இன்று நபியவர்கள் நம்மை பார்த்து என்ன சொல்லியிருப்பார்கள்.
நபியவர்கள் காலத்தில் மக்கள்கள் எப்படி வாழ்க்கையை கழித்தார்கள் . எப்படி அவர்களின் வீட்டை அமைத்துக்கொண்டார் . ஆடபரமும் , சொகுசும் அவர்களின் வாழ்க்கையில் அறவே இல்லை. ஒரு மூங்கிலான குடிசை
அதை சரிசெய்து கொண்டிருக்கும் வேளையில் நபியவர்கள் அந்த வழியாக
செல்லும்போது , இது என்ன? என்று கேட்டார்கள் . அதற்க்கு வீட்டை சரிசெய்து கொண்டிருக்கிறோம் என்று நபியவர்களிடம் பதிலளிக்கிறார்கள் .
இந்த வீட்டை சரிசெய்வதைவிட மரணம்
என்ற அந்த காரியம் மிக விரைவானது
இந்த வீட்டை சரிசெய்வதை விட சுபஹானல்லாஹ் ! எவ்வளவு ஒரு அழகான உபதேசம். மரணத்தைப் பற்றி ஒரு நினைவூட்டல் !
எந்தளவுக்கு நபியவர்கள் சஹாபாக்களை
பக்குவப்படுத்தினார்கள். நம்முடைய
இலக்கு மறுமைத்தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் .
சஹாபாக்கள் இந்த உலகத்தின் மாய
வலையில் விழுந்துவிடக்கூடாது என்று
கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் நபியவர்கள் . மெய்சிலிர்க்க வைக்கிறது .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபியவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, "இது என்ன?" என்று கேட்டார்கள். "வீடு பாழடைந்து விட்டது. அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், "(மரணம் என்ற) அக்காரியம் இதை விட மிக விரைவானது" என்று கூறினார்கள்.
நூல்: திர்மிதீ-2335 (௨௨௫௭)
இன்று நம் நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் . மலைக்கும் , மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான் . நமக்கும் , ஸஹாபாக்களுக்கு உள்ள வித்தியாசம்.
இன்று நம்முடைய நிலை எப்படி இருக்கின்றது என்றால், அவர் 50 லட்சத்துக்கு வீடு காட்டினார் . நான் இன்னும் அதிகமாக செலவு செய்து அதைவிட பெருசாக 70 லட்சத்துக்கு புதிய மாடலாக காட்டுவேன் என்று போட்டிபோட்டுக்கொண்டு வீடு கட்டும் நிலையை நாம் பார்க்கலாம். இது ஒரு சாரார்.
இன்னொரு சாரார் இருக்கிறார்கள், பெரியதாக வீடு கட்டி உள்ளூரில் , வாழ்வது வெளிநாட்டில் குடும்பத்துடன் .எப்போதாவது ஊருக்கு வருவது . வெளிநாட்டில் குடும்பத்துடன் வாழும் நம்மில் சிலர் அங்கே ரொம்ப சிறிய வீடுதான் . ஒவ்வொரு அறையும் சிறுசாகத்தான் இருக்கும். சிலருக்கு சொந்தமாக வீடு இருக்கலாம். ஊருக்கு நம்மில் சிலர் எப்போதாவது வந்து போகிறவருக்கு , உள்ளூரில் ஒரு சிறிய இல்லம் போதும். சின்னதாக வீடு கட்டலாம் , வந்து போறத்துக்கு இது போதும் ! அல்ஹம்துலில்லாஹ் !


0 கருத்துகள்
Welcome to your comment!