ரூபினா ரூபிசீனா டான்ஸ் ஆடுனா உங்களுக்கு என்ன பிரச்சனை ?

 

ரூபினா ரூபிசீனா டான்ஸ் ஆடுனா உங்களுக்கு என்ன பிரச்சனை ?


ஒருவருக்கு ஒரு அழகான அறிவுரை சொல்லலாம். நல்லமுறையில் உபதேசம் செய்யலாம். நல்ல வார்த்தைகளை கூறலாம் . அவருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யலாம். நல்வழியில் கொண்டுவருவதற்கு முயற்சி செய்யலாம்.

மாறாக தவறாக விமர்சனம் செய்வது . சாபம் இடுவது. ஆபாசமாக பேசுவது.  கடினமான வார்த்தைகளால் திட்டுவது. கொச்சைப்படுத்தி பேசுவது , பரப்புவது . 

இந்த இரு சகோதரிகள் போன்று இன்னும் நிறைய சகோதரிகள்  இருக்கிறார்கள் . இவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. பெற்றோர்கள் இருக்கிறார்கள் . சகோதர / சகோதர்கள் இடுக்கிறார்கள் . உறவினர்கள் இருக்கிறார்கள் . இவர்களுக்கு பொறுப்புதாரிகள் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.  இவர்களை தாண்டி தான் பொதுவெளியில் வரவேண்டும்.

இவர்களுக்கே அக்கறை இல்லாதபோது 

நாம் ஏன் கூச்சலிடம் வேண்டும் , பதட்டம் அடையவேண்டும்.?  

பணத்துக்காக எந்த தவறையும் நியாயப்படுத்த முடியாது.    அவர்கள் செய்வது சரி என்று சொல்லிவிடமுடியாது.  நம் பிள்ளைகளை மார்க்க அடிப்படையில் வளர்க்கவேண்டும்.   நாம் முன்மாதிரியாக இருந்து பிள்ளைகளுக்கு மார்க்கத்தை போதிக்கவேண்டும்.   வருகின்ற காலங்கள் மிக மோசமாக இருக்கும். குழப்பங்கள் அதிகரிக்கும் . நம்  வருங்கால  சன்னதியர்கள் முஸ்லிமாக வாழவேண்டும் என்றால் , நாம் முதலில் முஸ்லிமாக வாழவேண்டும். எல்லாத்துக்கும் தீர்வு இஸ்லாத்தில் இருக்கிறது. அவைகளை கூகிளில்  போய்  தேடவேண்டிய அவசியம் இல்லை. 

இன்று பெண்பிள்ளைகளை பாதுகாப்பது பெரும் சுமையாக ஆகிவிட்டது !  


கருத்துகள்