அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
இந்த உலகத்தில் நமக்கு தேவையான காரியங்கள் அதிகமாகவே இருக்கிறது . நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும்! அந்த பணத்தின் மூலம் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்கிறோம்! பணத்துக்கான வழி , உழைப்பின் மூலம் நமக்கு பணம் வருகிறது. உழைக்கவேண்டும் என்றால் , நம் உடலுக்கு ஆற்றலும் , நல்ல ஆரோக்கியமும் தேவை ! அந்த ஆற்றலும் , நல்ல ஆரோக்கியமும் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு தருகிறான். அவனின் அருளும் , உதவியும் இல்லாமல் எதுவும் இயங்காது என்பது எல்லோருக்கும் தெரியும்!
நம்முடைய முயற்சியும், ஆற்றலும் அல்லாஹ்வை கொண்டுதான் தவிர , நம்முடைய திறமையோ அல்லது புத்திசாலித்தனமோ இல்லை என்பதை நாம் ஆழமாக நம் உள்ளத்தில் பதியவைக்கவேண்டும்! எதையும் கொண்டு எதுவும் நடக்காது . எல்லாம் அல்லாஹ்வை கொண்டுதான் எல்லாம் நடக்கும். அவனுக்கு எல்லா பொருள்களும் சொந்தம். அவன் எல்லாத்தையும் கண்காணுக்கிறான் .
இன்ஷாஅல்லாஹ் இப்போ நாம் தலைப்புக்கு வருவோம்! இந்த உலகத்தில் மனிதன் வாழும் காலமெல்லாம் , அவனுக்கு நிறைய பிரச்சனைகள் , முறையீடுகள், கவலைகள் , கஷ்ட்டங்கள் மற்றும் இன்னும் பல அவன் தினசரி வாழ்க்கையில் சந்திக்கிறான் . இவைகள் அவனைவிட்டு போக்குவதற்கு என்ன வழி ? எப்படி அணுகுவது ? எந்தமுறையான தீர்வு ?
பெரும்பாலும் மனிதர்கள் புலம்புவது மனிதர்களிடம் மட்டுமே ! அவர்களுடைய குறைகளையும், கவலைகளையும் கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது! என் குறைகளையும் , கவலைகளையும் யாரிடமாவது சொன்னால்தான் என் உள்ளத்திலிருந்து பெரிய பாரத்தை இறக்கிவைத்தமாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது! இது எல்லோரும் சொல்லக்கூடிய ஒரு இயல்பான விஷயம்தான்! இதை நாம் வேறுவிதமான கோணத்தில் பார்க்கவேண்டும்! ஒருவர் , அவர் ஒருவரிடம் அவருடைய பிரச்சனைகளை அல்லது கவலைகளை கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்! அதனால் அவருக்கு அந்த பாரம் குறைந்ததா அல்லது குறைந்தமாதரி அவர் உணர்கிறாரா என்று பார்த்தால் . நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்! அவர் பெற்றது ஆறுதல் . அவர் உணர்ந்தது ஆறுதலான வார்த்தைகள் மட்டுமே ஒழிய , அவருடைய பிரச்சனையோ அல்லது கவலைகளோ அவரைவிட்டு விலகவில்லை , தீரவில்லை என்பதே எதார்த்தமான உண்மை! மனிதர்களிடம் சென்று நமது கவலையோ அல்லது பிரச்சனையோ கூறினால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை ! சிலர் இன்னும் அவர்களுடைய கவலையோ அல்லது பிரச்சனையோ அதிகமாக்கி , மனதில் இன்னும் பாரமாக ஆகிவிடுவார்கள் ஒழிய மாறாக அவர்களின் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியாது! ஆறுதல் பெறமுடியாது!
நம்மில் பெரும்பாலும் நம்முடைய சிந்தனைகளுக்கு பூட்டு போட்டு பூட்டி வைத்திருக்கிறோம். நம் எதையும் சிந்திப்பதில்லை! நம்முடைய கவலைகளை, கஷ்டங்களை மற்றும் பிரச்சனைகளை யாரிடம் முறையிடுவது என்று கூட தெரியாமல் . நாம் இப்படி மனிதர்களிடம் சென்று ''இப்படி இப்படி '' என்று முறையிட்டு வருகிறோம்! படைத்தவனிடம் செல்லாமல் , படைப்புகளிடம் சென்று முறையிட்டு வருவதை நாம் வழக்கமாக கொண்டுயிருக்கிறோம்! நம்முடைய கவலைகளையும், பிரச்சனைகளையும் , கஷ்ட்டங்களையும் தீர்க்கக்கூடிய அல்லாஹ்விடம் முறையிடவேண்டும் என்பது அல்லாஹ் நமக்கு குர்ஆனில் பாடம் கற்று தருகிறான் ! எந்த ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் அல்லாஹ்விடம்தான் நாம் முறையாக கேட்கவேண்டும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்துக்கு கற்று தந்துள்ளார்கள்! ''உன்னுடைய செருப்பு வாறு அருந்தாலும்'' , அதை அல்லாஹ்விடம் கேளு என்று ஒரு நபிமொழியின் கருத்து!
நபி யாக்கூப் (அலை) அவர்கள் தனது மகன் யூஸுப் (அலை) அவர்களை நினைத்து கவலைக்கு ஆளானார்கள் .( சூரா யூசுப் படித்து பார்த்தால் நிறைய பாடமும், படிப்பினைகளும் நமக்கு இருக்கிறது.) அவர்கள் கூறியதை அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்: "எனது கவலையையும் துக்கத்தையும், அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்" என்று அவர் கூறினார்.( அல்குரான் )
நம்முடைய கவலையாக இருக்கட்டும், கஷ்ட்டமாக இருக்கட்டும் அல்லது ஏதாவது சில பிரச்சனைகளாக இருந்தாலும் , நாம் அல்லாஹ்விடம் தான் முறையிடவேண்டும்! இரண்டு ரகாயத்து தொழுது , அல்லாஹ்விடம் மன்றாடி , அழுது நம்முடைய எல்லா கவலைகளையும், கஷ்ட்டங்களையும், சொல்லி மன்றாடவேண்டும் ! இதை செய்தபிறகு , நமக்கு ஒரு அழகான ஆறுதலும் , மன அமைதியும் இன்ஷாஅல்லாஹ் ஏற்படும்! இது சத்தியம்!
அல்லாஹ்விடம் அழுது , புலம்பி நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டு , அந்த பாவத்துக்காக பாவமன்னிப்பு கோரி வந்தாலே போதும்! அல்ஹம்துலில்லாஹ்! மனதில் எந்த பாரமும் இல்லாமல் ஒரு விதமான உணர்வு உள்ளத்தில் ஏற்படும்!
நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் நாம் செய்யும் பாவம்தான் ! ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கதேடவேண்டும் ! நாம் நிறைய கணக்கில்லாமல் பாவங்கள் செய்கிறோம்! அதேபோல் நாம் கணக்கில்லாமல் அல்லாஹ்விடம் எப்பொழுதும் பாவமன்னிப்பு கேட்க்கொண்டு இருக்கவேண்டும்! இன்ஷாஅல்லாஹ் நம்மிடம் மாற்றத்தை பார்க்கலாம்! இது சத்தியம்!
நாம் செய்த பாவத்துக்கு , அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டபிறகு , அந்த பாவத்தை மீண்டும் செய்யாமல் இருக்க அல்லாஹ்விடம் உதவி கோரவேண்டும்! அல்லாஹ் நமக்கு அருள் புரியவேண்டும்! பாவத்தைவிட்டு மீளவும், நன்மை செய்யவும் அல்லாஹ்வின் உதவியும், அருளும் இல்லாமல் எந்த அடியானுக்கு சக்தி இல்லை!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!