உடன் பிறந்த வியாதி


 உடன் பிறந்த வியாதி




முன்னொரு காலத்தில், ஒரு ஊரில் ராமநாதன் என்ற பெரும் பணக்காரன் இருந்தான் பண்டம் பாத்திரங்களை அடமானமாக வைத்துக் கொண்டு கடன் கொடுத்து வாங்குவது அவனது தொழில். அதனால் எப்போதுமே அவன் வீட்டில் அடமானமாக பெறப்பட்ட பிறர் பொருள்கள் நிரம்பி இருக்கும். அது தவிர நிறைய பணத்தையும் வீட்டில் அடுக்கி இருந்தான். வைத்து


கழுத்துக்கு மேல் அதீத பணத்தை சேமிக்கும் போது திருடர் பயமும் அதிகம் இருக்கும் அல்லவா? அப்படித் தான் ராமநாதனுக்கும்.


ராமநாதன் இரவில் தூக்கம் இல்லாமல் தவித்து வந்தான். ' எப்போது எந்தத் திருடன் வருவானோ?' என்று ராமநாதன் அனுதினமும் கலங்கிக் கொண்டே இருந்தான்.


அப்போது ஒரு நாள் ராமநாதனுக்கு அருகில் இருந்த வீட்டில் புதிதாகக் குடி வந்து இறங்கினான் முனுசாமி என்னும் பெயர் உடையவன்.


அவனது தோற்றத்தை கண்ட ராமநாதனுக்கு அவன் மீது சந்தேகம் வந்தது.


"இவனைப் பார்த்தால் திருடன் போலவே இருக்கிறானே! தனியாக வேறு வந்து இருக்கிறான். இவனுக்கு குடும்பம் எல்லாம் கிடையாதா?"என்றெல்லாம் சிந்தித்தவனாக, உண்மையை அறிந்து கொள்ள ராமநாதன் முனுசாமியிடம் பேச்சுக் கொடுத்தான்.


"ஐயா! நான் இந்த ஊரில் உள்ள ஒரு ஆலையில் கூலித் வேலைக்குச் சேர்ந்து மனைவி, மக்கள் தொழிலாளியாக உள்ளேன். எனது வெளி ஊரில் இருக்கின்றனர். எனது வேலை நிரந்தரமான பிறகு தான் அவர்களை அழைத்து வரத் தீர்மானித்து உள்ளேன்"என்றான் முனுசாமி.


இருந்தாலும் ராமநாதனுக்கு, முனுசாமியின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. அவன் பொய் கூறுவதாகவே நினைத்தான்.


ராமநாதனைப் பொறுத்தவரையில் முனுசாமி, வீடு புகுந்து திருடுபவனாக இருக்கலாம் அதுவும் இல்லை என்றால் வழிப்பறி செய்பவனாக இருக்கலாம். இப்படித் தான் முனுசாமியை ராமநாதன் நினைத்துக் கொண்டான். ஆனால் உண்மையில் முனுசாமி மிகவும் நல்லவன். அவன் தோற்றம் தான் பார்ப்பதற்கு அவனை மற்றவர் முன் திருடன் போல எடுத்துக் காட்டியது.


ராமநாதன் அடிக்கடி பண வசூல் சம்மந்தமாக வெளியூர் சென்று விடுவான். அந்த மாதிரி நேரமாகப் பார்த்து முனுசாமி உள்ளே புகுந்து விடுவானோ என்று அவனுக்கு (ராமநாதனுக்கு) ஒரு பயம் இருந்து வந்தது.


ராமநாதனின் வீட்டுக்கு எதிர் வீட்டில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஒருவன் வசித்து வந்தான். அவன் தன் வீட்டின் முகப்பிலேயே ஒரு கடை வைத்து நடத்திக் கொண்டு இருந்தான்.


ராமநாதன் பன்னீர் செல்வத்துடன் நெருக்கமாகப் பழகுவான். தனக்கு வேலை இல்லாத நேரத்தில் ராமநாதன் பன்னீர் செல்வத்தின் கடையில் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டு இருப்பான்.


ஒரு நாள் ராமநாதன் பன்னீர் செல்வத்திடம் முனுசாமியைப் பற்றி இவ்வாறு தவறாகப் பேசத் தொடங்கினான்.


"அந்த மனிதனைப் பார்த்தால் திருடனைப் போலக் காட்சி அளிக்கிறான். அவனது விஷயத்தில் நாம் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். நண்பா பன்னீர்! எனக்கு ஒரு உதவி செய். நான் ஊரில் இல்லாத நேரத்தில் இரவெல்லாம் அவனைக் கண் காணித்துக் கொண்டே இரு. அவன் திருடுவதற்காக என் வீட்டிற்குள் புகுந்து விடுவானோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது"என்று ராமநாதன் செல்வத்திடம் கேட்டுக் கொண்டார். பன்னீர்


"தாங்கள் கொஞ்சமும் கவலைப் படாதீர்கள். நான் கவனித்துக் கொள்கிறேன். அந்த முனுசாமி அவனை கொஞ்சம் வாலாட்டினாலும் அடித்து துவைத்து விடுகிறேன்"என்று பன்னீர் செல்வம் தைரியம் கூறினான்.


பன்னீர் செல்வம் சொன்னதைக் கேட்ட ராமநாதனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஆனால், உண்மையில் பன்னீர் செல்வம் இதனை முழு மனதுடன் சொல்லவில்லை. ராமநாதன் மீது பன்னீர் செல்வத்துக்கு தனிப்பட்ட விதத்தில் கோபம் இருந்தது. அந்தக் கோபத்திற்குக் காரணம் உண்டு.


ஒரு முறை பன்னீர் செல்வம் கடையைச் சற்று பெரிது படுத்துவதற்காக ராமநாதனிடம் கொஞ்சம் பணம் கடனாகக் கேட்டிருந்தான்.


ஆனால் ராமனாதனோ, ஏதாவது விலை உயர்ந்த பொருளை அடமானமாக வைத்தால் ஒழிய பணம் கொடுக்க முடியாது என்று ஒரே அடியாக மறுத்துவிட்டான். எனினும், பன்னீர் செல்வம் கேட்கும் போதெல்லாம் ஐந்தோ, பத்தோ கடனாகக் கொடுப்பான் ராமநாதன். அந்த வகையில் பன்னீர் செல்வத்துக்கு ராமநாதனின் நட்பு தேவைப்பட்டது. அவ்வளவு தான்.


நாள் தோறும் ராமநாதனும், பன்னீர் செல்வமும் முனுசாமி பற்றிக் கதை கதையாக பேசிக் கொள்வார்கள்.


முனுசாமி அங்கே திருடினான். இங்கே வழிப் பறி செய்தான். காவலர்களிடம் மாட்டிக் கொண்டு என்றெல்லாம் பேசுவார்கள். நன்றாக மிகவும் உதைபட்டான் சுவையாகப்


ஆனால் அவர்களது பேச்சுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எல்லாமே ராமநாதன் மற்றும் பன்னீர் செல்வம் ஆகிய இந்த இருவரின் கற்பனையே.


ஒரு நாள் ராமநாதன் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தான்.


நடு இரவு நேரம். யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு எழுந்தான். அவன் சற்று சுதரிப்பதர்க்குள் கதவு பலமாகத் தட்டப்படும் ஓசை கேட்டது.


சிலசமயம் அவசரமாக பணத்தேவை இருப்பின் சிலர் இம்மாதிரி இரவு நேரத்தில் கதவைத் தட்டி ராமநாதனை எழுப்பி கடனாகப் பணம் வாங்கிச் செல்வது வழக்கம்.


அப்படித் தான் யாரோ வந்திருக்கக் கூடும் என்று எண்ணி எழுந்து போய் கதவைத் திறந்தான் ராமநாதன்.


அக்கணம் தீடீரென யாரோ ஒருவன் உள்ளே புகுந்தான். கதவை உட்புறம் தாளிட்டு விட்டு ராமநாதனை நோக்கித் திரும்பினான்.


அந்த மர்ம மனிதன் தனது உடல் முழுவதையும் நன்கு மறைத்துக் கொண்டு இருந்தான். அவனது கைகளில் ஒரு கூர்மையான கத்தி பளபளத்தது.


அந்த மர்ம மனிதன் தனது கட்டைக் குரலில், "மரியாதையாக உன்னிடம் இருக்கும் பணம் முழுவதையும் கொடுத்து விடு. ஏதாவது சத்தம் போட்டால் உன்னைக் கொன்று விடுவேன்"என்று ராமநாதனைப் பார்த்து மிரட்டினான்.


மர்ம மனிதனின் வார்த்தைகளைக் கேட்ட ராமநாதனின் உடல் கிடுகிடுவென நடுங்கத் தொடங்கியது.


"நீ...நீ..முனுசாமி தானே!"என பதற்றத்துடன் கேட்டான் ராமநாதன்.


"ஆமாம்"என்ற படி அந்த மர்ம மனிதன் குரல் கொடுத்தான். பிறகு மீண்டும் ராமநாதனை பணம் கேட்டு மிரட்டினான்.


"முனுசாமி உனக்கு ஐந்தோ பத்தோ தந்து விடுகிறேன் என்னை எதுவும் செய்து விடாதே"என்று கெஞ்சினான் ராமநாதன்.


ஆனால் அந்த மர்ம மனிதன் விடுவதாக இல்லை.


"உன்னிடம் இருக்கும் அத்தனை கோடியையும் என்னிடம் கொடுத்து விடு"என்று அதட்டினான்.


ராமநாதன் வேறு வழி தெரியாமல் சென்று இரும்புப் பெட்டியைத் திறந்து பணத்தை எடுக்க முற்பட்டான்.


அப்போது ஒரு அதிசயம் நடைபெற்றது.


வாசல் கதவை யாரோ பலமாக இடித்தார்கள்.


இரண்டே இடி தான் அந்தக் கதவு திறந்து விட்டது. பிறகு தீடீரென ஒருவன் கையில் கத்தியுடன் ராமநாதனை மிரட்டிக் கொண்டு இருந்த அந்த மர்ம மனிதன் மீது பாய்ந்தான். அப்போது அந்த மர்ம மனிதனின் கைகளில் இருந்த கத்தி சிதறி ஓடியது.


அப்போது கைக்குக் கிடைத்த ஒரு கயிற்றைக் கொண்டு மர்ம மனிதனை புதிதாக வந்த மனிதன் கட்டிப் போட்டு விட்டான்.


அப்போது ராமநாதன் பரபரப்புடன் எழுந்து விளக்கை பொருத்தினான். அந்த விளக்கு ஒளியில் முனுசாமி பெருமூச்சு வாங்க நின்று கொண்டு இருப்பது புலப்பட்டது.


பிரமிப்பு அடைந்தவனாக ராமநாதன் ஓடிச் சென்று கட்டுண்டு கிடக்கும் மர்ம மனிதன் முகத்தை மூடியிருந்த துணியை அகற்றிப் பார்த்தான்.


என்ன ஆச்சர்யம்! அந்த மர்ம மனிதன் வேறு யாரும் இல்லை. அவன் தான் பன்னீர் செல்வம்.


பன்னீர் செல்வம் தான் திருட வந்த மர்ம மனிதன் என்பதை அறிந்த ராமநாதன் அவனை திட்டித் தீர்த்தான்.


அப்போதே முனுசாமி நல்லவன் என்பதையும் புரிந்து கொண்டு விட்டான் ராமநாதன். அதுவரை முனுசாமியை தவறாக நினைத்துப் பேசிய வார்த்தைகளுக்காக அவனிடமே மன்னிப்புக் கேட்டான் ராமநாதன்.


"முனுசாமி நீ மட்டும் எனக்கு உதவி செய்ய வில்லை என்றால் எனது நிலைமை என்னவாகி இருக்கும்!"என்று கண்ணீர் பெருக்கெடுக்க கேட்டான் ராமநாதன்.


அப்போது ராமநாதனை ஆறுதல் படுத்திய முனுசாமி, "ஐயா! நல்ல வேளை சத்தம் கேட்டு நான் இங்கு வந்தேன். இப்போது நான் நல்லவன் என்பதை தாங்களும் புரிந்து கொண்டு விட்டீர்கள். இது போதும் எனக்கு. இனி மேலாவது உருவத்தை வைத்து ஒருவரை தவறாக நினைக்காதீர்கள்"என்றான் முனுசாமி.


பிறகு விடிந்ததும் கொடிய எண்ணம் கொண்ட பன்னீர் செல்வம் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். காவலர்கள் அந்தக் கொடியவனை அடித்து நொறுக்கினார்கள். மறுபுறம் முனுசாமியும், ராமநாதனும் இந்த மேற்கண்ட சம்பவத்திற்குப் பிறகு நண்பர்கள் ஆனார்கள்.


நீதி : உருவத்தை வைத்து ஒருவரை தவறாக நினைக்கக் கூடாது. அதுபோல எப்போது பார்த்தாலும் ஆதாரம் இல்லாமல் ஒருவரை பழி சுமத்தவும் கூடாது, சந்தேகிக்கவும் கூடாது. சந்தேகம் என்பது கூட, உடன் பிறந்தே கொல்லும் வியாதி தான்.

கருத்துகள்