முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

வழிபாடுகளில் முகஸ்துதி

 


வழிபாடுகளில் முகஸ்துதி


நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டி ருக்க வேண்டும்.மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்துவிடும்.உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்ப தற்காக ஒருவன் தொழுவதைப் போல. அல்லாஹ் கூறுகிறான்:இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகின்றார்கள். (உண்மையில்) அவனே இவர்களை ஏமாற் றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டவர்களாகவே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக்கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும்


தீமைகள்! எச்சரிக்கை!!




அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவு கூருகிறார்கள். (4:142)


இதுபோலவே ஒருவன் மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு நற்செயலைச் செய்தால் அவன் ஷிர்க்கில் வீழ்வான். இப்படிச் செய்பவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. நபி (ஸல்) கூறினார்கள்: மக்கள் கேட்க வேண்டு மென்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை (அவர்கள்) கேட்கும்படிச் செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய் தால் அல்லாஹ் அதனை (அவர்கள்) பார்க்கும்படிச் செய்திடு வான். (மறுமையில் அதற்குக் கூலி கிடைக்காது) அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: முஸ்லிம்


அல்லாஹ்வையும் மக்களையும் நாடி ஒருவன் ஒரு செய லைச் செய்தால் அவனது செயல் அழிந்துவிடும். ஹதீஸ் குது ஸியில் வந்துள்ளதாவது: இணையாளர்களின் இணைவைப் பை விட்டும் நான் தேவையற்றவன், என்னுடன் மற்றவர்களை இணையாக்கி ஒருவன் ஒரு செயலைச் செய்தால் (அதற்காக கூலி ஏதும் வழங்காமல்) அவனையும் அவனது இணைவைப் புச் செயலையும் நான் விட்டு விடுவேன் என அல்லாஹ் கூறுவ தாக நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹு ரைரா (ரழி), நூல் : முஸ்லிம்


ஒருவன் அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடன் ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கின்றான் பிறகு திடீரென அவ னுள் முகஸ்துதி தோன்றிவிடுகிறது எனில் அவன் அந்த முகஸ் துதியை வெறுத்து அது நீங்க கடுமையாகப் போராடினால் அவனது செயல் சரியானதாக ஆகிவிடும். ஆனால் அவனுள் ஏற்பட்ட அந்த முகஸ்துதியை அவன் திருப்தி கொண்டால், அதிலே அவனது உள்ளம் சாந்தியடைந்தால் பெரும்பாலான


அறிஞர்களின் கூற்றுப் படி அவனுடைய செயல் வீணாகி விடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்