துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும் இடங்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள், நிலைமைகள் மற்றும் இடங்கள் .

*லைலத்துல் கத்ர் இரவு 
*இரவின் மூன்றாம் பகுதி 
*கடமையான தொழுகைக்கு பின் 
*அதான் , இகாமத்திற்கு இடையில் 
*ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம் 
*பாங்கு சொல்லப்படும்போது 
*மழை இறங்கும்போது 
*அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும்போது 
*வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும். என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றார்கள். சிலர் குத்பா மற்றும் ஜுமுஆ தொழுகையுடைய நேரமென்றும் கூறுகிறார்கள்.)
*உண்மையான எண்ணத்துடன் ஜம்ஜம் நீரைக் குடிக்கும்போது 
*ஸஜ்தாவில் இருக்கும்போது 
*இரவில் தூக்கத்தை விட்டு எழும்போது அப்போது ஹதீஸில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள துஆவை கேட்க வேண்டும் 
*உளு செய்து தூங்குகிற நிலையில் இடையில் ஏற்படும் விழிப்பின் போது 
*லாயிலாஹ இல்லா அன்த்த ஸூப் ஹானக்க இன்னீ குன்து மினல் லாலிமீன் - ''உன்னைத் தவிர வணக்கத்துக்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை, நீ மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன்'' என்று ஓதுவது (அல்குரான் 21.87 )

*மௌத் (இறப்புச்)செய்திக்குப் பின் கேட்கும் துஆ 
*தொழுகையின் கடைசி இருப்பில் அத்தஹியாத் ஸலவாத் ஓதியதற்கு பின் கேட்கும் துஆ 
*அல்லாஹ்வின் மகத்துவமிக்க பெயரைக் கூறி துஆ கேட்கும்போது அந்த மகிமை மிக்க பெயரைக் கூறி அவனை அழைக்கும்போது அவன் அதற்கு பதில் தருகிறான். அவனிடம் யோசிக்கும்போது அதை அவன் கொடுக்கின்றான்.
*ஒரு முஸ்லிம் தனது முஸ்லிமான சகோதரருக்காக மறைவில் கேட்கும்போது 
*அரஃபா அன்று அரஃபா மைதானத்தில் கேட்கும்போது 
*ரமலான் மாதத்தில் கேட்கும்போது 
*திக்ரு மற்றும் உபதேச சபைகளில் முஸ்லிம்கள் ஒன்றுகூடியிருக்கும்போது 
*சோதனையான சமயங்களில் ''(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . )    நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கே சொந்தமானவர்கள். அவன் பக்கமே நாங்கள் திரும்புகிறோம்; அல்லாஹ்வே என் சோதனையில் எனக்கு நற்கூலி வழங்கு எனக்கு சிறந்ததைப்  பகரமாகத் தந்துவிடு! என்று பிரார்த்திக்கும்போது (முஸ்லிம் ) 
*உள்ளத்தில் அல்லாஹ்வின் தேட்டம் அதிகமாகி முழுமையாக மனத்தூய்மை ஏற்படும்போது 
*அநீதியிழைக்கப்பட்டவர் தமக்கு அநீதி இழைத்தவருக்கு எதிராக கேட்கும்போது 
*தந்தை தனது மகனுக்கு சாதகமாக அல்லது பாதகமாக கேட்கும்போது 
*நோன்பு வைத்திருக்கும்போது நோன்பு திறக்கும் வரை 
*நோன்பாளி நோன்பு திறக்கும் முன் 
*நெருக்கடியான நிலையில் சிக்கிக் கொள்ளும்போது 
*நீதமான அரசர் கேட்கும்போது 
*பயணத்தில் இருப்பவர் கேட்கும்போது 
*பெற்றோருக்கு உபகாரம் செய்யும் பிள்ளைகள் கேட்கும்போது 
*உளு செய்ததற்கு பின்பு , ஹதீஸில் கூறப்பட்ட துஆவைக் கேட்கும்போது 
*ஹஜ்ஜில் சிறிய ஜம்ராவில் கலெறிந்து பின் 
*ஹஜ்ஜில் நடு ஜம்ராவில் கலெறிந்தப் பின் 
*கஅபாவிற்குள் கேட்கும்போது (தற்போது கஅபா கட்டிடத்திற்கு வெளியில் வளைவாக கட்டப்பட்டுள்ள அரை மதிற்சுவருக்குள் தொழுவதும், துஆ கேட்பதும், கஅபா விற்குள் துஆ கேட்பது போலாகும்)
*ஸஃபா மலையில் , மர்வா மலையில் , முஸ்தலிக்பாவில் 
*முஃமின்-அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர் எங்கிருந்தாலும் எல்லா நிலைமைகளிலும் அல்லாஹ்வையே பிரார்த்தித்தவராக இருக்கவேண்டும்.

(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக!) ''நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன்.(எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால் , அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும்.(அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குரான் 2.186)

நாம் இதுவரை குறிப்பிட்ட நேரங்கள் நிலைமைகள் இடங்கள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதால் அவற்றை இங்கே சிறப்பித்துக் கூறியுள்ளோம்.
நன்றி :DARUL HUDA 
சத்திய பாதை இஸ்லாம் 

கருத்துகள்