Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்!

 




தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்!


1.அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்!


ஆதாரம்: நூல்: மராஸீலு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 105



2.அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்!


ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 271



3.கஷ்டங்கள், முஸீபத்கள் இருந்தால் அவை நீங்கிவிடும்!


ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 2863



4.அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது!


ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 22962



5.அவருக்காக ஒரு மலக்கு துஆ செய்கிறார்!


ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 1442



6.கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்!


ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதி: ஹதீஸ் எண்: 664



7.கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்!


ஆதாரம்: நூல்: அல் முஃஜமுல் கபீர்: ஹதீஸ் எண்: 787



8.அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்!


ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 664



9.திடுக்கிட செய்யும் மறுமை நாளில் அவர் எந்த பயமும் கவலையும் இல்லாமல் மிகவும் நிம்மதியான நிலையில் இருப்பார்!


ஆதாரம்: சூரத்துல் பகரா: 


வசனம் எண்: 262



10.ரகசியமாக தர்மம் செய்தால் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் உடைய அர்ஷ் அந்த நல்லடியாருக்கு நிழல் கொடுக்கும்!


ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 660



11.அவருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைக்கிறது!


ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1016



12.ஒரே விதமாக இருக்கும் பொருட்களிலிருந்து இரண்டு பொருளை


(எ.கா: இரண்டு ஆடை) தர்மம் செய்தால் அவர் சொர்க்கத்தில் விசேஷ வாசல் வழியாக உள்ளே செல்வார்!


ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 1897



13.அவருக்கு மகத்தான நன்மை கொடுக்கப்படும்!


ஆதாரம்: சூரத்துல் ஹதீத்: 


வசனம் எண்: 7



14.அந்த நன்மைகளும் பல மடங்காக தரப்படும்!


 சூரத்துல் பகரா: வசனம் எண்: 245



15.அவர் தர்மமாக எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் அவை அனைத்தும் அழிந்துவிடாமல் அல்லாஹ்விடத்தில் அவருக்கான மறுமையின் சேமிப்பாக இருக்கும்!


ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : ஹதீஸ் எண்: 2959



16.உண்ணும் உணவையே தர்மமாக கொடுத்தால் உள்ளத்தில் இலகுவான குணம் ஏற்படும்!


ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 7576



17.தர்மம் செய்வது இறையச்ச முடையவர்களின் குணங்களில் ஒன்றாகும்!


ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 3



18.அவர் கொடுக்கும் தர்மத்தை பொருத்து அல்லாஹ்வும் அவர் செல்வத்தில் வளத்தை கொடுப்பான்!


ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1029



அல்லாஹு தஆலா நமக்கும் இந்த பதினெட்டு சிறப்புகளையும் அடையச் செய்வானாக... ஆமீன்


நன்றி இஸ்லாமியபுரம் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்