முக்கியச் செய்தி
மார்க்கப் பதிவுகள் சேகரிக்கப்படுகின்றன...

இஸ்லாமிய நூலகம்

சொடுக்கி வழிகாட்டியைத் திறக்கவும் ➔
தொடர்ந்து படிக்க Education
Recent Posts
15 பதிவுகள்
Pages
25 பக்கங்கள்
Random Posts
15 பதிவுகள்
All Tags
அனைத்து லேபிள்கள்
Connecting to the creator
Best Articles
Best Friends
Gaza People
Best Topics

பதிவுகள்

ஏற்றப்படுகிறது...

தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அடைய பத்து அறிவுரைகள்💫


 தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அடைய பத்து அறிவுரைகள்💫

அஷேய்க்-அப்துர் ரசாக் அல்-பதர்

தமிழில்:முஹம்மது மன்சூர் உமரி


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அவனே துயரங்களுக்கு ஆளானவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கிறான், சோதனைகளில் தவிப்போருக்கு உதவி செய்கிறான், அவனே துன்பங்களையும், துயரங்களையும் களைத்தெரிகிறான், மேலும் அவனை நினைவுகூர்வதின் மூலமே உள்ளங்கள் உயிரோட்டம் பெறுகின்றன, அவனுடைய உத்தரவின் மூலமே அனைத்து காரியங்களும் அரேங்கேருகின்றன, இன்னும் அவனுடைய அருளைக்கொண்டே அனைத்து கஷ்டங்களும் நீங்குகின்றன. இன்னும் அவனை கீழ்படிவதின் மூலமாகவே உண்மையான ஆனந்தம் கிட்டுகின்றது.


வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கிடையாது, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணைதுணையும் கிடையாது, அவனே அகிலத்தாரின் இரட்சகனாவான், முந்தியவர்களுக்கும், பின்னர் வருவோருக்கும் இறைவனாவான், வானங்களையும், பூமியையும் அடக்கியாள்பவன் அவனே என்று நான் சாட்சி கூறுகிறேன்.


மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறுகிறேன், உறுதியான பாதை மற்றும் தெளிவான வேதத்தை கொண்டு அனுப்பப்பட்டார்கள்.


கோரோனா தொற்று குறித்து மக்கள் மத்தியில் ஐயங்கள் சூழ்ந்துள்ள இக்காலக்கட்டத்தில் இந்த பயன்மிக்க அறிவுரைகள் நினைவூட்டும் வண்ணம் வழங்கப்படுகின்றது.


அல்லாஹ் எம்மையும், உலக முஸ்லிம்கள் அனைவரை விட்டும் அனைத்துவிதமான கேடுகளையும், கொடிய தொற்றுகளையும் அகற்றுவானாக !!! இன்னும் எம்மைவிட்டு அனைத்து கடினங்களையும், துயரங்களையும் களைவானாக !!! அவனது நல்லடியார்களை எதைக் கொண்டு பாதுகாப்பானோ அவ்வாறே நம் அனைவரையும் பாதுகாப்பானாக !!!


நிச்சயமாக அவனே அதற்கு ஆற்றலுடையவன் மற்றும் தகுதியானவனாக இருக்கிறான்.


1 தொற்றுநோய் வரும் முன் கூறவேண்டியவை


உஸ்மான் பின் அப்பான்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி(ஸல்) அவர்கள் கூறுவதை கேட்டேன் எவர் ஒருவர் மூன்று முறை


‎‫بسم الله الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمَّمَاءِ‬‎


பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷையுன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாயி வஹுவஸ் ஸமீஉல் அலீம் என்று கூறுகிறாரோ அவர் காலைபொழுதை அடையும் வரை தீடீரென்று பிடிக்கக்கூடிய எந்த தொற்றும் அவரை தீண்டாது. இவ்வாறே காலையில் கூறுவாரேனில் மாலைவரை அவரை தீடீரென்று பிடிக்கக்கூடிய எந்த தொற்றும் நெருங்காது.


(அபூ தாவூது).


2) லா இலாஹா இல்லா அன்த சுப்ஹானக்க இன்னி குன்து மினத் தாலிமீன் என்னும் துஆவை அதிகமாக


‎‫وَ ذَا النُّونِ إِذۡ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نُقْدِرَ عَلَيْهِ فَنَادَنَتَنِيْهِ إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَنَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّلِمِينَ فَاسْتَجَبۡنَا لَه وَنََّّۡ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ‬‎


துன்னூனையும் (யூனுஸ் நபியாகிய மீனுடையவரை நபியே! நினைவு கூர்வீராக! தம் சமூகத்தாரைவிட்டு)- அவர் கோபமாக வெளியேறிய சமயத்தில், (நாம் அவரைப்) நெருக்கடிக்குள்ளாக்கி (தண்டித்து) விட மாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; (ஆகவே மீன் வயிற்றின்) இருள்களில் “லா இலாஹா இல்லா அன்த சுப்ஹானக்க இன்னி குன்து மினத் தாலிமீன்" உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு ஒருவனும்) இல்லை;நீ மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டேன்;" என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தார்.


பின்னர், அவருக்கு நாம் பதிலளித்தோம், (அவருடைய) துக்கத்திலிருந்து அவரை நாம் (விடுவித்துக்) காப்பாற்றினோம், இவ்வாறே விசுவாசிகளையும் நாம் காப்பாற்றுவோம்". (அல்-குர்ஆன் 21:87-88)ஹாபிழ் இப்னு கசீர் (ரஹ்) அவர்கள் பின்வரும் இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கையில் கூறுகிறார்கள்: ((இவ்வாறே விசுவாசிகளையும் நாம் காப்பாற்றுவோம்)) "அதாவது அவர்கள் கடினக்காலங்களில் நம்மிடம் மீண்டு நம்மை அழைப்பார்களேனில், அதிலும் குறிப்பாக இந்த துஆவைக் கொண்டு இக்கட்டான காலக்கட்டத்தில் பிரார்த்திப்பார்களேனில் (இவ்வாறு காப்பாற்றுவோம்)


பிறகு அஹ்மது மற்றும் திர்மீதியில் பதிவுசெய்யப்பட்ட பின்வரும் ஹதீஸை குறிப்பிடுகிறார்கள்:


நபிஸல் அவர்கள் கூறினார்கள்: "துன்னூன் (யூனுஸ் நபி) அவர்கள் மீன் வயிற்றில் இருந்தபோது செய்த துஆவாகிய "லா இலாஹா இல்லா அன்த சுப்ஹானக்க இன்னி குன்து மினத் தாலிமீன்" இவற்றை கூறி ஒருவர் தனது தேவைக்காக துஆ செய்வாரே என்றால் அல்லாஹ் அவரின் அழைப்புக்கு பதிலளிக்காமல் இருப்பதில்லை".


அல்லாமா-இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் ((அல்-பவாயித்)) எனும் தனது கிரந்தத்தில் கூறுகிறார்கள்:


"தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தை கொண்டே உலகத்தில் ஏற்படக்கூடிய கடுமையான நிலைகள் போக்கப்படுகின்றது, எனவே தான் துன்பங்களின் நேரத்தில் கேட்கப்படக்கூடிய துஆவாக தவ்ஹீத் இருக்கின்றது, இன்னும் துன்னூன் (யூனுஸ் நபி) அவர்கள் அல்லாஹ்விடத்தில் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக தவ்ஹீதை கொண்டே துஆ செய்ய அதனை அல்லாஹ் அவரைவிட்டு நீக்கினான்.


மேலும் இணைவைப்பு ஒருவரை பெரிய சோதனையில் தள்ளிவிடுகின்றது அதிலிருந்து அவரை காக்கக்கூடியதாக தவ்ஹீதே இருக்கின்றது.


மேலும் இது (தவ்ஹீது) மக்கள் அஞ்சக்கூடிய சமயத்தில் புகலிடமாகவும், மீளுமிடமாகவும், கோட்டையாகவும் மற்றும் உதவக்கூடியதாகவும் இருக்கின்றது".


3) தாங்க முடியாத கடுமையான சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது.


அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


நபி(ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக்


கோரிவந்தார்கள்.


(ஸஹிஹ் புகாரி)


மற்றும் ஒரு அறிவிப்பில் அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் அல்லாஹ்விடத்தில்


தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தேடிவாருங்கள்".


(ஆக, நாமும் இவ்வாறு துஆ செய்ய வேண்டும்)


(ஸஹிஹ் புகாரி)


4) வீட்டிலிருந்து வெளியேறும் போது ஓதக்கூடிய துஆவை பேணி கடைபிடிக்கவேண்டும்


எவர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது


‎‫بِسْمِ اللَّهِ ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ‬‎


பிஸ்மில்லாஹி, தவக்கல்து அலல்-லாஹி, லா ஹவ்ல வலா கூவ்வத இல்லா பில்லாஹி


பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்; என் காரியங்கனை முழுமையாக ஒப்படைத்து), அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன் ; மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்னமயானவற்னறச் செய்வதற்கு) சக்தியுமில்லை.


இவ்வாறு கூறுவாரோ அப்பொழுது வானவர்களின் தரப்பிலிருந்து கூறப்படும் நேர்வழிப் பெற்றீர், காக்கப் பெற்றீர் மற்றும் பாதுகாப்பு அடைந்தீர் என்று கூறப்படும், மேலும் ஷைத்தான்கள் அவரை விட்டு விரண்டோடுவார்கள், இன்னும் ஒரு ஷைத்தான் கூறுவான் "உன்னால் எப்படி நேர்வழிப் பெற்ற. காக்கப்பெற்ற, பாதுகாப்பு பெற்றவரை (வழிகெடுக்க) முடியும் ?” (அபூதாவூத்)


5) காலையிலும், மாலையிலும் அல்லாஹ்விடத்தில் ஆரோக்கியம் வேண்டி துஆ செய்ய வேண்டும்.


இப்னு உமர்(ரலி) அவர்களின் மூலமாக வந்துள்ள அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் கலையிலும், மாலையிலும் பின்வரக்கூடிய துஆவை விடாது ஓதி வந்தார்கள் என்று வந்துள்ளது.


‎‫اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ . اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي ، وَدُنْيَايَ وَأَهْلِيَلَيَلَ وَأَهْلِيَ ، اسْتُرْ عَوْرَاتِي ، وَآمِنْ رَوْعَاتِي ، اللهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ ، وَمِنْ يَمِينِي ، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي ، وَأَعُوذُ بِعِظَمَتِكَ أَنْ أَغْتَالَحَنْ أَغْتَالَ مِينْ‬‎


அல்லாஹும்ம இன்நீ அஸ்அலுகல் அஃப்வ வல் ஆஃபியத ஃபித்துன்யா வல் ஆகிரா, அல் லாஹும்ம இன்நீ அஸ்அலுகல் அஃப்வ வல் ஆஃபியத ஃபீ தீநீ, வ துன்யாய, வ அஹ்லீ, வமாலீ, அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும் மஹ்ஃபழ்நீ மின் னபனியதய்ய, வமின் கல்ஃபீ, வஅன் யமீநீ, வஅன் ஷிமாலீ, வமின் ஃபவ்கீ, வஅஊது பி அழமதிக அன் உக்தால மின் தஹ்தீ.


(நூல்: அஹ்மத்)


6) அதிகமாக துஆச் செய்ய வேண்டும்


இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிகின்றார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "யாருக்கு துஆவின் வாசல் விசாலமாக்கப் படுகிறதோ அவருக்கு ரஹ்மத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. இன்னும் அல்லாஹ்விடத்தில் கேட்கப்படக் கூடியவைகளிலேயே அவனுக்கு விருப்பமானது ஆரோக்கியத்தை குறித்து கேட்கப்படும் துஆவாகும்".


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக துஆ இறங்கியநடந்த) விஷயத்திற்காகவும், இறங்காத (சோதனைகள் போன்ற) விஷயத்திற்காக பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது: ஆகவே, அல்லாஹ்வின் அடியார்களே!


அல்லாஹ்விடத்தில் துஆவை கேளுங்கள் !!!


(நூல்: திர்மீதி)


7) தொற்று நோய் ஏற்பட்ட இடங்களுக்கு செல்லாமல் இருப்பது


அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) கூறினார்கள்:


உமர்(ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனுமிடத்தை அவர்கள் அடைந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி எட்டியது.


அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள்:


"ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்" என்று


கூறினார்கள்.


(ஸஹிஹ் புகாரி 5730)


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்


"வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்.


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.


(ஸஹிஹ் புகாரி 5774)


8) அழகிய முறையில் செயல்படுவதும், நல்லமல்களில் ஈடுப்படுவதும்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நல்லறங்களில் ஈடுப்படுவது தீய


விஷயங்களிலிருந்தும், ஆபத்துகள், அழிவுகள் போன்றவற்றிலிருந்து காக்கின்றது. இம்மையில் நல்லறம் புரிபவர்களே மறுமையில் நற்பேறு பெற்றவர்களாக இருப்பார்கள்".


நூல்: (ஹாக்கிம்) அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)


இப்னுல் - கய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:


"நன்மையான காரியங்களை செய்வதும், அழகிய முறையில் நடந்துகொள்வதும், திக்ரு எனும் இறைநினைவும், துஆவும், (இறைவனுக்காக) பணிந்துவிடுவதும்,அல்லாஹ்விடத்தில் மீளுவதும் மற்றும் தவ்பா செய்வது நோய்க்கான நிவாரணங்களிலேயே மகத்தானதாக இருகின்றது. இவ்விஷயங்கள் பலவீனத்தை நீக்குவதிலும், நிவாரணம் பெறுவதிலும் பெரும் தாக்கமாக இருக்கின்றது".


(ஜாதுல் மஆத்)


9) இரவு தொழுகை


பிலால்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி(ஸல்) அவர்கள்


கூறினார்கள்: "இரவுத் தொழுகையை தொழுது வாருங்கள், அவ்வாறு தொழுவது உங்களுக்கு முன்வாழ்ந்த நல்லடியார்களின் பண்பாகும். மேலும், இரவில் நின்று வணங்குவது அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத் தரக்கூடியதாகவும், பாவங்களை விட்டு விலக்கக் கூடியதாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் மற்றும் உடலிலிருந்து நோயை அகற்றக் கூடியதாகவும் இருக்கின்றது.


(நூல்: திர்மீதி)


10) உண்ணக்கூடிய, அருந்தக்கூடிய பாத்திரங்களை மூடி வைப்பது


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


"பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில், ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை".


அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


(நூல்: முஸ்லிம் 4102)இப்னுல் - கய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இது (மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸின் கருத்து) மருத்துவர்களின் அறிவு மற்றும் அறிவியலால் இதுவரை எட்டமுடியாத விஷயங்களில் ஒன்றாக உள்ளது.


(ஜாதுல் மஆத்)


இறுதியாக, ஒரு முஸ்லிம் தனது அனைத்து விவகாரங்களையும்


அல்லாஹ்விடத்தில் அவனையே சார்ந்திருந்து, அவனது கிருபையை எதிர்பரர்த்த வண்ணம் ஒப்படைத்து விடவேண்டும். மேலும், எல்லா விஷயங்களும் அல்லாஹ்வின் ஏற்பாடு மற்றும் உத்தரவின் அடிப்படையில் தான் நடக்கின்றது.


பொறுமையோடும், நன்மையை எதிர்பார்த்தும் சோதனைகளை கையாள வேண்டும். ஏனெனில், நன்மையை எதிர்பார்த்து பொறுமையுடன் நடப்பவர்களுக்கு அல்லாஹ் பெரும் வெகுமதியை வாக்களித்துள்ளான்.


அல்லாஹ் கூறுகிறான்:


‎‫إِنَّمَا يُوَفَّى الصُّبِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‬‎


"பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்".


(அல்-குர்ஆன்


39:10)


நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்கள்:நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன்.


அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:


"அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு ஷஹீது(உயிர்த் தியாகி)க்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும்".


அல்லாஹ் நம் அனைவருக்கும் அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய, விரும்பக்கூடிய நல்லமல்கள் மற்றும் அழகிய சொற்களை உபயோகிக்கக்கூடிய நற்பாக்கியத்தை வழங்கிடுவானாக!!! நிச்சயமாக, அவனே சத்தியத்தை உரைக்கக் கூடியவனாகவும், நேர்வழியை காண்பிக்கக் கூடியனாக இருக்கின்றான்.


ஏகனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகுக !!!


ஸலாத்தும், சலாமும் முஹம்மது நபியவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் அவர்களின் தோழர்களின் மீதும் உண்டாகட்டுமாக!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்