ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் ”ரஹ்மானின் நேசர்களுக்கும் ஷைத்தானின் நேசர்களுக்கும் இடையிலான வேறுபாடு" எனும் நூலில் குறிப்பிட்ட இரு சாராருக்குமிடையில் காணப்படும் வித்தியாசங்களின் சுருக்கம் வருமாறு.
இறை நேசர்கள் :
திருமறை அல்குர்ஆனையும் நபிவழி சுன்னாவையும் பின்பற்றுவார்கள்.
ஈமானையும் இறையச்சத்தையும் பிரதிபலிப்பார்கள்.
நபியை பின்பற்றுவார்கள், அவர்கள் ஷரீஆவை விட்டும் வெளியில் சென்று தன்னிச்சையாக செயல்படமாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களை பின்பற்றுமாறும், கடமைகளை நிறைவேற்றுமாறும், இறைவனிடம் பிரார்த்திக்குமாறும் மக்களை தூண்டுவார்கள்.
ஒரு இறைநேசரை விட நபி உயர்ந்தவர்கள் என்று உறுதியாக நம்புவார்கள். அதே நேரம் ஒரு வலி பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் அல்ல என்றும் நம்புவார்கள்.
ஈமானும் இறையச்சமும்தான் அவர்களுக்கு நிகழும் கிராமத்தின் காரணம் என்று கூறுவார்கள்.
இறை நேசர்கள்:
அவர்கள் அல்லாஹ்வுக்காக நேசிக்கப்பட வேண்டியவர்கள்.
நயவஞ்சகத்திலிருந்து பயப்படுவார்கள், தங்களது கௌரவத்தால் ஏமாந்துவிடமாட்டார்கள்.
மக்களை விட்டும் வித்தியாசப்படாது சுன்னாவை கடைப்பிடித்து தொழுகுவார்கள்.
அவர்களிடத்தில் எதிலும் அலட்சியப் போக்கோ, அளவு கடந்த போக்கோ காணப்படாது.
உள்ளும் புறமும் ஈமானை பிரதிபலிப்பார்கள்
நபி (ஸல்) அவர்கள் உள்ரங்க அறிவற்ற வெளிரங்க அறிவை மாத்திரம் கொண்டவர்கள் என்று யாராவது நம்பினால் அவர் காபிராகிவிடுவார்.
நபி (ஸல்) அவர்கள் அடைந்த விலாயத்துக்கு நிகரில்லை என்று ஏற்றுக்கொள்வர்.
கழாஃ கத்ர் நம்பிக்கையை குறைகள், தவறுகளுக்காக அல்லாது சோதனைகள் ஏற்படும் போது மாத்திரம் ஆதாரமாக கொள்வர்.
பாவத்தில் பிடிவாதமாக இருக்க மாட்டார்கள், இது ஓர் அடியானை அல்லாஹ் நேசிப்பதன் அடையாளங்களில் ஒன்று.
அவர்கள் வணக்கங்களை பள்ளிவாயில்களில் நிறைவேற்றுவார்கள்.
அவர்கள் பார்வையில் கராமத் என்பதன் குறிக்கோள் இறைவழியில் இறுதி வரை நிலைத்திருப்பதாகும்.
சைத்தானின் நேசர்கள்:
திருமறை அல்குர்ஆன் நபிவழி சுன்னாவை புறக்கணிப்பார்கள்.
இறை நிராகரிப்பு, கெட்ட நடத்தை, சாத்திரம், சூனியம், பைத்தியம்,மன உதிப்புக்கள் என்பவற்றை பிரதிபலிப்பார்கள்.
நபியை புறக்கணித்து அவர்கள் ஷரீயாவை விட்டு முற்றாக வெளிநடப்பு செய்வார்கள்.
அவர்களைப் பின்பற்றுமாறு மக்களை தூண்டுவார்கள். மார்க்க கடமைகளை நிறைவேற்றமாட்டார்கள், இறைவனிடம் பிரார்த்திக்கவும் மாட்டார்கள்.
ஒரு நபியை விட ஒரு இறைநேசர் உயர்ந்தவர் என்று நம்புவார்கள். அதே நேரம் அவர் பாவங்களில் இருந்து
பாதுகாக்கப்பட்டவர் என்றும்,
உலமாக்களின் (இஜ்மா)
முடிவுகளுக்கு முரண்பட
முடியும் என்றும் நம்புவார்கள்.
சைத்தானின் நேசர்கள்:
இறைவனுக்காக வெறுத்தொடுக்கப்பட வேண்டியவர்கள்.
நயவஞ்சகத்தை பயப்பட மாட்டார்கள்.
தன்மதிப்பை வைத்து தற்பெருமையால் மமதை கொள்வார்கள்.
மற்றவர்களை விட்டும் வித்தியாசமாக ஆடைகள் அணிந்து தலை முடிகளை சிரைத்துக் கொள்வார்கள்.
அந்நியவர்களுக்கு ஒப்பாகுவார்கள்.
அவர்களிடம் அனைத்திலும் அலட்சியப் போக்கும் அளவு கடந்த போக்கும் காணப்படும்.
ஈமானை வெளிப்படையானது மறைமுகமானது என்று இரண்டாக பிரித்துப் பார்ப்பார்கள்.
அவர்களின் சீடர்கள் அவர்களை மறைவான ஞானம் கொண்டவர்கள் என்று நம்புவார்கள்.
இறைநேசர்களும் நபிமார்களும் ஓரிடத்தில் இருந்தே அறிவைப் பெறுவதாக நம்புவார்கள்.
பாவிகள், நல்லது செய்தால் கழாஃ கத்ரை நம்பாது தற்பெருமை கொள்வார்கள்.
தவறிழைத்தால், தீயது நடந்தால் கழா கத்ரில் பழியை போட்டு தப்பித்துக் கொள்வார்கள்.
அத்வைதம், இறைவன் மனிதனில் சங்கமிக்கிறான் எனும் கோட்பாட்டு கொண்டவர்கள்.
ஷைத்தான்கள் அவர்களை குழப்பும் போது, அவர்களை வானவர்கள் என்று நம்பி விடுவார்கள்.
அவர்களின் சீடர்கள் அவர்களை வானவர்கள் நபிமார்களின் தனித்துவப்பண்புகளை கொண்டவர்கள் என நம்புவார்கள்.
மன்னறைகளை மஸ்ஜிதுகளாக ஆக்கிக்கொள்வார்கள்.
ஷைத்தானிய செயல்களை ஊக்குவிக்கும் வண்ணம் விசில் அடித்தல், கைதட்டுதல், பாடல்கள் இசைத்தல் போன்றவற்றை செய்வார்கள்.


0 கருத்துகள்
Welcome to your comment!