🌐 மொழியைத் தேர்ந்தெடுக்கவும் / Select Language
Connecting to the creator Best Articles Best Friends Best Topics Education Gaza People General articles Gold Haj Health tips Life Life With Allah Make dua Muslim life Muslim women Nice story Prayer Read quran Read ramalan Shoping Social Media Society The Holy Prophet Videos இது ஒரு நினைவூட்டல் இது சத்திய மார்க்கம்! இம்மை மறுமை இஸ்லாமிய ஒழுக்கங்கள் இஸ்லாமிய கட்டுரைகள் ☝ உண்மையான விசுவாசி உத்தம நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை கனவின் பலன் கருத்துள்ள கதைகள் சிந்தனை துளிகள் திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகள் துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு நல்லதோர் குடும்பம் நான் திருந்திட வேண்டும் பாடமும் படிப்பினையும் பாவமன்னிப்பு புண்ணியங்களின் பூங்காவனம் பெண்களுக்கான கட்டுரைகள் 👩 புறம் பேசலாமா ..? பொதுவான கட்டுரைகள் 📃📃 முன்மாதிரி முஸ்லிம் மார்க்க செய்திகள் மார்க்க கல்வி மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் விழிப்புணர்வு கட்டுரைகள் ஷஃபான் மாத சிறப்பு ஹிஜாப்-ஒரு விளக்கம் துஆக்கள் வாழ்க்கைக்கு தேவையான துஆக்கள்
Useful Islamic Sections & Site Guide

Posts

Loading...

பாவங்கில் மிகப் பெரியது எது என உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

 


பாவங்கில் மிகப் பெரியது எது என உங்களுக்கு அறிவிக்கட்டுமா?


மதிப்பிற்குரிய அஷ் ஷேய்க் அப்துல்லாஹ் பின் ஜபரைன் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப் பட்டது. "வாலிபர்களில் சிலர் தங்கள் பெற்றோரை நோவினை செய்தும், உரத்த தொனியில் அவர்களுடன் பேசியும், மரியாதை கொடுக்க மறந்தும் நடந்துக் கொள்கின்றனர். இவர்கள் தொடர்பாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? பெற்றோரை நோவினை செய்வது பெரும் பாவத்தை சேர்ந்ததா? நோவினை செய்பவர் தவ்பா செய்வது அவசியமா? தவ்பா செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்து தண்டனை கிடைக்குமா?"


இதற்கு அஷ் ஷெய்க் அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். " அல்லாஹ் பெற்றோரின் விடயத்தில் வஸிய்யத் செய்து, அவர்களின் உரிமைகளை தன்னுடைய உரிமையுடன் இணைத்துக் கூறியுள்ளான். (சூரா லுக்மான்)


அல்லாஹ் அவனது உரிமைகளை பற்றி முதலில் கூறி அதற்கு அடுத்ததாக பொற்றோருக் கு உபகாரம் செய்வதை கூறி யுள்ளான். அவர்கள் முதுமை எய்தி விட்டால் அவர்களை வெறுக்க வோ, வேதனைப் படுத்த வோ வேண்டாம்.


மாறாக அன்பு, பணிவு காட்டி மென்மையாக பேசவும். அத்தோடு அவர்கள் மீது அருள் செய்யும் படி அல்லாஹ் விடம் கேட்க வேண்டும் என்றும், சிறு வயதில் அவர்கள் செய்த உபகாரத் தை ஞாபகப்படுத் திக் கொள்ளும் படியும் கூறி யுள்ளான்.


ஒரு முறை றசூல் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "பாவங்களில் மிகப் பெரியது எது என உங்க ளுக்கு அறிவிக்கட்டுமா?" அதற்கு தோழர்கள் “ஆம்” என்றனர். றசூல் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரை நோவினை செய்வதும்” பதிலளித்தார்கள். என


பெற்றோரை பிறர் ஏசக் காரணமாவதை விளக்கி "அது பெரும் பாவமாகவும்" என றசூல் (ஸல்) குறிப்பிட்டு கூறினார்கள். "ஒரு மனிதன் தன் பெற்றோரை ஏசுவது பெரும் பாவங்களை சேர்ந்ததாகும். மேலும் தன் பெற்றோரை லஃனத் செய்பவரை அல்லாஹ் லஃனத் செய்யட்டும்." என்று நபி (ஸல்) கூறினார்கள்.


அதற்கு சஹாபாக்கள், "எவ்வாறு ஒருவர் தன் பெற்றரை பிறர் ஏசக் காரணமாவார்?" எனக் கேட்டார்கள். அதற்கு, ஒருவர் மற்றவரின் தாயை அல்லது தந்தையை எசுவதனால் சம்பந்தப் பட்டவர்கள் இவரின் பெற்றோரை ஏசுவார்கள." என நபி (ஸல் ) அவர்கள் விளக்கினார்கள்.


பெற்றோரின் உரிமைகளையும், அவர்களுக்கு உபகாரம் செய்யும் முறைகளை தெரிந்திருப் பதும், அவர்களின் உரிமைகளை மென்மையாக கொடுப்பதும், பணிவுடன் நடந்துக் கொள்வதும், அவர்கள் கேட்கும்போது அவர்களின் தேவை களுக்கு விடையளிப்பதும், தன்னால் முடிந்த வரை அவர்களுக்கு உதவுவதும், உபகாரத்தின் போது ஏற்பட்ட பிழைகளுக்காக அல்லாஹ் விடம் தவ்பா செய்வதும், அவர்களின் திருப் பொருத்தத் தையும் மன்னிப்பையும்கேட்பதும் கடமை யாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்.


"அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்திலும் அவனது வெறுப்பு பெற்றோ ரின் வெறுப்பிலும் உண்டு.”

கருத்துரையிடுக

0 கருத்துகள்