Italian Trulli

முஸ்லிம்களின் குற்றங்குறைகளை மறைத்தல்

 


புண்ணியங்களின் பூங்காவனம்




முஸ்லிம்களின் குற்றங்குறைகளை மறைத்தல்


மறைத்தல் இரண்டு வகைப்படும். ஒன்று பார்வையை விட்டும் மறைத்தல், மற்றொன்று கருத்தை விட்டும் மறைத்தல்.கருத்தை விட்டும் மறைத்தல் என்பது ஒரு முஸ்லிம் ஒரு பாவத்தைச் செய்வதை அல்லது ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்வதைப் பார்த்து விட் டீர்கள் எனில் அவனை அவமானப்படுத்தாதீர்கள். மாறாக அந்தப் பாவத்தைச் செய்வதைவிட்டும் அவனை நீங்கள் தடுங்கள். எளிய முறையில் அவனுக்கு அறிவுரை கூறுங்கள். அதில் மென்மையும் பரிவும் நிறைந்திருக்க வேண்டும். அவனது தவறை மறைத்து விடுங்கள்; அதை அம்பலப்படுத்தாதீர்கள். அல்லாஹ் அவனை மறைத்ததி லிருந்து வெளியாக்கி அவனைக் கேவலப்படுத்தி விடா தீர்கள்.


மாயிஸ்(ரலி) அவர்கள், விபச்சாரம் எனும் மானக் கேடான செயலில் தாம் விழுந்து விட்டதை அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னிலையில் வந்து தமது நாவால் ஒப்புக் கொண்டார்கள். இருந்த போதிலும் நபி (ஸல்) அவர்கள், அவர் தமது தவறை தமக்குள் மூடி மறைப்பதற்கும் மேலும் அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் அவர் பாவமன்னிப்புத் தேடிக்கொள்வதற்குமே அவருடன் முயற்சி செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் இப்படியே சொன்னார்கள்: "திரும்பிச் செல்! பாவமன்னிப்புத் தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளு!''


பிறகு மாயிஸ்(ரலி) திரும்பிச் சென்றுவிடுகிறார். சற்று தூரம் சென்று விட்டு மீண்டும் நபி (ஸல் ) அவர்களிடம் வந்து "என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார். நபியவர்களோ முன்பு கூறியதையே அவரிடம் கூறி னார்கள். இவ்வாறு அவர் நான்கு முறை செய்தார். இந்த மானக்கேடான காரியத்தை இவர் செய்திருப்பார் என்பதை நபி(ஸல்) அவர்கள் உறுதி செய்தபோது, மேலும் அதன் அழுக்கிலிருந்து தான் தூய்மைப்படுத்தப் பட வேண்டும்; தம் மீது எந்தப் பாவமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் உறுதி செய்தபோது- அதன் பிறகுதான் அவருக்குத் தண்டனை நிறைவேற்றுமாறு தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே தோழர்கள் அவரை அழைத்துச் சென்று அவரைக் கல்லால் எறிந்தார்கள். கற்கள் அவரைப் பலமாகத் தாக்கியபோது அதன் கடுமை தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டும் அவர் ஓடினார், ஆனாலும் தோழர்கள் அவரைப் பிடித்து கல்லால் எறிந்து கொன்றார்கள். (பார்க்க: புகாரி 6815, முஸ்லிம் ௧௬௯௫)


அபூதாவூதின் ஒரு அறிவிப்பில் வந்துள்ளது: அவர் ஓடியதை நபி (ஸல்)அவர்கள் அறிந்ததும் தம் தோழர் களிடம் "அவரை நீங்கள் விட்டிருக்கலாமே! அவர் தவ்பா செய்து திருந்திருக்கலாம்; அல்லாஹ்வும் அவருடைய தவ்பாவை ஏற்றுக் கொள்ளலாம்" என்று கூறினார்கள். (பார்க்க: அபூதாவூத் 4419) பிறகு "இப்போது அவர் சொர்க் கத்தின் நதிகளில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்கள். (பார்க்க: ஜாமிவுல் ளயீஃப் 1333)


என்னே ஆச்சரியம்! இன்றைக்கும் சிலர் யாரிடமேனும் ஒரு தவறு ஏற்படாதா? அல்லது மானக்கேடான ஒரு செயல் நிகழாதா? என எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றனர். எதற்காக? சம்பந்தப்பட்டவர்களிடம் அதனை எடுத்துச் சொல்லி ஷரீஅத் விரும்பும் வழிகளில் அதனை மறைப்பதற்காகவா? இல்லை! மாறாக அச்செய்தியை மக்களிடையே பரவச் செய்வத்ற்காக! மேலும் இன்டர் நெட் போன்ற நவீன செய்தி ஊடகங்கள் மூலம் பரப்பு வதற்காக. ஆம்! இது செய்தியைப் பரப்புவதில் இன்பம் காண்பதாக உள்ளது. அங்கிங்கெனாதபடி பரவியுள்ளது. செய்தி ஊடகங்களுக்குரிய எங்கும் நடை முறையான தீர ஆராய்தல் உறுதிப்படுத்துதல், தவறை மறைத்தல், ஒழுங்குமுறை ஆகியவை இதில் பேணப் படுவதில்லை. ஷரீஅத் விரும்பும் நலம் நாடுதலின் அடிப்படைகள் இவர்களிடம் எங்கே உள்ளன?

"வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்" (24:19) என்று அல்லாஹ் கூறியிருக்கிறானே! இதில் இவர்களின் நிலை என்ன?


இத்தகையோர் மக்களின் குறைகளைத் துருவிப்பார்ப் பதை விட்டுவிடவில்லையெனில் இவர்களே கேவலப்படுத் தப்படுவார்கள் என்பதை அஞ்சிக் கொள்ளட்டும்.


‎‫


அபூபர்ஸா அஸ்லமி(ரலி)அறிவிக்கிறார்கள்: "உள்ளத் தில் ஈமான் நுழையாமல் உதட்டளவில் நம்பிக்கை கொண்ட மக்களே! முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசா தீர்கள். அவர்களின் குறைகளைத் துருவிப் பார்க்கா தீர்கள். ஏனெனில் தன் சகோதரனின் குறைகளை யார் துருவிப் பார்க்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் துருவுவான். அவருடைய வீட்டிலேயே அவரைக் கேவலப் படுத்தும் வரை” என நபி (ஸல்) அவர்கள் (வீட்டினுள் இருக்கின்ற ) கன்னிப் பெண்களுக்கும் கேட்கின்ற வகையில் உரத்த குரலில் சொன்னார்கள். (அஹ்மத் 18963) அல்பானி இதனை சரிகண்டுள்ளார்கள்.


பார்வையை விட்டும் மறைத்தல் என்பது ஆடையில்


லாதோருக்கு ஆடை வழங்கி மக்களின் பார்வையை


விட்டும் அவரது மானத்தை மறைப்பதாகும். திண்ண


மாக இது நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலில் உள்ள


தாகும். மாயிஸ்(ரலி) அவர்களின் சம்பவத்தில் இந்த


இரண்டு வகையான மறைத்தலும் உள்ளது. அபூதாவூதின்


ஓர் அறிவிப்பில், (உயிரிழந்த) மாயிஸை ஆடையால்


மறைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸால் என்ற


மனிதருக்கு ஆர்வமூட்டியதாக வந்துள்ளது.


‎‫( لَوْ سَتَرْتَهُ بِثَوْبِكَ كَانَ خَيْرًا لَكَ )) (د/ ٤٣٧٧) صححه الألباني‬‎


அதாவது "உமது ஆடையால் அவரை நீர் மறைத்தி ருந்தால் அது உமக்கு நன்மை தருவதாக இருந்தி ருக்கும்' என்று அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 4377)இதனை அல்பானி அவர்கள் சரிகண்டுள்ளார்கள்.


முஸ்லிம்களின் மானத்தை- குற்றங்குறைகளை அவர் கள் உயிருடன் இருக்கும்போதும் இறந்த பிறகும் மறைப் பதற்கு-பார்வையை விட்டும் மறைத்தல், கருத்தை விட்டும் மறைத்தல் ஆகிய இரு வகைகளிலும் மறைப் பதற்கு நபி (ஸல்)அவர்கள் எவ்வளவு ஆர்வமும் அக்கறையும் காட்டியுள்ளார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


இதோ முன் சென்ற ஸலபுஸ் ஸாலிஹீன்களான நம் சான்றோர்களில் இருவருக்கு மத்தியில் நடந்த உரை யாடலைக் கேளுங்கள்! அதில் அவர்கள், முஸ்லிம்களின் குறைகளை நபி (ஸல்)அவர்கள் மறைப்பது தொடர்பான அவர்களின் வழிகாட்டுதல் பற்றி நினைவுகூரிக் கொண் டிருந்தார்கள்.


இதோ அப்துல்லாஹ் அல்ஹவ்ஸனீ கூறுகிறார்: நான், அல்லாஹ்வின் தாதர் (ஸல்) அவர்களின் முஅத்தின் - பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் பணி செய்தவரான பிலால் (ரலி) அவர்களை ஹலப் எனும் ஊரில் சந்தித் தேன். அவர்களிடம், "பிலாலே! நபி (ஸல்)அவர்கள் எப்படி செலவு செய்து வந்தார்கள்? என்பதைக் கூறுங்களேன்" என்றேன். அவர் கூறினார்: நபி (ஸல்) அவர்களிடம் (பொருள்) ஏதும் இருந்ததில்லை. அல்லாஹ் அவர்களை இறைத்தூதராக அனுப்பியதிலிருந்து அவர்கள் மரணிக் கும் வரை அவர்களுக்காக நான்தான் செலவுக்குப் பொறுப்பேற்றிருந்தேன். அவர்களிடம் யாரேனும் ஒரு முஸ்லிம் வந்தால்- அவரிடம் ஆடையில்லாமல் இருப் பதை நபியவர்கள் கண்டால் எனக்குக் கட்டளையிடு வார்கள். நான் சென்று (யாரிடமேனும்) கடன் வாங்கி அவருக்காக ஒரு ஆடையை வாங்கி அவருக்கு அணியக் கொடுப்பேன்; உண்ண உணவும் கொடுப்பேன்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் முஃமி னைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு, "நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?" என்று கேட்பான். அதற்கு அவன் "ஆம், என் இறைவா? என்று கூறுவான். இவ்வாறாக இறைவன் (ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி,) அவன் செய்த எல்லாப் பாவங் களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த முஃமின் 'நாம் இத்தோடு ஒழிந்தோம்" என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன் "இவற்றை எல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்" என்று கூறுவான். அப்போது அவனது நற் செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிரா கரிப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சி யாளர்கள்,"இவர்கள்தாம் தம் இறைவன் மீது பொய்யைப்புனைந்துரைத்தவர்கள். கவனத்தில் கொள்க! அநீதியி ழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!' என்று கூறுவார்கள். (புகாரி 2441)


எனவே பிரியமானவர்களே! முஸ்லிம்களின் தப்புத் தவறுகளை மறைத்தல் எனும் பூங்காவிற்கு உளத் தூய்மை எனும் நீரைப் பாய்ச்சுங்கள்; நல்ல கனிகளை நீங்கள் பறிக்கலாம். ஏனெனில் "ஒரு முஸ்லிமுடைய தவறை ஒருவர் மறைத்தால் அல்லாஹ் அவருடைய தவறை இவ்வுலகிலும் மறுவுலகிலும் மறைப்பான்" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


இறைவா! சகிப்புத் தன்மையும் பேரன்பும் மிக்கவனே! அழகிய உன் திரை மூலமும் தயாளம் நிறைந்த உன் மன்னிப்பின் மூலமும் எங்கள் குறைகளை மறைப்பாயாக!

கருத்துகள்