூறுங்கள்.
பிறகு ஏழு முறை,
أَعُوْذُ بِاللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
"அல்லாஹ்வைக் கொண்டும், அவனது ஆற்றலைக் கொண்டும், நான் உணரும் தீங்கை விட்டும், நான் பயப்படும் தீங்கை விட்டும், அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
கண்ணால் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சும்போது
null
ஒருவர் தம் சகோதரரிடமோ அல்லது தம்மிடமோ அல்லது தமது செல்வத்திலோ வியக்கத்தக்க ஏதாவது ஒன்றைப் பார்த்துவிட்டால், உடனே அதில் பரக்கத்தை வேண்டிப் பிரார்த்தித்து விடட்டும்' (அல்லாஹ் இதில் பரக்கத் செய்யட்டும்!) நிச்சயமாகக் கண்ணேறு உண்மையானதே. (முஸ்னது அஹ்மது)
விரட்டப்பட்ட ஷைத்தான்களின் தீங்கை விட்டு பாதுகாப்புப் பெற
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ الَّتِيْ لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَّلَا فَاجِرٌ مِّنْ شَرِّ مَا خَلَقَ وَبَرَأَ وَذَرَأَ وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فيْهَا وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقاً يَّطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمٰنُ
நல்லோராலும் தீயோராலும் மீறிவிட முடியாத அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகளைக் கொண்டு, அவன் படைத்த, உருவாக்கிய, பல்கிப்பெருக்கிய அனைத்தின் தீங்கை விட்டு (பாதுகாவல் தேடுகிறேன்), வானத்திலிருந்து இறங்கும் அனைத்தின் தீங்கை விட்டும் (பாதுகாவல் தேடுகிறேன்), வானத்திற்கு ஏறும் அனைத்தின் தீங்கை விட்டும் (பாதுகாவல் தேடுகிறேன்), பூமியில் அவன்பரப்பிய அனைத்தின் தீங்கை விட்டும் (பாதுகாவல் தேடுகிறேன்), பூமியிலிருந்து வெளியேறும் அனைத்தின் தீங்கை விட்டும் (பாதுகாவல் தேடுகிறேன்), இரவு மற்றும் பகலுடைய குழப்பங்களின் தீங்கை விட்டும் (பாதுகாவல் தேடுகிறேன்), இரவில் வரும் ஒவ்வொருவரின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். ஆனால், நன்மையுடன் வருபவரை உன்னிடம் கேட்கிறேன் அளவற்ற அருளாளனே!(முஸ்னது அஹ்மது)
பிழை பொறுப்பு தேடுதல்
أَسْتَغْفِرُ اللّٰهَ الْعَظِيْمَ الَّذِيْ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ
"மகத்துவமிக்க அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கிறேன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் என்றும் உயிரோடு இருப்பவன்; அனைத்தையும் நிர்வகிப்பவன்; அவன் பக்கமே நான் திரும்புகிறேன்'' என்று ஒருவர் கூறினால், அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அவர் போர்க்களத்தை விட்டுப் பின்வாங்கி இருந்தாலும் சரியே! (ஸுனன் அபூதாவூது)
பிழை பொறுப்பு தேடுதல்
null
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் இறுதிப் பகுதியாகும். அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூரக் கூடியவர்களில் நீயும் ஆக முடிந்தால் ஆகிக் கொள்.(ஜாமிவுத் திர்மிதி)
பிழை பொறுப்பு தேடுதல்
null
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனதுஉள்ளத்தில் ஆசைகளின் கறைகள் படிகின்றன. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளையில் நூறு முறை பாவமன்னிப்புக் கேட்கிறேன்.(ஸஹீஹ் முஸ்லிம்)
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
سُبْحَانَ اللّٰهِ وَبِـحَمْدِهِ
அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தி அவனைப் புகழ்கிறேன். என்று ஒருவர் ஒரு நாளைக்கு நூறு முறைக்கூறினால் அவரது குற்றங்கள் கடல் நுரையைப் போன்று இருந்தாலும் மன்னிக்கப்பட்டுவிடும். (ஸஹீஹுல் புகாரி)
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை; அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது;
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் என்று பத்துமுறை ஒருவர் கூறினால் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்
தோன்றல்களில் நான்கு நபர்களை உரிமை விட்டவரைப் போன்றாவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
null
ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, நான் சொல்வதற்கு ஒரு வாசகத்தைக் கற்றுத் தாருங்கள் என்றார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: நீ சொல்
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ اَللّٰهُ أَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيْرًا سُبْحَانَ اللّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை; அல்லாஹ் மிகப்பெரியவன்; நான் அவனை பெரியவனாக ஏற்றுக் கொண்டேன்; அதிகமான புகழ்சியை அல்லாஹ்விற்கு உரியதாக்குகிறேன்; அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் (சகல குறைகளிலிருந்து) மகா தூய்மையானவன்; பாவத்திலிருந்து மீளவோ, நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர! அவன் மிகைத்தவன்; மிக்க ஞானமுடையவன்'.
அப்போது கிராமவாசி கூறினார், "இவை எனதுஇறைவனுக்காக உள்ளவை; எனக்காக உள்ளதைச் சொல்லித் தாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ சொல்
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
"அல்லாஹ்வே... எனக்கு மன்னிப்பு வழங்கு! எனக்குக் கருணை காட்டு! எனக்கு நேர்வழி காட்டு! எனக்கு உணவளி!' (ஸஹீஹ் முஸ்லிம்)
தஸ்பீஹ், தஹ்மீது, தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றின் சிறப்பு
நிரந்தரமான நல்ல அமல்கள் என்பது,
سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்! பாவத்திலிருந்து மீளவோ, நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர! என்ற திக்ருகளாகும்.(முஸ்னது அஹ்மது)
பொதுவான ஒழுக்கங்களில் சில
null
மாலை சாயும்போது உங்களது சிறுவர்களை வீட்டில் தடுத்துக் கொள்ளுங்கள்; ஷைத்தான்கள் அந்த நேரத்தில்தான் வெளியேறு
கிறார்கள். இரவில் கொஞ்ச நேரம் ஆனவுடன் அவர்களை நீங்கள் விட்டு விடலாம். கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்; ஷைத்தான் (அல்லாஹ்வின் பெயர் கூறி) பூட்டப்பட்ட கதவைத் திறக்கமாட்டான். உங்கள் தோல் துருத்திகளின் வாய்களைக் கட்டி விடுங்கள்; உங்களது தண்ணீர் பாத்திரங்களை மூடி வையுங்கள்; அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்; உங்களது மற்ற பாத்திரங்களையும் மூடி வையுங்கள்; அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். (முழுமையாக மூட முடியவில்லை என்றால் குறைந்தபட்சம்) ஏதாவது ஒன்றை அதன் மீது வைத்து விடுங்கள்; உங்களது விளக்குகளை அணைத்து விடுங்கள். (ஸஹீஹுல் புகாரி)
وَصَلَّى اللّٰهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ وَّعَلٰى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِيْنَ
அல்லாஹ் நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அவர்களது குடும்பத்தார், தோழர்கள், அனைவர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் பரக்கத்தும் செய்வானாக!
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!