பயணியே சற்று நில்
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் என் இரு தோள்புஜங்களை பிடித்தவர்களாக கூறினார்கள் � நீங்கள் இந்த உலகில் ஒரு ஏழையைப்போன்றோ அல்லது ஒரு பிரயாணியைப்போன்றோ இருங்கள் என்று கூறினார்கள் என்று நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
இந்த ஹதீஸ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டது போன்று தோன்றினாலும், இது அனைவரும் சொல்லப்பட்ட ஒன்று.
இன்னும் ஒரு அற்புதமான ஒரு செய்தி இந்த ஹதீஸிலிருந்து நமக்கு கிடைக்கிறது.
இப்னு உமர் அவர்கள் இந்த ஹதீஸை நபியவர்கள் தனக்கு எவ்வாறு கூறினார்கள் என்ற நிலையையும் ( இரு தோள்புஜங்களை பிடித்தவர்களாக )சேர்த்து வர்ணித்தே கூறியுள்ளார்கள்.
ஹதீஸ்கலை வல்லுனர்கள் இந்த சமுதாயத்திற்கு செய்த மிகப்பெரிய சேவை, ஹதீஸ்களை மட்டும் இந்த சமுதாயத்திற்கு கொடுக்காமல் அது நடைபெற்ற சூழல், அதை அறிவித்தவர்களின் வரலாறு என்று மிகப்பெரும் பொக்கிஷங்களை விட்டுச்சென்றுள்ளனர்.
அல்லாஹ் அவர்கள் அத்துணை பேரின் சிறிய, பெரிய பாவங்களை மன்னித்து, அவர்களின் தரஜாக்களை உயர்த்தி, அவர்களின் மண்ணறையை சுவனத்தின் உயர்ந்த பகுதியாக ஆக்கித்தருவானாக.
இந்த ஹதீஸில் நபிகளார் இந்த செய்தியை கூறும் போது நடந்துகொண்ட விதம் அவர்களின் ;eadership quality யைக் காட்டுகிறது. இப்படி நபிகளார் எந்தந்த மனோநிலையில் இருந்தார்களோ அவற்றையும் முழுவதுமாக ஹதீஸில் பதிவுசெய்கின்றனர்.
தான் செல்லவந்த செய்தியின் முக்கியத்துவதை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உணர்த்துவதற்காக நபியவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள்.
இந்த உலகைப்பற்றி உண்டான செய்தி இது ஒரு நிலையான பொருள் இல்லை, இன்னும் இதன் வெளிரங்கம் ஆடம்பரமாகவும், அழகானதாகவும் இருப்பினும் இதன் உள்ரங்கமோ அழிந்து போகக்கூடியது. அது மனிதர்களை தன் வெளிரங்க அழகால் கட்டிப்போட்டுள்ளது. அதனால் இதன் அழகில் மயங்கிய மனிதன் மறுமைச் சிந்தனைவிட்டும் வெகு தூரம் சென்று விடுகிறான்.
இது குறித்து குர் ஆன் கூறும் வார்த்தை எவ்வளவு நிதர்சனமானது, நிச்சயமானது � இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை (3:185)
இதில் இன்பம் இல்லை என்று சொல்லவில்லை, மறுமையை நிலைநிறுத்தும் போது இது அற்ப இன்பம். ஆனால் அந்த இன்பம் கழிந்து அவன் உணர்வு பெறுவதற்கு முன்பே அவனை மரணம் அள்ளிச்செல்கிறது.
எல்லா விஷயத்திற்கும் வழிகாட்டியாக வந்த நபிகளார் மனித வாழ்வோடு இரண்டுர கலந்த இந்த உலக வாழ்வை குறித்து சொல்லாமல் சென்றிருப்பர்களா?
அவர்கள் தான் நமக்கு நிதமான வழிகாட்டியாயிற்றே, சரியான உபதேசிப்பாளர் ஆயிற்றே. ஆகையால் தான் தேவையான நேரத்தில், தேவையான அளவில், உதாரணங்களோடு தங்கள் தோழர்களுக்கு சொல்லுவது போன்று உலகம் அழியும் நாள் வரை வரும் அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்தார்கள்.
ஒரு ஏழையைப்போன்று அல்லது ஒரு வழிப்போக்கன் போன்று என்ற அழகிய உவமானத்தோடு கூறினார்கள் இந்த இருவருக்கும் எங்கும் நிலையான இடம் இருக்காது, அவன் எண்ணம் முழுவதும் தன் சென்றடய் வேண்டிய இடம் நோக்கி இருக்கும். தன்னிடம் இருக்கும் நிலைகொண்டு பொருந்திக்கொள்வான்.
இன்று நாம் பார்க்கிறோம், எத்தணையோ பணக்கார்கள் கூட பயணம் என்று வந்துவிட்டால் பயணத்திற்க்கு தோதுவான தன் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
என்ன ஒரு அற்புதமான ஒப்பீட்டை கூறியுள்ளார்கள் மனிதரகளாகி நாம் அனைவரும் விரும்பியோ, விரும்பாமலோ மறுமை என்ற ஊர் நோக்கியல்லவா பயணத்தில் இருக்கிறோம்.
பயணம், அது தானே மனிதர்களின் வாழ்கையை புரட்டிப்போடுகிறது. எத்தணையோ நபர்களின் பயணம் அவர்களை கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு கொண்டு செல்கிறது.
இன்னும் சிலரோ மேல் நிலையிருந்து கீழ் நிலைக்கு வருபவரும் உண்டு பயணங்களில் தானே மனிதன் பொறாமை, கோள், பொய், அடுத்தவர்களுக்கு காட்டுதல் போன்ற கீழ் குணங்களிருந்து விலகிநிற்கிறான். இன்னும், ஒருவனைப் பற்றி சாட்சி சொல்லுவதற்க்கு கூட அவரோடு பயணத்தில் இருந்ததயோ அளவுகோல் ஆக்குகிறது இஸ்லாம்.
இப்படி தொடர்கிற செய்திகள் எத்தணையோ.......
ஆகையால் இந்த ஹதீஸை வைத்து மக்களை விட்டு தனித்து சென்று விடலாமா? என்றால் இஸ்லாம் அதையும் அனுமதி அளிக்கவில்லை.
நபிகளாரின் வார்த்தைகளை தீர்மிதி என்ற ஹதீஸ் புத்தகத்தின் ஆசிரியர் பதிவு செய்திருப்பதை கவனியுங்கள்.
மக்களோடு கலந்து அவர்களின் சிரமங்களை பொறுத்துக்கொள்கிற முஸ்லிம், மக்களைவிட்டு தனித்திருந்து அவர்களின் சிரமங்களை பொறுக்காதவரை விட சிறந்தவர் ஆவார்.
இந்த ஹதீஸைக்கொண்டு பொதுவாக நமக்கு இவ்வுலகம் வேண்டாம், இவ்வுலக வாழ்கை ஏமாற்றுதல், ஆகையால் அனைத்தையும் விட்டு ஒதுங்கிவிடவேண்டும் என்ற கருத்து இல்லை.
இந்த ஹதீஸ் வெளிரங்கத்தை குறித்து பேசவில்லை மாறாக மனோநிலைக்குறித்து பேசுகிறது.
சஹாபக்களின் மிகப்பெரும் செல்வந்தர்கள் இருந்தார்கள். செல்வம் அவர்கள் கையில் இருந்ததே தவிர மனதில் இருக்கவில்லை.
இது தான் இங்குள்ள core point. கோடிகளின் வரவும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கவில்லை. கோடிகளின் நஷ்டமும் அவர்களிடம் எவ்வித கலக்கத்தையும் அளிக்கவில்லை.
ஏனெனில், அவர்களின் நபிகளின் சகவாசத்தால் அறிந்திருந்தார்கள், கோடிகளை கொண்டு (பிறக்கும் போது) வந்தவர்களுமில்லை. கோடிகோடியாய் இருதததும் (இறந்தபின்) கொண்டுபோனவர்களும்.
ஆகையால் இல்லாத சொத்துக்கு செந்தம் கொண்டாட என்ன இருக்கிறது.
பிர்அவ்னின் வல்லரசு சொத்துக்கள் எல்லாம் இன்று ஏதோ ஒரு குடிமகன் கையில். செந்தம் கொண்டாட கூட ஆட்களில்லை.
நாம் என்னதான் கோடீஸ்வரர்களாக இருப்பினும் இவ்வுலகைவிட்டு செல்லும் போது விரலில் இருக்கிற இரும்பு மோதிரத்தைக்கூட கழட்ட மறக்காது இந்த உலகு.
இப்படி உள்ள உலகில் வாழ நபிகளாரின் வாக்கு அற்புதம் வழிகாட்டியன்றோ. அதன் அடிப்படையில் வாழ்தால், வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் வெல்பவர்கள் நாமாக இருப்போம்.....
நன்றி
- பேரா. ஹஸனீ
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!