🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

ஓயாத கவலை ,ஒழியாத வேலை:

 


1. ஓயாத கவலை :


ஏதாவது ஒரு பிரச்சனையைக் குறித்து கவலை உண்டா கும், பல முயற்சிகளுக்குப் பிறகு அக்கவலைகள் நீங்கி விடும். கவலை போன பிறகு மற்றொரு கவலை உண்டா கும். முன்போல பல முயற்சிகளுக்குப் பிறகு அக்கவலை நீங்கிவிடும். அதற்கடுத்தபடியாக மறுகவலை வந்து விடும். இவ்வாறு கவலைக்கு மேல் கவலை வந்து கொண்டேயிருக் கும். (உ -ம்) ஒரு நாற்காலியில் ஒருவர் உட்கார்ந்து கொண் டிருந்தார். அவர் எழுந்தவுடன் வேறு ஒருவர் உட்கார்ந்து கொண்டார். அவர் எழுந்தவுடன் மற்றொருவர் உட்காரு வார். இதைப் போல் மற்றுமோர் (உதாரணம்)ஓர் ஊரிலிருந்து பிற ஊருக்கு ஒரு பஸ் செல்லுகின்றபொழுது இடை யிடையே பல ஊர்கள் வந்து கொண்டிருக்கும். ஓர் ஊர் எல்லை முடிந்து மறு ஊர் எல்லை ஆரம்பமாகிவிடும். இதைப் போலவே படிப்படியாக கவலைகள் வந்துகொண்டேயிருக் கும். எப்பொழுதும் கவலையாகவே இருக்கும்.


2. ஒழியாத வேலை:


உதாரணமாக ஒரு வேலையைச் செய்து முடிப்பதற் காகப் பல முயற்சிகள் செய்வார். ஆனால் அந்த வேலை முடிவதற்குள், மறுவேலை காத்துக் கொண்டிருக்கும். இப் படியாக அடுத்தடுத்து மறுமைக்குத் தேவையான வேலை வந்து கொண்டிருக்கும். செல்வங்களைத் தேடுவதற்கு நேரமேயிருக்காது, அல்லாஹ்வின் பக்கமாக அழைக்கப்பட் டால் வேலை, வேலை என்றே சொல்லிக்கொண்டிருப்பார் நிர்ம என்பது எப்படியிருக்கும் என்று  அறிந்து  கொள்ளவே முடியாது.


3. முடிவில்லாதத் திட்டங்கள்:




அதாவது ஒரு விஷயத்திற்காகத் திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருப்பார். அது முடிவதற்குள் மற்றொரு திட்டத்தைப் போடுவார். அது முடிவதற்குள் வேறு திட்டம் உருவாகிவிடும். இப்படியாக அடுத்தடுத்து பல திட்டங்கள் வந்து கொண்டேயிருக்கும்.


4. பரக்கத்தில்லாத வாழ்க்கை


அதாவது ஏராளமான சொத்து, சுகங்கள் இருக்கும். ஆனால் அப்போதைக்கப்போது உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரிய பெரிய சிரமங்கள் இருக்கும். உதாரணமாக பெரிய கோடீஸ்வரராகவோ, அல்லது லட்சாதிபதியாகவோ இருந்தும் கூடத் தினந்தோறும் பொருளாதாரப் பிரச்சனைகளும் சிக்கல்களும் இருந்து கொண்டேயிருக்கும்.


தனக்குத் தேவைக்கு மேலதிகமான சொத்து சுகங்கள் இருந்தபோதிலும் இன்னும் தேவை. இன்னும் தேவை என்ற எண்ணத்துடன் இரவு பகலாகக் கஷ்டப்படக் கூடிய தன்மை. அவர்களுடைய நேரத்திலும், செல்வத்திலும் பரக்கத் இருக்காது. பரக்கத் என்பது ஏராளமான செல்வங்கள் வந்து சேர்ந்து விடுவது என்பது பொருளல்ல. எந்த நேரத்தில் என்னென்ன தேவைகள் இருக்கின்றனவோ அவை சிரமமில்லாமலும் மனப் போராட்டமில்லாமலும் நடைபெறுவதற்கு பெயர்தான் பரக்கத் என்று சொல்லப்படும். நம்முடைய உள்ளங்கள் நிம்மதியுடனிருந்தால் நம்மிடமுள்ள செல்வங்களும் பரக்கத் உள்ளலை. நம்முடைய உள்ளங்கள் நிம்மதி குறைவாகயிருந்தால் நம்மிடமுள்ள செல்லங்கள் பரக்கத் இல்லாதவை என்று புரிந்து  கொள்ளமுடியும்.



சந்தோசம்  இல்லாத நிலமைகள்:


மனைவி மக்கள், குடியிருக்க வசதியான வீடுகள், ஓய்வெடுக்க பங்களாக்கள், நினைத்த இடத்திற்கெல்லாம் செல்வதற்கு வாகன வசதிகள், வேலை செய்வதற்காக பணியாட்கள், நினைத்ததையெல்லாம் வாங்குவதற்குப் பண வசதி, இன்னும் இதுபோன்ற பல வசதிகள் இருந்தும் கூட சந்தோஷ மென்பதே இருக்காது. உதாரணமாக தமது சொந்த வீட்டில் ருசிகரமான உணவுகள் தயார் செய்யப்பட்டிருக்கும். உணவை உட்கொள்ள ஆரம்பிப் பார்; ஆனால் அந்த அருமையான அவரால் உணரமுடியாது. உணவின் ருசியை


தம்முடைய அருமையான மனைவி தமக்குப் பக்கத்தில் வந்து நின்று அன்போடும் பரிவோடும் பேசுவாள்; ஆனால் அவளை அவர் பார்க்கும்போதெல்லாம் வெறுப்பாகவே யிருக்கும். பார்ப்பதற்கு அவர் சந்தோஷமாக இருப்பது போல் மற்றவர்களுக்குத் தெரியும்; ஆனால் அவரிடத்தி லுள்ள அத்தனைச் செல்வங்களைச் அவரால் சந்தோஷத்தைப் பெற முடியாது, செலவழித்தாலும்


6. ஓயாத சண்டை:


எப்பொழுது பார்த்தாலும் குடும்பத்திற்குள் தங் களுக்குள்ளேயே சண்டை சச்சரவுகள் இருக்கும். சில சமயம் மனைவியுடன், வேறு சமயம் தன்னுடைய மகளு டன், மற்றொரு சமயம் தன்னுடைய பையனுடன், பிறகு தன்னுடைய தாய் தந்தையுடன். அதற்குப் பின்னர் தன்னுடைய சகோதரர் சகோதரி இவ்வாறு அடுத்தடுத்து ஏதாவது சண்டைகள் வந்து கொண்டே இருக்கும்.


மேற்கண்டவைகளெல்லாம் இவ்வுலகத்தில் அனு பவிக்கும் தணடனைகள். ஆனால் மரணமாகும் நேரத்தில் லும் கப்ரிலும் மஹ்ஷர் மைதானத்திலும் கிடைக்கக் கூடிய தண்டனைகளைப் பற்றி அளவிட்டுக் கூறவே முடியாது; எனினும் அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடப் படுகின்றன .


இவ்வுலகில் தீனின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதவர்கள் மரணமாகும்போது மலக்குல் மவ்த் (அலை) அவர்கள் பயங்கரமான உருவத்தில் தோற்றமளித்து கடுமை யான முறையில் வேதனை செய்து ரூஹைக் கைப்பற்றுவார் கள். மேலும் அம் மலக்குடன் வேதனை செய்யக் கூடிய மற்ற மலக்குகளும் பயங்கரத் தோற்றத்துடன் வருவார்கள். மேலும் நரகத்தினுடைய பயங்கரமான காட்சிகளையும் காட்டப் படும்.க


அவரை கப்ரினுள் வைத்து அடக்கம் செய்த பிறகு முன்கர்,நகீர் என்ற வானவர்கள் மிகவும் பயங்கரத் தோற்றத் துடன் காட்சியளித்துக் கடுமையான முறையில் கேள்விக் கணக்குகளை விசாரிப்பார்கள்.பின்னர் கப்ரில் நெருப்பு மூட்டப்படும். மேலும் பயங்கரமான பாம்பை அவன் மீது சாட்டப்படும். அப்பாம்பு இவ்வுலகில் மூச்சு விடுமேயானால் அங்கு புற்பூண்டுகள் கூட முளைக்காது.மறுமை நாள் வரை பயங்கரமான வேதனைகளை அனுபவிக்கும்படி நேரிடும்.


மறுமை நாளையில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது இவ்வுலகில் அவரவர்கள் செய்த தீமைக்குத் தகுந்தபடி பற்பல கோலங்களில் எழுப்பப்படுவார்கள்.


பின்னர் மஹ்ஷர் மைதானத்தில் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்படும்போது ஒரே பயமும் திடுக்கமும் வினாடிக்கு வினாடி இருந்து கொண்டேயிருக்கும். மேலும் விதவிதமான வேதனை களிருந்து கொண்டிருக்கும். பிறகு கடுமையான முறை யில் விசாரணை செய்யப்பட்டு கடைசியாக நரகத்திற்கு அனுப்பப்படும். மரணத் தருவாயிலிருந்து கடைசிவரை அவரவர்கள் எந்தளவு இவ்வுலகில் தீனுக்கு மாற்றமாக நடந்தார்களோ அந்தளவு வேதனைகள் கூடுதல் குறை வாக இருக்கும். எந்த மனிதன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து எல்லாம் வல்ல இறைவனிடம் பாவமன்னிப்பு (தவ்பா) கோருவானோ அவனுடைய பாவத்தை அல்லாஹ் மன்னித்தருள் புரிவான். ஆனால் பாவமன்னிப்புக் கோர முன் வரவேண்டுமே! ? நாம் மரணமாகுமுன் நம்முடைய பாவத்தை எண்ணி வருந்தி கிருபையாளர்களுக்கெல்லாம் மாபெரும் கிருபையாளனான அந்த வல்லோனிடம் மன்னிப்பு (தவ்பா) கோருவோமாக! 


கருத்துரையிடுக

0 கருத்துகள்